பேருந்து மீது ஆயுதமேந்திய குழுவொன்று தாக்குதல்! புடினின் விடுத்த இரண்டு வகை கோரிக்கைகள்..

உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் தரப்பில், இரண்டு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, துருக்கி தெரிவித்துள்ளது.   புர்கினா பாசோவின் எல்லைக்கு அருகில் மேற்கு நைஜரில் பேருந்து மீது ஆயுதமேந்திய குழுவொன்று நடத்திய தாக்குதலில், இரண்டு பொலிஸார் உட்பட குறைந்தது 19பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   உக்ரைனிய படையினரின் இடைவிடாத எதிர்தாக்குதல் காரணமாக, ரஷ்யப் படைகளின் தாக்கும் திறன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. … Read more

நாளை சண்டிகரில் பஞ்சாப் அமைச்சரவை பதவி ஏற்பு

சண்டிகர் நாளை பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது. சமீபத்தில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் மாநிலமும் ஒன்றாகும்.   இதில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது.    ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி  பெற்றுள்ளது.  இதற்கு  முன்பும் இங்கு பாஜக ஆட்சி புரியவில்லை என்பதும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி … Read more

10 ரஷிய தூதர்களை வெளியேற்றுகிறது பல்கேரியா…. 72 மணி நேரம் கெடு

சோபியா: உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷியாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. தூதர்களையும் வெளியேற்றுகின்றன. இந்நிலையில், பல்கேரியாவில் உள்ள ரஷிய தூதரக அதிகாரிகள் 10 பேரை ஏற்றுக்கொள்ள முடியாத அதிகாரிகளாக பல்கேரிய அரசு அறிவித்துள்ளது. தூதரக அந்தஸ்துடன் ஒத்துப்போகாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறிய பல்கேரியா அரசு, அவர்களை 72 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு … Read more

இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

சென்னை: இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நிர்வாகமும், சட்டம் ஒழுங்கும் சரியாக இருந்தால் பொருளாதாரம் உயரும் என்பதுதான் உண்மை என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்ந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.

ஜேம்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட ரசிகர்கள்| Dinamalar

பெங்களூரு-மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று அவரது நடிப்பில் ஜேம்ஸ் படம் ரிலீசானது. தியேட்டர்களில் படத்தை பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கால் அழுதபடி வெளியே வந்தனர்.மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படமான ஜேம்ஸ் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு கர்நாடகா முழுவதும் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ரிலீசானது.இதனால் தியேட்டர்கள் அனைத்தும் திருவிழா கோலம் போல காட்சி அளித்தது. படம் பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கால் அழுதபடி பார்க்கும் … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி, தெற்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.   இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் ஆகிய 5 தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து தீவிரமாக பின்பற்ற வேண்டும். … Read more

ஈரானின் சூப்பர் ஆஃபர்.. இந்தியா பயன்படுத்திக் கொள்ளுமா?

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது, வரலாறு காணாத உச்சத்தினை எட்டியது. தற்போது வரையில் இவ்விரு நாடுகளுக்கான பிரச்சனையானது மிக மோசமாக நிலவி வரும் நிலையில், இதுவரையில் சுமூக நிலை ஏற்பட்டதாக தெரியவில்லை. இதற்கிடையில் ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை உள்பட பல்வேறு தடைகளை விதித்துள்ளன.. எல்ஐசி ஐபிஓ மே மாதத்திற்கு ஒத்திவைப்பு..? ரஷ்யா – உக்ரைன் போரால் மொத்த கதையும் மாறியது..! ரஷ்யா மீதான தடை குறிப்பாக … Read more

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஜெலன்ஸ்கி பெயர்; பரிந்துரைக்கக் கோரி ஐரோப்பியத் தலைவர்கள் கடிதம்!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் ஆக்கிரமிப்பு போரால் உலகமே உக்ரைன் எப்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும், உக்ரேனியர்களின் முகத்தில் மீண்டும் எப்போது புன்னகையைக் காணமுடியும் என்று எதிர்பார்த்துக் கிடக்கிறது. கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கிய போர் நான்காவது வாரத்தை எட்டிவிட்டது. போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் போர் தொடங்கிய நாள்முதல், ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போராடிக்கொண்டு, தங்கள் நாட்டு … Read more

இளவரசர் என் காதல் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார்: பாடகி ஒருவர் குற்றச்சாட்டு

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் எனது காதல் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார் என்கிறார் பிரபல பாடகி ஒருவர். இளவரசர் சார்லசின் 30 ஆவது பிறந்தநாளின்போது, அவருடன் ஆடிப்பாடினார் Sheila Ferguson. அப்போதே இருவருக்கும் இடையில் ஒரு நட்பு உருவாகிவிட்டதாம். இப்போதும் அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்களாம். ஆனால், Sheilaவுக்கு இளவரசர் சார்லஸ் மீது ஒரு கோபம். அவரால் தனது காதல் வாழ்க்கை நாசமாகிவிட்டது என்கிறார் Sheila. என்னை யாருமே காதலிக்கவில்லை என்று கூறும் Sheila, ஒரு முறை நடன விடுதி … Read more

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வாளர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய 25-ம் தேதி கடைசி நாள்…

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை எழுதிய தேர்வாளர்கள், தங்களது கல்வி சான்றிதழ்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் கால அவகாசம்  வரும் 25-ம் தேதி வரை  நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு  ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18 ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும், … Read more