சென்னை வெள்ளத்தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி- தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது.  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை  தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- அரசு நிலங்களில் நிலஅளவைப் பணிகள் துல்லியமாகவும் எளிதாகவும் மேற்கொள்ள, “தொடர்ந்து இயங்கும் தொடர்பு நிலையங்களின் அமைப்பு” வலுப்படுத்தப்படும். நவீன முறையில் நிலஅளவைப் பணிகளைமேற்கொள்ள நிலஅளவையர்களுக்கு “ரோவர்” கருவிகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 15 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. பரவலான சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் அரசு நிலங்களின் … Read more

வரும் 2022-23ம் நிதியாண்டில் வணிகவரிகள் மூலம் அரசுக்கு ரூ.1,06,765.22 கோடி வருவாய் கிடைக்கும்: நிதியமைச்சர் நம்பிக்கை

சென்னை: வரும் 2022-23ம் நிதியாண்டில் வணிகவரிகள் மூலம் அரசுக்கு ரூ.1,06,765.22 கோடி வருவாய் கிடைக்கும் என நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். மாநில எக்சைஸ் வரிகள் வாயிலாக, வரும் நிதியாண்டில் ரூ.10,589.12 கோடி வருமானம் கிடைக்கும். முத்திரைத்தாள், கட்டணம் வாயிலாக வரும் ஆண்டில் அரசுக்கு ரூ.16,322.73 கோடி வருமானம் வரும். மோட்டார் வாகன பதிவு கட்டணம் வாயிலாக வரும் நிதியாண்டில் ரூ.7,149.25 கோடி வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2024 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து அமைச்சர்கள் தேர்வு| Dinamalar

புதுடில்லி: வரும் 2024 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, சமீபத்தில் வெற்றி பெற்ற நான்கு மாநிலங்களில், அமைச்சர்கள் தேர்வை பா.ஜ., மிக கவனமுடன் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது முறை சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பஞ்சாபை தவிர, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில், பா.ஜ., மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த நான்கு மாநிலங்களில் அமைச்சர்களை தேர்வு செய்வது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், … Read more

திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மொபைல் தகவல் சென்டர்கள்.. எதற்காக..?

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்து வந்த நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டினை முதல் முறையாக திமுக அரசு தாக்கல் செய்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த வகையில் விவசாயம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழிற்துறை என பல முக்கிய துறைகளிலும் கவனம் செலுத்தும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் கம்பியூட்டர் வாங்கும் தமிழ்நாடு அரசு..! மொபைல் தகவல் … Read more

ரஷ்யாவின் தாக்குதலால் பலியான உக்ரைன் நடிகை பொதுமக்கள் அதிர்ச்சி!

உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில் ரஷ்யப் படைகள் உக்ரைன்மீது கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. இதனால் அங்கு இருக்கும் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் போரினால் பல மக்களும் குழந்தைகளும் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யப் படைகள் கீவ் நகரில் உள்ள மக்கள் குடியிருப்புகளில் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் 67 வயதான பிரபல உக்ரைன் நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் … Read more

இந்தியாவிலேயே முதன்முதலாக வானிலையை கணிக்க ரேடாரை நிறுவுகிறது தமிழகஅரசு! தமிழ்நாடு வெதர்மேன் வரவேற்பு…

சென்னை: இந்தியாவிலேயே முதன்முதலாக வானிலையை கணிக்க தமிழகஅரசு மாநில நிதிகளைக்கொண்டு ரேடார் உள்பட முன்னெச்சரிக்கை கருவிகளை நிறுவ உள்ளது. அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்து பட்ஜெட்டில் அறிவித்து உள்ளது. தமிழக அரசின் அறிவிப்புக்கு பிரபல வானியல் ஆய்வு நிபுணர் வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான் வரவேற்பு தெரிவித்து உள்ளார். மத்தியஅரசின் வானிலை ஆய்வு மைய குளறுபடி காரணமாக, தமிழ்நாடு வெள்ளம் மற்றும் புயலால் கடுமையான சேதங்களை எதிர்கொள்கிறது. இதற்கு வானிலை ஆய்வு மையத்தில் உள்ள ரேடார் உள்பட … Read more

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறும்

சென்னை : 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் இன்று தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நாளை வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது. இதை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்தொடரை 24-ம் தேதி … Read more

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு..!!

சென்னை: முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

கோவிட்; இந்தியாவில் மேலும் 2,528 பேர் பாதிப்பு, 3,997 பேர் நலம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,528 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,997 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,528 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,04,005 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 3,997 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,58,543 ஆனது. தற்போது 29,181 பேர் … Read more