நிதி நெருக்கடியிலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக பட்ஜெட்டை வரவேற்கும் கார்டூன் – ஆடியோ

தமிழகஅரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த நிலையில், அதை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில்  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதை வரவேற்கும் வகையில் கார்டூன் அமைந்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/03/PARI-Audio-2022-03-19-at-11.26.24-AM.ogg

இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300 கோடி- பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:- வேளாண்துறையின் மூலம் கொடுக்கப்படுகிற மானியங்கள், செயல்படுத்தப்படுகிற திட்டங்கள், அமைக்கப்படுகிற கட்டமைப்புகள், அளிக்கப்படுகிற தொழில்நுட்பம், பகரப்படுகிற பயிற்சி போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து உழவர்களை கைப்பிடித்து முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்கிற இந்த முயற்சியை ஊரக வளர்ச்சித் துறையும், வேளாண் துறையும் … Read more

ரூ.8 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரை

சென்னை: ரூ.8 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் 2வது முறையாக வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது உரையாற்றிய அவர், வேளாண் மையங்களில் பணமில்லா பரிவர்த்தனைக்கு வித்திடும் என குறிப்பிட்டார்.

இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி.. வேளாண் பட்ஜெட்டில் அசத்தலான அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான முழுப் பொதுப் பட்ஜெட்டை நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாதராஜன் தாக்கல் செய்த நிலையில் இன்று இரண்டாவது நாள் கூட்டத்தில் வேளாண் துறைக்கான தனிப் பட்ஜெட் அறிக்கையைத் தமிழ்நாடு உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார். வேளாண் துறைக்கான கடந்த ஆண்டு முதல் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட போது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று முழுப் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகா, ஆந்திரத்திற்கு அடுத்த 3ஆவது … Read more

IFFK: `வெல்கம் பேக் பாவனா'- கரகோஷம் அதிர மேடையில் தோன்றி சர்ப்ரைஸ்! | சிறப்புப் புகைப்படங்கள்

நடிகை பாவனா 5 வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் தன்னுடைய கம்பேக் மலையாளத் திரைப்படத்தை அறிவித்திருந்தார். அவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருந்தன. இப்போது கேரளாவில் தொடங்கியிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சர்ப்ரைஸ் கெஸ்ட்டாக வருகை தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். விழா மேடைக்கு அவர் வருவது அறிவிக்கப்பட்டவுடன் எழுந்த கரகோஷம் சில நிமிடங்களுக்கு நீடித்தது. கேரளா சர்வதேசத் திரைப்பட விழா திருவனந்தபுரத்தில் மார்ச் 18 தொடங்கியுள்ளது. 15 திரையரங்குகளில் 180க்கும் மேற்பட்ட உலகத் திரைப்படங்கள் … Read more

ரஷ்யாவை அவமானத்துக்குள்ளாக்கும் உக்ரைன்… பயந்து பதுங்கும் ரஷ்ய வீரர்கள்: வெளியாகியுள்ள வீடியோ ஆதாரம்

எட்டு ஆண்டுகளுக்கு முன் கிரீமியாவைப் பிடித்துக்கொண்டது போல, தெனாவட்டாக உக்ரைனுக்குள் நுழைந்து இப்போதும் எளிதாக அதைக் கைப்பற்றிவிடலாம் என கனவு கண்ட புடின் தப்புக்கணக்கு போட்டுவிட்டது போல் தெரிகிறது. அப்படியெல்லாம் எங்கள் நாட்டை எடுத்துக்கொள்ளமுடியாது, ஒரு அடி நிலம் கூட விட்டுத் தரமாட்டோம் என கெத்தாக எதிர்த்து நிற்கிறது உக்ரைன். போதாக்குறைக்கு கிடைத்த ரஷ்ய படையினரை எல்லாம் துவம்சம் செய்கிறார்கள் உக்ரைன் வீரர்கள். தன் பக்கம் இழப்பு இருப்பது உண்மைதான் என்றாலும், போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவதும், … Read more

10 புதிய உழவர் சந்தைகள் – 3காய்கறி வளாகம் – 3உணவு பூங்காக்கள், பனை விதைகள் – கருப்பட்டிக்கு மானியம்!

சென்னை: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில், புதிதாக 10 புதிய உழவர் சந்தைகள்  – 3 காய்கறி வளாகம் மற்றும்  பனைமரங்களை பாதுகாக்க 10லட்சம் விதைகள் வழங்கப்படும் என்றும், கருப்பட்டி தயாரிக்க மானியம் வழங்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ரூ.381 கோடியில் 3 உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டள்ளது. வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது, விவசாயிகளிடையே காய்கறிகள், பழங்கள், மலர் சாகுபடி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க மாற்றுப் பயிர் … Read more

சிறந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் பரிசு- பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்த நிலையில், இன்று எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:- இயற்கை வேளாண்மை பொருள் ஏற்றுமதி, புதிய உள்ளூர் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளை இந்த அரசு தொடர்ந்து ஊக்குவித்து பரிசுகள் அளித்தும் பாராட்டியும் மகிழும். காடுகள் மழையை ஈர்க்கும் இயற்கை காந்தங்கள். பூமியை குளிர்விக்கும் மரதக குட்டைகள். சாகுபடிகள் தமிழ்நாட்டில் வேளாண் … Read more

விவசாய துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: விவசாய துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஒருங்கிணைந்த பசுந்தீவன இயக்கம் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.