நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கம் பணி தொடங்கியது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கம் பணி தொடங்கியது. ஒரே சின்னத்தை 2 வேட்பாளர்கள் கேட்கும் போது குழுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்பை ஓவைசி ஏற்க வேண்டும்: அமித்ஷா| Dinamalar

புதுடில்லி: ஐதராபாத் முஸ்லிம் அமைப்பின் எம்பி ஓவைசி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் விளக்கம் அளித்தார். அமித்ஷா பேசியதாவது:எம்பி ஓவைசி நிகழ்ச்சிக்கு செல்லும் போது பயண விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. இதனால் உரிய பாதுகாப்பு அளிக்க இயலாமல் போனது. சம்பவம் நடந்த இடத்தில் 3 புல்லட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. எம்பி ஓவைசி பாதுகாப்பை நாங்கள் அதிகரிக்க முடிவு செய்தோம். ஆனால் அதனை … Read more

1100 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. சரிவுக்கு இதுதான் காரணம்..!

மும்பை பங்குச்சந்தை இன்று காலையில் வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் துவங்கினாலும் அடுத்தச் சில நிமிடத்தில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை அளிக்கத் துவங்கியுள்ளது. இன்றைய சரிவுக்குப் பல காரணங்கள் உள்ளது என்றால் மிகையில்லை. இன்றைய வர்த்தக சந்தையில் ஆட்டோ மற்றும் நிதியியல் சேவைத் துறை பங்குகள் அதிகளவில் சரிந்தது மட்டும் அல்லாமல் பிற துறைகளும் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது. இன்றைய சரிவுக்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்கச் சந்தை.. காளையா..கரடியா..குழப்பத்தில் முதலீட்டாளார்கள்.. சென்செக்ஸ்,நிஃப்டி நிலவரம் என்ன..! … Read more

How to: உடல் எடையைக் குறைப்பது எப்படி? | How to reduce weight with lifestyle changes?

உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளால் ஏற்படும் பாதிப்பு என்பது உடையின் அளவை அதிகரிப்பதில் ஆரம்பித்து உடலில் உருவாகும் பல நோய்களுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. நாம் சாப்பிடும் உணவில் ஆரம்பித்து, வாழ்க்கை முறை மாற்றங்கள் வரை உடலில் கொழுப்பு சேர்வதற்கு பல காரணிகள் உள்ளன. பலரும் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், `என்ன செய்தாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது’ என்று சிலர் வெயிங் ஸ்கேலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தேவையற்ற கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் குறைக்கப் … Read more

காரில் தூங்கிக்கொண்டிருந்த நபர்: காரை சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஒன்ராறியோவில் தனது காரின் ஓட்டுநர் இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரை பொலிசார் எழுப்பி விசாரித்தபோது காருக்குள் அவர் போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ஒன்ராறியோவிலுள்ள Sault Ste. Marie நகரில், சாலையோரம் தனது காரை நிறுத்தி தூங்கிக்கொண்டிருந்த ஒருவரை எழுப்பிய பொலிசார், அவரிடம் விசாரித்துக்கொண்டிருக்கும்போது, அவருக்கு அருகிலுள்ள இருக்கையில் போதைப்பொருள் பொட்டலம் ஒன்று இருப்பதை கவனித்துள்ளனர்.   அந்த நபரது பெயர் Aaron Gridzak (39) என விசாரணையில் தெரியவந்தது. பொலிசார் அவரது காரை சோதனையிடும்போது, … Read more

தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் கொரோனா 3வது அலையில் உயிரிழப்பு குறைவு! ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் 3-ம் அலையில் உயிரிழப்பு குறைந்துள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா மூன்றாவது அலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தமிழகஅரசும் தளர்வுகளை வழங்கியதுடன், கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் வழக்கம்போல செயல்பட அனுமதி வழங்கியது. இதனால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை … Read more

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. நாடகம் ஆடுகிறது – அண்ணாமலை கடும் தாக்கு

வடவள்ளி: பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். கோவை வடவள்ளியை அடுத்த இடையர்பாளையம் பிரிவில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பா.ஜனதா கட்சிக்கு மிக, மிக முக்கியமானது. ஏனென்றால் நாம் இந்த முறை தனித்து களம் இறங்கியுள்ளோம். இதில் நம்முடைய முழு வலிமையையும் மற்றவர்களுக்கு காட்ட வேண்டும். தனித்து போட்டியிடுவதன் … Read more

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை கண்டித்து பிப்.11-ல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை கண்டித்து பிப்.11-ல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லதா மங்கேஷ்கருக்கு இரங்கல்; பார்லி.,யில் மவுன அஞ்சலி| Dinamalar

புதுடில்லி: மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு பார்லியின் இரு அவையிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, எம்.பி.,க்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஒரு மணி நேரத்துக்கு அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் நேற்று (பிப்.,6) காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், லதா மங்கேஷ்கர் … Read more

வட்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தில் RBI..!

இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தை பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவில் பிப்ரவரி 7ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாணய கொள்கை கூட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் இந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி தனது பணபுழக்க அளவீட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இதன் வாயிலாக இன்று மும்பை பங்குச்சந்தையும் … Read more