தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி வாய் திறக்காத வெற்று அறிக்கை- பட்ஜெட் குறித்து டிடிவி தினகரன் கருத்து

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேர்தலுக்கு முன்பு தி.மு.க.வினர் அளித்த வாக்குறுதிகள் பற்றியோ, மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலோ அறிவிப்புகள் இல்லாத வெற்று அறிக்கையாக தமிழக அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது.  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அரசின் கடன் சுமை மேலும் உயர்ந்து 6.5 லட்சம் கோடி அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. மேலும், வரும் நிதியாண்டு நெருக்கடி மிகுந்ததாக இருக்கும் என நிதியமைச்சர் அபாய … Read more

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் மேம்பாட்டிற்கும் உதவக்கூடிய சிறந்த நிதிநிலை அறிக்கை: காங். எம்.பி. திருநாவுக்கரசர் வரவேற்பு

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் மேம்பாட்டிற்கும் உதவக்கூடிய சிறந்த நிதிநிலை அறிக்கை என்று தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வரவேற்பு தெரிவித்துள்ளார். 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.   2022-23ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கலானது.

சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட 214 பில்லியன் டாலர் கருப்புப் பணம்.. ரஷ்ய பணக்காரர்களுக்கு செக்..!

ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தாலும் ரஷ்யா மீது உலக நாடுகள் விதித்துள்ள தடைகள் ஒருபோதும் நீங்காது. இதனால் ரஷ்யா தொடர்ந்து தொடர்ந்து சர்வதேச சந்தையில் இருந்து ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டிய நிலையில் உருவாகியுள்ளது. வாரத்தில் 4 நாள் வேலை.. 3 நாட்கள் விடுமுறை.. ஏன்.. காரணத்த கேட்டா அசந்துருவீங்க..! இந்நிலையில் உலக நாடுகள் ரஷ்ய அரசு சொத்துக்களையும், ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களை வேக வேகமாகக் கைப்பற்றி வரும் நிலையில், தற்போது சுவிஸ் வங்கியில் … Read more

“போர் முடிவுக்கு வரும் வரை ரஷ்யா மீதான செலவினங்களை நாங்கள் அதிகரிப்போம்" – அமெரிக்கா எச்சரிக்கை

கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடங்கிய போரானது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. உக்ரைனில் நடத்திவரும் ஆக்கிரமிப்பு போரை உடனடியாக ரஷ்யா நிறுத்தவேண்டும் என்று கடந்த புதன்கிழமை சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை எதிர்த்த ரஷ்யா, “ஐ.நா நீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது” என நேற்று கூறியிருந்தது. இது ஒருபுறமிருக்க, சீனாவிடம் ரஷ்யா ராணுவ உதவியைக் கேட்டுவருவதாக அண்மையில் அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது. மேலும், சீனாவின் நடவடிக்கையை தாங்கள் … Read more

உக்ரைன் போரால் உருவாகியுள்ள எண்ணெய் பிரச்சினை… ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கத் திட்டமிட்டுள்ள பிரான்ஸ் அரசு

பிரான்சில் சொத்து வைத்திருப்பவர்கள், தங்கள் கட்டிடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு பாய்லர்களுக்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான மாற்றுத் திட்டங்களை மேற்கொள்ளும் நிலையில், அவர்களுக்கு 9,000 யூரோக்கள் வரை நிதியுதவி வழங்க அரசு முன்வந்துள்ளது. MaPrimeRenov என்று அழைக்கப்படும் திட்டத்தின் கீழ், பிரான்சில் வீடு வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் வரி எண், வரி செலுத்தியதற்கான ஆதாரங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டியிருக்கும். அத்துடன், நீங்கள் வீடு அல்லது சொத்து வாங்கி குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது ஆகியிருந்தால்தான் … Read more

தமிழ்நாட்டின் பொருளாதார நிலை? நிதியமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டில் விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதார நிலை எப்படி உள்ளது என்பது குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டில் விளக்கி உள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. திருக்குறள் உடன் அவையை தொடங்கி வைத்தார் சபாநாயகர். தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கை உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். … Read more

குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்- நிதிநிலை முன்னேற்றம் ஏற்படும்போது செயல்படுத்தப்படும்

சென்னை: பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறி இருப்பதாவது:- மகளிரின் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் என்ற கொள்கையின் அடிப்படையில், அவர்களின் நலனுக்காக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளான ஆவின் பால் விலை குறைப்பு, சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் போன்ற பல வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளார். அடுத்த முக்கிய வாக்குறுதியான மகளிருக்கான உரிமைத்தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். சென்ற ஆட்சியினர் … Read more

தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கல்விக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கல்விக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள், அரசு பள்ளிகளுக்கு மாறி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு ரூ.32,599 கோடியில் இருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் சரியான நடவடிக்கை என்றும் ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

அமேசானில் பொருட்களை வாங்கி வெடிகுண்டு தயாரித்தது அம்பலம்| Dinamalar

தட்சிண கன்னடா-மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில், 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர், அமேசான் இணையதளம் வாயிலாக பொருட்களை வாங்கி வீட்டிலேயே தயாரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையத்தில் 2020- ஜனவரி 20ல் டிக்கெட் கவுன்டர் அருகே ஒரு பை, நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது.அந்த பையை சோதனை செய்தபோது மூன்று வெடிகுண்டுகள் இருந்தன. அந்த வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்க வைத்தனர். இது தொடர்பாக உடுப்பி … Read more