கோலியை அலட்சியம் செய்தாரா ரோஹித்? – இணையத்தில் வைரலாகும் வீடியோ

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் கோலியை கேப்டன் ரோஹித் சர்மா அலட்சியப்படுத்தியதாக சர்ச்சை வெடித்துள்ளது.  இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.    இப்போட்டியில் முதல்முறையாக இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்றார். கேப்டன் பதவி இல்லாமல் ரோஹித் ஷர்மா தலைமையில் விராட் கோலி … Read more

சென்னையைச் சேர்ந்த எனக்கு சிஎஸ்கே வில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பு  : தினேஷ் கார்த்திக்

சென்னை தாம் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும்  என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது . இந்த ஏலத்தில் மூத்த வீரர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள், கிளாசிக் பவுலர்கள், மாஸான ஆல் ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள், இளம் வீரர்கள் என பலர் இந்த ஏலத்தில் தங்கள் பெயரைப் … Read more

மீண்டும் நீட் விலக்கு மசோதா – இன்று தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம்

சென்னை: தமிழக சட்ட சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பிய நிலையில், அது குறித்து விவாதிக்க கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.  அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி நீட்விலக்கு மசோதாவை  நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது.இதன் அடிப்படையில்  8-ந்தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை … Read more

காஷ்மீரிகளுக்கு ஆதரவு பதிவு; மன்னிப்பு கோரியது கே.எப்.சி. இந்தியா

புதுடெல்லி, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த 1995ம் ஆண்டு முதன்முறையாக கே.எப்.சி. நிறுவனம் தனது உணவு விடுதி ஒன்றை திறந்து இந்திய வர்த்தகத்தில் நுழைந்தது. அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனம் யம்! பிராண்ட்ஸ்.  பீட்சா ஹட் மற்றும் டேக்கோ பெல் ஆகிய பிரபல பிராண்டுகளுக்கும் சொந்தக்காரராக உள்ள இந்நிறுவனத்தின் துணை நிறுவனமாக கே.எப்.சி. செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கே.எப்.சி. நிறுவனம் 450 மையங்களை இயக்கி வருகிறது.  இந்நிலையில், அந்நிறுவனத்தின் சமூக ஊடக கணக்கு ஒன்றில் காஷ்மீர், … Read more

இந்திய வீரரின் கை, கால்களை கட்டிப்போட்டு ஆஸ்திரேலிய வீரர் ரகளை – வெளியான புதிய உண்மை

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் அண்ட்ரூ சைமண்ட்ஸ் ரகளையான சம்பவம் குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.  இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான  யுஸ்வேந்திர சஹால் இந்தியா பங்குபெறும் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றியவர்களுடன் நேர்காணல் செய்து அந்த போட்டியின் இறுதியில் அதனை பிசிசிஐ  வெளியிடுவது வழக்கம்.  அந்த வகையில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கு பெரும் ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் ரகளையான சம்பவம் குறித்த தகவலை சைமண்ட்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.   அதாவது கடந்த 2014  ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் … Read more

விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமாருக்கு கொரோனா

சென்னை: விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் இரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது

உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது – மம்தா பானர்ஜி கணிப்பு

கொல்கத்தா: உத்தர பிரதேச சட்ட மன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சிக்கு திரினாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து அகிலேஷ் உடன் இணைந்து பிரச்சாரம் செய்ய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான  மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் லக்னோ சென்றுள்ளார். முன்னதாக கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மம்தா பேசியதாவது: உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சியை காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் ( காங்கிரஸ் ) வெற்றி பெற … Read more

தமிழகம்- கர்நாடகா இடையே உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணைக்கு அனுமதி: மத்திய அரசு

புதுடெல்லி காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு புதிதாக அணையைக் கட்ட முயல்கிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பலரும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று கர்நாடக மாநில எம்.பி  மேகாதாது அணைக்கு அனுமதி எப்போது என வழங்கப்படும் என்று  என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற  இணை … Read more

மலேசிய தமிழருக்கு மரண தண்டனை விதித்த சிங்கப்பூர்

போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மலேசிய தமிழருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மலேசிய தமிழரான 41 வயது கிஷோர்குமார் ராகவன், சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவர், கடந்த 2016-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் 900 கிராம் எடைகொண்ட மாவுப் பொருளை ஒரு பையில் எடுத்துச் சென்று, சிங்கப்பூரைச் சேர்ந்த புங் ஆகியாங் (61) என்பவரிடம் கொடுத்துள்ளார். இது குறித்த தகவல் சிங்கப்பூர் பொலிஸாருக்கு தெரியவரவே அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று புங் ஆகியாங்கிடம் இருந்த … Read more