பீம் பாய் நடிகர் பிரவீன்குமார் சோப்தி காலமானார்| Dinamalar

சென்னை: மகாபாரத தொடரில் பீமனாக நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் பிரவீன் குமார் சோப்தி,74 நேற்று மாரடைப்பால் காலமானார். 1988 களில் ஞாயிறு காலை தூர்தர்ஷனில் ராமாயணம், மகாபாரதம் தொடர்கள் ஒளிபரப்பாயின. அக் காலகட்டத்தில், இந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இதில் மகாபாரத தொடரில் ‘பீமன்’ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் பிரவீன் குமார் சோப்தி 74, அந்த சீரியலுக்கு பின் 50 க்கும் மேற்பட்ட பல்வேறு மொழிபடங்களில் நடித்துள்ளார். தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘மைக்கேல் … Read more

ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா.. புதிய ஆதார் கார்டு பெறுவது எப்படி..?

இன்றைய நடைமுறை வாழ்க்கையில் வருமான வரி, வங்கி சேவை, இன்சூரன்ஸ் சேவையில் இருந்து சிலிண்டர் வாங்குவது வரையில் அனைத்திற்கும் ஆதார் கார்டு மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. இதனால் ஆதார் கார்டு இல்லாமல் தனிநபரை உறுதி செய்யும் எந்தச் சேவைகளையும் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் உங்கள் ஆதார் கார்டை தொலைத்துவிட்டால் பெரும் தலைவலி தான். அப்படி நீங்கள் எதிர்பாராத விதமாக ஆதார் கார்டை தொலைத்து விட்டால் திரும்பப் பெறுவது எப்படி என்பதைத் தான் இப்போது … Read more

போலியோ சொட்டு மருந்து முகாம் எப்போது? – மத்திய அரசு தகவல்!

உலகின் பல்வேறு நாடுகளிலும் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த போலியோ வைரஸை அளிக்க முடியாது. ஆனால், செயலிழக்கச் செய்து கட்டுப்படுத்த முடியும். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க போலியோ சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் போலியோவை ஒழிக்க ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, வருடம் இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 2014-ம் … Read more

டாஸ்மாக் கடைகள் பிப்ரவரி 17 முதல் 19 வரை மூடல்

சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. தமிழகம் எங்கும் வரும் 19 ஆம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.  ஏற்கனவே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு  இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி விட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குப் பதிவு நடைபெறும் நாட்களில் அசம்பாவிதத்தைத் … Read more

பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் பலி – ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தின் காமேக் செக்டாரில் நேற்று முன்தினம் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி நடந்தது.    இதற்கிடையே, பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உடல்கள் இன்று மீட்கப்பட்டது என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் … Read more

தமிழ்நாடு முழுவதும் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சி உள்ளது; மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சி உள்ளது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 11 ஆண்டுகள் கழித்து பாஜக தற்போது தனித்து களம் காண்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் மத்திய அரசின்  திட்டம் சென்று சேர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

14 வருடத்தில் இல்லாத மோசமான ஆரம்பம்.. வாங்கலாமா? விற்கலாமா? அட்டகாசமான பரிந்துரை..!

இதற்கிடையில் 2020 , 2021ம் ஆண்டின் பெரும்பகுதி முழுவதும் பெரியளவிலான ஏற்றத்தினைக் கண்டது. ஆனால் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அது அப்படியே தலைகீழாக உள்ளது. 2008ம் ஆண்டில் இருந்து பார்க்கப்போதும் நடப்பு ஆண்டில் மிக மோசமான தொடக்கத்தினைக் கண்டுள்ளது. இது சந்தையில் புராபிட் புக்கிங் காரணத்தினால் இருக்கலாம் என கூறப்படுகிறது. 2 சக்கர வாகன கடனுக்கு எது சிறந்தது.. எங்கு வட்டி குறைவு..! #banks #2wheelerloan நிஃப்டி ஐடி 11% சரிவு நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து … Read more

போதையில் தகராறு செய்த கணவன்; கொன்று புதைத்த மனைவி – 11 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கியது எப்படி?!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஜமீன் குளத்தூர் அடுத்த குஜராம்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் மனைவி ஜெயந்தி. கடந்த 2011-ம் ஆண்டு குணசேகரனைக் காணாததால் அவர் தங்கை லட்சுமி, அவரின் அண்ணியான ஜெயந்தியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ஜெயந்தி, அவர் கேரளாவிற்கு வேலைக்குச் சென்றிருப்பதாகக் சொல்லியிருக்கிறார். ஆனால், பத்து ஆண்டுகளாகியும் இதுவரையிலும் தன் அண்ணன் வரவில்லையே என்று லட்சுமி கேட்க மழுப்பலாக பதில் சொல்லியிருக்கிறார். அரியலூர் இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமி இரண்டு நாள்களுக்கு முன்பு ஆண்டிமடம் காவல் … Read more

ஹிஜாப்பிற்கு எதிராக மாணவிகளை காவித்துண்டு அணிய வற்புறுத்தல்! வெளியான பரபரப்பு காட்சிகள்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சில கல்லுரிகளில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து சில ஹிந்துத்துவா மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உடுப்பி மாநிலத்தில் வலதுசாரி கொள்கைகள் கொண்ட ஒரு குழு கண்டபூர் தாலுகாவில் உள்ள SV கல்லுரிக்கு செல்லும் மாணவிகளுக்கு காவிநிற துண்டை எடுத்துச்செல்ல வற்புறுத்தியும் அதை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தும் காட்சிகள் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. இது குறித்து அந்த தாலுகாவின் வலதுசாரி கொள்கைக்குழுவின் … Read more