பி எம் கேர்ஸ் நிதி : வசூல் ரூ.10,990 கோடி – செலவு  ரூ.3,976 கோடி

டில்லி கொரோனா நிவாரணத்துக்காக அமைக்கப்பட்ட பி எம் கேர்ஸ் நிதியில் ரூ.10,990 கோடி வசூலாகி அதில் ரூ.3,976 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காகப் பிரதமர் மோடி பி எம் கேர்ஸ் என்னும் நிதி அமைப்பைக் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.  இதற்குத் தொழிலதிபர்கள்,. பொதுமக்கள்,. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் எனப் பலரும் நன்கொடை அளித்தனர்.  . இந்த நிதியில் கடந்த 2021 ஆம் வருடம் மார்ச் 31 வரை … Read more

தமிழகத்தில் மேலும் 5,104 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 6,120 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 5,104 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1,18,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அரசு மருத்துவமனையில் 6 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் … Read more

படகுகளை ஏலம் விடுவதை தடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை: இலங்கையிடம் உள்ள தமிழக மீனவர்கள் படகுகளை ஏலம் விடுவதை தடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். படகுகள் விவகாரத்தில் பிரதமர் மோடி அவசரமாக தலையிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நொய்டா இரட்டை கோபுர கட்டடத்தை இடிக்க ஏற்பாடு| Dinamalar

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுரம் கட்டடம் உச்ச நீதிமன்றம் உத்தரப்படி இரு வாரங்களுக்குள் இடித்து தள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உ.பி.,யில் நொய்டா நகரில் ‘சூப்பர்டெக்’ என்ற நிறுவனம் 40 மாடி இரட்டை கோபுர குடியிருப்பை கட்டியுள்ளது. இரு கட்டடங்களில் 633 குடியிருப்புகளுக்கு சூப்பர்டெக் நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது. இந்நிலையில், வீட்டிற்கு முன்பணம் செலுத்தும் போது காட்டிய வரைபடத்திற்கும், கட்டடம் கட்டப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளதாக குடியிருப்போர் … Read more

விரைவில் வருகிறது ஜியோபுக்.. ஆகாஷ் அம்பானியின் புதிய திட்டம்..!

இந்திய டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ வன்பொருள் வர்த்தகத்தில் இறங்க வேண்டும் என்ற மிகமுக்கியமான திட்டத்துடன் கூகுள் உடன் இணைந்து சில மாதங்களுக்கு முன்பு மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஆப்பிளின் மேக்புக் போலவே ஜியோபுக் என்ற பெயரில் ரிலையன்ஸ் ஜியோ-வின் முதல் லேப்டாப்-ஐ திட்டமிட்டதற்கு முன்னதாகவே அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது ஆகாஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிர்வாகம். 3 நாளில் ரூ.6 … Read more

`சூரியன் பிரகாசிக்க பிரதமருக்கு மட்டும் மோசமான வானிலை..!' – ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் தாக்கு

ஒட்டுமொத்த தேசமும் உற்றுநோக்கும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7 -ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.‌ அதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் நடைபெறவிருந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்துப் பேசி வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவதாக இருந்தது. ஆனால் திடீரென, மோசமான வானிலை காரணமாகப் பிரதமர் மோடி பங்கேற்க … Read more

கனேடிய பெண்ணின் கார் சீட்டில் இருந்த மர்ம காலடித் தடங்கள்: பின்னர் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு பெண், தனது கார் சீட்டில் சேறு படிந்த காலடித்தடங்கள் இருப்பதைக் கவனித்துள்ளார். Bethany Coker என்ற அந்த பெண், யாரோ தனது கார் கதவைத் திறந்து இரவில் அங்கு தங்கியிருக்கிறார்கள் என்று எண்ணி, கார் சீட்டை சுத்தம் செய்திருக்கிறார். மூன்று நாட்களுக்குப் பிறகு, தனது கார் கண்ணாடியில் யாரோ மூச்சு விடுவதால் ஆவி படர்ந்திருப்பதைக் கவனித்த Bethany காரை சோதிக்க, காரின் பின் சீட் வழியாக, காரின் பின்பகுதியில் யாரோ மறைந்திருப்பதைக் … Read more

எரிபொருட்கள் விலை உயர்வு: சமையல் சிலிண்டர் விலையை அரசே நிர்ணயம் செய்கிறது! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: சமையல் சிலிண்டர் விலையை அரசே நிர்ணயம் செய்கிறது என மாநிலங்களவையில்  மத்தியஅரசு தகவல் தெரிவித்து உள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற மாநிலங்களை விவாதத்தின்போது சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது. சமையல் சிலிண்டர் விலை நிர்ணயம் சர்வதேச சந்தை மாற்றத்தால் மக்கள் பாதிக்காத வகையில், அரசே நிர்ணயம் செய்து வருவதாக தெரிவித்துள்ளது.  கடந்த  2018ம் ஆண்டு முதல் 2022 … Read more

பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோ… ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த … Read more

2014-2020ல் பணவீக்க விகிதம் 5%க்கும் குறைவாக உள்ளது : மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: 2014-2020ல் பணவீக்க விகிதம் 5%க்கும் குறைவாக உள்ளது என மக்களவையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். எதிர்க்கட்சிகள் பணவீக்கப் பிரச்சினையை இங்கு எழுப்பியுள்ளன, அவர்கள் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்போதே இந்த விஷயத்தை எழுப்பினால் நன்றாக இருந்து இருக்கும். கொரோன தொற்று காலத்திலும் எங்கள் அரசாங்கம் பணவீக்கத்தை சமாளிக்க முயற்சிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.