அ.தி.மு.க. வெற்றியை தடுக்க சதி- சேலையூரில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சேலையூரில் நடந்த பிரசார கூட்டத்தில் இன்று பங்கேற்று பேசினார். தமிழகத்தை நமது ஆட்சியில் தொழில்வளம் மிக்க மாநிலமாக மாற்றினோம். முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்கினார். அவரது வழியில் நான் 2019-ம் ஆண்டு தொழில் முனைவோர் மாநாட்டை நடத்தி ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் கோடி தொழில் … Read more

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க ஆணையிடப்பட்டுள்ளது. 2017 முதல் விசாரித்த சிபிஐயால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாறை இடுக்கில் சிக்கி தவித்த இளைஞர் பத்திரமாக மீட்பு| Dinamalar

பாலக்காடு: கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாறை இடுக்கில் சிக்கி தவித்து வந்த நிலையில், அவரை ராணுவ உதவியுடன் பத்திரமாக மீட்டனர். கேரள மாநிலம் பாலக்காடு மலம்புழா மலையில் ஏறிய பாபு என்ற 23 வயது இளைஞர் தனது மூன்று நண்பர்களுடன் குரும்பாச்சி மலைக்கு சென்றுள்ளார். மலையேற்றத்தின் போது நடுவழியில் கால் தவறியதில் பாபு உருண்டு விழுந்து, அதிர்ஷ்டவசமாக பாறை இடுக்கில் இருந்த சிறிய குகையில் சிக்கி கொண்டார். இதில் அவரது கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. அவரை … Read more

ஏர் இந்தியாவுக்கு பெயர் வைத்தது யார் தெரியுமா..?!

இந்திய வர்த்தக உலகில் எலக்ட்ரிக் வாகனம், கிரீன் எனர்ஜிக்கு அடுத்தபடியாக ஹாட் டாப்பிக்காக இருக்கும் ஒன்று ஏர் இந்தியா. டாடா ஒவ்வொரு செங்கல் ஆகக் கட்டி உருவாக்கிய ஏர் இந்தியா-வை மத்திய அரசிடம் இருந்து 69 வருடத்திற்குப் பின்பு திரும்ப பெற்றுள்ளது டாடா குழுமம். இந்தியாவில் தாராளமயமாக்கல்-க்கு முன்பும் நாட்டிலேயே மிகப்பெரிய பிராண்ட் வேல்யூவை கொண்ட நிறுவனமாக ஏர் இந்தியா விளங்கிய நிலையில், இந்த ஏர் இந்தியா என்னும் பெயரை வைத்தது யார் என்ற கேள்வி எழுந்த … Read more

“காங்கிரஸில் சேர, பிரசாந்த் கிஷோர் என்னை கிட்டதட்ட 60 முறை சந்தித்தார்!” – சொல்கிறார் சித்து

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவருக்கும், அப்போது முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. தற்போது அமரீந்தர் சிங் புதிய கட்சி துவங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்து, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறார். இந்த நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சன்னியை அறிவித்துள்ளார் ராகுல் காந்தி. ராகுல் – … Read more

உண்ண மறுத்து பட்டினி கிடந்தார்! லண்டனில் உயிரை மாய்த்து கொண்ட தமிழர்… வெளிவந்த அதிமுக்கிய தகவல்கள்

லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து குறித்த சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களே அதற்கு பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. Wormwood Scrubs சிறையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் திகதி Ketheeswaren Kunarathnam என்ற இலங்கை தமிழர் தனது உயிரை மாய்த்து கொண்டார். இறப்பதற்கு சில நாட்களாக உணவு உண்ண மறுத்து பட்டினியாக இருந்து வந்த அவர் தற்கொலை தொடர்பில் பேசி வந்ததாக … Read more

ஹிஜாப் பிரச்சினை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது! கமல்ஹாசன் எச்சரிக்கை

சென்னை: ஹிஜாப் பிரச்சினை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது; இது முற்போக்கு சக்திகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்” என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகா மாநில கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில்  இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு பள்ளி, கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இது சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதை கண்டித்து, இந்து மாணாக்கர்களும் போராட்டம் நடத்தினர். இதனால், அனைத்து பள்ளி, … Read more

கொலம்பியாவில் கனமழை- மண்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி

மேற்கு கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா என்ற பகுதியில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதால் 60க்கும் மேற்பட்ட வீடுகள் மண் சரிவில் அடித்து செல்லப்பட்டன. இதில் சிக்கி இதுவரை சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். மேலும், காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

கர்நாடக நிலைமை தமிழ்நாட்டுக்கும் வந்துவிட கூடாது : கமல் ஹாசன் எச்சரிக்கை!

சென்னை : மக்கள் நீதி மய்ய தலைவரும் , நடிகருமான கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது’ என்று பதிவிட்டுள்ளார்.

நுாறுநாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி

புதுச்சேரி : புதுச்சேரியில் நுாறு நாள் வேலைத் திட்டத்தை சரியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர், நுாறுநாள் வேலை திட்டம் எனப்படும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கேட்டுப் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 66 ஆயிரத்து 628 பேர் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்.இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இருப்பதால், அவர்களுக்கு 100 நாட்களுக்கு வேலை … Read more