இன்று முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் : மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் பிப்ரவரி 15 வரை 50 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்று மத்திய அரசு இதற்கு முன்பு அறிவித்திருந்தது.  இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், கொரோனா பெருந்தொற்று நிலைமையை ஆய்வு செய்த பின்னர், குறைந்து வரும் கொரோனா  தொற்று உறுதிப்படுத்தல் விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முழு அளவிலான பணியாளர்களோடு அலுவலகங்கள் இன்று முதல் … Read more

பிப்-07: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஒரே டோஸ் 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!!

புதுடெல்லி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஸ்புட்னிக்-லைட் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு  ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதார துறை மந்திரி  மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 9வது கொரோனா தடுப்பூசி ஆகும். முன்னதாக கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக ஸ்புட்னிக்-லைட் தடுப்பூசியை மத்திய அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வர அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இதன் … Read more

வார ராசிபலன்

இந்த வார ராசிபலன்: பிப்ரவரி 7 முதல் 13 வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் `ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி. மேஷ ராசி அன்பர்களே! பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய வாரம். கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களால் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை யும், குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையும் அவசியம். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, … Read more

ஜேர்மனியில் மிகப்பெரிய பாலத்தை வெடிக்கச்செய்து புதிய சாதனை! பிரமிக்கவைக்கும் காட்சி

ஜேர்மன் பொறியாளர்கள் 230 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய பெரிய பாலம் ஒன்றை வெடிக்கச் செய்து புதிய சாதனை படைத்தனர். நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள வில்ன்ஸ்டோர்ஃப் அருகே ஜேர்மனியின் A45 ஆட்டோபானில் உள்ள Rinsdorf பாலத்தை தான் பொறியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 6) வெடிக்கசெய்துள்ளனர். இந்த பாலம் 70 மீட்டர் உயரம் (230 அடி) மற்றும் 500 மீட்டர் (1,640 அடி) நீளம் கொண்டது. 55 ஆண்டுகள் பழமையான இந்த பாலம், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை … Read more

ஜிஹாப் எதிர்ப்பு : கர்நாடக அரசுக்குக் காங்கிரஸ் பெண் எம் எல் ஏ சவால்

பெங்களூரு கர்நாடக அரசுக்குத் தைரியம் இருந்தால் தாம் ஜிஹாப் அணிந்து சட்டப்பேரவை வருவதைத் தடுக்கட்டும் என காங்கிரஸ்  பெண் சட்டமன்ற உறுப்பினர் கூறி உள்ளார். கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி பகுதியில் உள்ள அரசுக் கல்லூரியில் ஜிஹாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.   இது கடும் சர்ச்சையாக மாறி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மாநில அரசு நல்லிணக்கத்தைச்  சீர்குலைக்கும் வகையில் ஆடைகள் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தடை விதித்தது. இது குறித்து மாநிலத்தில் போராட்டம் வெடித்துள்ளது.  … Read more

பஞ்சாப்பில் காங்கிரஸ் தலைவிதியை மாற்ற முடியாது : மத்திய மந்திரி உறுதி

சண்டிகர்: பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி தேர்தல் நடை பெறுகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியின் பெயரை நேற்று ராகுல்காந்தி அறிவித்தார். இதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. காங்கிரஸின் அறிவிப்பு குறித்து பதிலளித்துள்ள மத்திய மந்திரியும், பஞ்சாப் பாஜக பொறுப்பாளருமான கஜேந்திர சிங் ஷெகாவத், ஏற்கனவே அழிந்து விட்ட கட்சியின் தலைவிதியில் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறினார்.  இது குறித்து அவர் … Read more

விடைபெற்றார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்; மும்பையில் அரசு மரியாதையுடன் உடல் தகனம்| Dinamalar

மும்பை, பிப். 7-‘இசைக்குயில், இந்தியாவின் நைட்டிங்கேல்’ என, வர்ணிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், 92, உடல் நலக்குறைவால் மும்பையில் நேற்று காலமானார். மும்பையில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவையொட்டி இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கவும், நாடு முழுதும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விடவும் மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. லதா மங்கேஷ்கர் உடலுக்கு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். ‘இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் ஹிந்தி, மராத்தி, … Read more

மத்திய அரசு அலுவலகங்களில் 100 சதவிகித பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும்

புதுடெல்லி, கொரோனா 3வது அலை காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவிகிதம் பேர் மட்டும் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்றினால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளதால் மீண்டும் அனைத்து பணியாளர்களும் அலுவலகங்களுக்கு வந்து  பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதயம் நொறுங்கிவிட்டது.. லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இசைஞானியின் இரங்கல்

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்தார். ‘பாரத ரத்னா’ லதா மங்கேஸ்கர் சமீபத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு பிறகு அவர் தொற்றிலிருந்து மீண்டார். ஆனால், அவரது உடலுறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் மீண்டும் கவலைக்கிடமான நிலையில் சனிக்கிழமையன்று மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு பல்வேறு … Read more