விருதுநகர் அருகே பேருந்து – கார் மோதி விபத்து: 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் – தென்காசி சாலையில் கல்லூரி பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தனியார் கல்லூரி பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் உட்பட 3 பேர் பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 

உகாதிக்கு பின் 4 துணை முதல்வர்கள்?| Dinamalar

பெங்களூரு-உகாதி பண்டிகைக்கு பின் கர்நாடக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டால், நான்கு துணை முதல்வர்கள் பதவி உருவாக்கப்படும் வாய்ப்புள்ளது.கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்த போது கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயணா, லட்சுமண் சவதி துணை முதல்வர்களாக இருந்தனர். அரசியல் சூழ்நிலை மாறியதில், முதல்வர் மாற்றப்பட்டு, பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றார்.வரும் உகாதி பண்டிகையை தொடர்ந்து, ஏப்ரல் 8க்கு பின், அமைச்சரவை மாற்றியமைக்கும் வாய்ப்புள்ளது. பல முறை பதவிகளை அனுபவித்த சிலர், அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதன்படி மாற்றியமைந்தால், நான்கு துணை முதல்வர்கள் … Read more

மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன – பிரதமர் மோடி

கோலிக்கோடு, மலையாள முன்னணி நாளிதழ் ஒன்றின் நூற்றாண்டு விழாவை இணைய வழியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி வி.முரளீதரன் மற்றும் கேரள சுற்றுலாத்துறை மந்திரி பி.ஏ. முகமது ரியாஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறினார். மேலும் அவர், ஊடகங்களால் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நான் … Read more

அமெரிக்காவிடம் சிக்கிய சீனா.. ரஷ்ய போலவே சீனா மீது தடையா..?! சீனாவின் முடிவு என்ன..?!

ரஷ்யா – உக்ரைன் மீதான போரின் காரணமாக உலக நாடுகள் கிட்டத்தட்ட இரண்டாகப் பிரிந்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது. ஒருபக்கம் அமெரிக்கா மற்றும் அதன் நடப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்து இருக்கும் நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக சில சோவியத் நாடுகள் நிற்கிறது. இந்நிலையில் இந்தியாவைப் போல் சீனா உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் எவ்விதமான தடையும் விதிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் 4 நாட்கள் முன்பு ரஷ்யா சீனாவிடம் … Read more

மதுரை : 700 ஆண்டு பழைமையான ஐயனார் சிற்பம், நடுகல் கண்டுபிடிப்பு!

தொல்லியல் அடையாளங்களின் சுரங்கமான மதுரை மாவட்டத்தில் பல தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டும், அறியப்பட்டும் வரும் சூழலில், சமீபத்தில் பழைமையான ஐயனார் சிற்பமும் நடுகல்லும் கண்டறியப்பட்டுள்ளது, வில்லூர் பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. து.முனீஸ்வரன் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் அனந்தகுமரன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் மதுரை மாவட்டம் வில்லூர் அருகே சித்தூரில் இப்பகுதியை மேற்பரப்புக் கள ஆய்வு செய்தபோது கண்மாய்கரையில் பாதி புதைந்த … Read more

’இனி உன் தந்தை வீட்டுக்கு வரமாட்டாரு’! இளம்பெண் வாழ்வை புரட்டி போட்ட ஒரு தொலைபேசி அழைப்பு

இந்தியாவின் காதலியின் தந்தையை கொலை செய்துவிட்டு உன் அப்பா வீட்டிற்கு வர மாட்டார் என காதலியிடம் தகவல் சொன்ன இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை உல்லாஸ் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு குமார் ஷா (26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், பப்பு அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள காதலியின் தந்தை கமல்ஜீத் என்பவரை சந்தித்து பெண் கேட்டுள்ளார். ஆனால், கமல்ஜீத் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டை விட்டு … Read more

அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்…

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. முதல்நாள் அமர்வான இன்று தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடர் வரும் 24ந்தேதிவரை மட்டுமே நடைபெறுகிறது. இந்த நிலையில்,  இன்று … Read more

தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி வாய் திறக்காத வெற்று அறிக்கை- பட்ஜெட் குறித்து டிடிவி தினகரன் கருத்து

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேர்தலுக்கு முன்பு தி.மு.க.வினர் அளித்த வாக்குறுதிகள் பற்றியோ, மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலோ அறிவிப்புகள் இல்லாத வெற்று அறிக்கையாக தமிழக அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது.  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அரசின் கடன் சுமை மேலும் உயர்ந்து 6.5 லட்சம் கோடி அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. மேலும், வரும் நிதியாண்டு நெருக்கடி மிகுந்ததாக இருக்கும் என நிதியமைச்சர் அபாய … Read more

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் மேம்பாட்டிற்கும் உதவக்கூடிய சிறந்த நிதிநிலை அறிக்கை: காங். எம்.பி. திருநாவுக்கரசர் வரவேற்பு

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் மேம்பாட்டிற்கும் உதவக்கூடிய சிறந்த நிதிநிலை அறிக்கை என்று தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வரவேற்பு தெரிவித்துள்ளார். 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.   2022-23ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கலானது.