பீகார்: முடிவுக்கு வந்த முதல்வர் – சபாநாயகர் மோதல்! – நடந்தது என்ன?

பீகார் மாநிலத்தில் சபாநாயகர் விஜய் குமார் சின்காவின் சொந்தத் தொகுதியான லக்கிசராயில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் சபாநாயகருக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க-வை சேர்ந்த விஜயகுமார் சின்ஹா சபாநாயகராக பதவி வகிக்கிறார். பீகார் சட்டசபையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதிக்க தொடங்கிய போது சபாநாயகர், அந்த … Read more

கனடாவில் அதிரடியாக தரையிறக்கப்பட்ட ரஷ்யாவின் மிகப் பெரிய விமானம்

மிகப் பெரிய ரஷ்ய விமானம் ஒன்று ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதுடன் வெளியேறவும் காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பில் ரஷ்ய விமானங்களுக்கு கனடா அரசாங்கம் தடை விதித்தது. இந்த நிலையில், ரஷ்யாவின் Volga-Dnepr விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கடந்த பிப்ரவரி 27ம் திகதி ரொறன்ரோவில் அதிரடியாக தரையிறக்கப்பட்டது. ஏங்கரேஜ் மற்றும் ரஷ்யா வழியாக சீனாவில் இருந்து கனடா வந்த அந்த சரக்கு விமானமானது ரொறன்ரோவில் தரையிறங்கிய … Read more

மதுரை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

மதுரை: மேலூர் அருகே திருவாதவூரில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அர்ச்சுனன் (20), ஸ்ரீகாந்த் (21)  என்ற இளைஞர்கள் உயிரிழந்தனர். போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு 26ல் துணை சேர்மன் தேர்தல்| Dinamalar

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் நகராட்சி துணைச் சேர்மன் தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது.கடலுார் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் பதவி தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் கிரிஜா திருமாறன் போட்டியிட்டார். ஆனால் தி.மு.க., ஜெயந்தி ராதா கிருஷ்ணன் நகர செயலாளர் மணிவண்ணன் ஒத்துழைப்புடன் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் அன்று 10 மணி நேரத்திற்கு மேலாக வி.சி., கட்சியினர் மறியல் செய்தனர். அமைச்சர் கணேசன் துணை … Read more

உக்ரைன் படையெடுப்பு… புடின் அடுத்ததாக எடுக்கக்கூடிய நான்கு பகீர் நகர்வுகள்

உக்ரைன் மீதான படையெடுப்பு சரிவடைந்தால், அடுத்ததாக கொடூரமான தாக்குதலுக்கு விளாடிமிர் புடின் உத்தரவிடலாம் என இராணுவ வட்டாரத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் முடிவை எட்டாதது விளாடிமிர் புடினுக்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. இதனால் எதிர்வரும் நாட்களில் உக்ரைனில் இறப்பு என்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரித்தானியாவின் பாதுகாப்புப் புலனாய்வுத் தலைவர் Lt Gen Sir Jim Hockenhull அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். உக்ரைன் படையெடுப்பு இதுவரை சாதமான முடிவுக்கு … Read more

வரும் 25ந் தேதி உத்தர பிரதேச முதலமைச்சராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்

லக்னோ: இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 255 தொகுதிகளை கைப்பற்றியது.  இந்த வெற்றியின் மூலம் உத்தர பிரதேசத்தில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே கட்சி தொடர்ந்து இரண்டாது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.  இந்த நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சராக 2வது முறையாக வரும் 25ம் தேதி யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார்.  பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித் ஷா, … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,093,107 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60. 93 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,093,107 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 467,755,956 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 399,043,601 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 62,7809 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஷ்மீர் பைல்ஸ் படம் பார்க்கும் முஸ்லிம்கள்| Dinamalar

சாம்ராஜ்நகர்: ”அனைத்து முஸ்லிம்களும் கெட்டவர்கள் அல்ல. அது போல ஹிந்துக்கள் அனைவரும் நல்லவர்கள் அல்ல. காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை, முஸ்லிம்களும் பார்க்கின்றனர். ”வரலாற்றில் நடந்த சம்பவம், இனி நடக்கக்கூடாது என்ற நோக்கில், இத்திரைப்படம் வெளியானது,” என கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காஷ்மீருக்கு நான் பலமுறை சென்றுள்ளேன். எப்படி உள்ளது என்பது எனக்கு தெரியும். இதற்கு முன் நடந்த உண்மைகளை, மக்களுக்கு தெரிவிக்கும் நோக்கில், காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரைக்கு … Read more

ரஷ்ய குண்டுவீச்சில் பலியான உக்ரைன் பிரபலம்: கண்ணீரில் ரசிகர்கள்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற உக்ரேனிய நடனக் கலைஞர் ஒருவர் ரஷ்ய குண்டுவீச்சில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேனிய நடனக் கலைஞரான 43 வயது Artyom Datsishin என்பவரே, ரஷ்ய குண்டுவீச்சில் படுகாயமடைந்து, 3 வார சிகிச்சைக்கு பின்னர் மரணமடைந்துள்ளார். Artyom Datsishin சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் எனபதுடன், ரஷ்யாவின் Bolshoi அரங்கத்தில் குறிப்பிடத்தக்க கலைஞர்களில் இவரும் ஒருவர். உக்ரைன் மீது ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி இரண்டு நாட்களுக்குப் பிறகு தலைநகர் கீவில் Artyom … Read more