கொரோனாவுக்கு உலக அளவில் 6,065,620 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60.65 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,065,620 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 458,150,914 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 391,399,195 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,481 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாவணகரேவில் லோக் அதாலத் ஒரே நாளில் ஒன்றிணைந்த 10 தம்பதியர்| Dinamalar

தாவணகரே : தாவணகரேவில் நடந்த லோக் அதாலத்தில், விவாகரத்துக்கு விண்ணப்பித்த வழக்குகளில் ஒரே நாளில் பத்து தம்பதியர் ஒன்றிணைந்தனர்.தாவணகரே மாவட்ட சிட்டி சிவில் நீதிமன்றத்தில், நீதிபதி ராஜேஸ்வரி தலைமையில் லோக் அதாலத் நடந்தது.ஒரே நாளில், 15 ஆயிரத்து 918 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், 7,362 வழக்குகளுக்கு உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டன. பொருளாதாரம், குடும்ப நலன், குற்றவியல் உட்பட அனைத்து நீதிமன்ற வழக்குகளும் அடங்கும்.இதில், சமாதான பேச்சு நடத்தி 30 குற்ற வழக்குகளும்; 65 காசோலை பவுன்ஸ் வழக்குகளில் … Read more

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்- இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது

பாராளுமன்ற  பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம்  31ல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உரையுடன் துவங்கியது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 11ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 8ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக முதல் கட்ட கூட்டத் தொடரில், காலையில் … Read more

வாடகை செலுத்தவும் பணமில்லை: பிரித்தானியாவில் சிக்கிக்கொண்ட ரஷ்ய கோடீஸ்வரர்

உக்ரைன் போரினால் ரஷ்ய கோடீஸ்வரர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரித்தானியாவில் உள்ள செல்சி அணி உரிமையாளர் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார். உக்ரைன் போரினை அடுத்து ரஷ்யா மற்றும் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள் மீது பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடுமையான தடைகளை விதித்து வருகிறது. பல ரஷ்ய கோடீஸ்வரர்கள் இந்த பொருளாதாரத் தடைகளில் சிக்கியுள்ளனர். அந்த வகையில் ரஷ்ய கோடீஸ்வரரும் செல்சி அணியின் உரிமையாளருமான ரோமன் அப்ரமோவிக் வாடகை செலுத்தவும் பணம் … Read more

முதல்வர் வேட்பாளரை அறிவியுங்கள்:| Dinamalar

பெங்களூரு : ”கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தாமையா ஒன்றாக சேர்ந்து, அடுத்த தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா,” என காங்கிரசுக்கு, பா.ஜ., சவால் விடுத்துள்ளது.அறிக்கையில் பா.ஜ., நேற்று கூறியதாவது:’நாங்கள் ஏற்கனவே தேர்தலுக்கு தயார்’ என சித்தராமையா கூறியுள்ளார். ‘காந்தி குடும்பம் இல்லாமல், காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்க முடியாது,’ என சிவகுமார் கூறியுள்ளார். அப்படியென்றால், சித்தராமையாவும், சிவகுமாரும் சேர்ந்து முதல்வர் வேட்பாளரை அறிவிக்கட்டும் பார்க்கலாம்.ஐந்து மாநில தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தாலும், … Read more

கனேடிய பிரதான சாலையில் துயரம்: அடையாளம் காணப்பட்ட இந்திய இளைஞர்கள்

கனடாவின் பிரதான சாலை 401ல் ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி மரணமடைந்த ஐவரை ஒன்ராறியோ பொலிசார் அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை அதிகாலையில் பெல்வில் மற்றும் ட்ரெண்டன் இடையே பிரதான சாலை 401ல் குறித்த கோர விபத்து நடந்துள்ளது. Aikins சாலை மற்றும் Saint Hilaire சாலைக்கு இடையிலான பிரதான சாலையில் அதிகாலை 3:45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. டிராக்டர்-டிரெய்லர் ஒன்று பயணிகள் வேன் ஆகியவை நேருக்கு நேர் … Read more

ரிஷப் பண்ட்டின் அதிரடி பேட்டிங் இந்திய அணிக்கு சாதகமாக அமையும்- பும்ரா கருத்து

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி இரண்டாம் இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி இலங்கை அணிக்கு 447 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி  இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.  இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக ஆடிய இந்திய … Read more

ரூ 10 கோடி டைனிங் டேபிள் பயன்படுத்தினாரா வி.ஐ.பி.,| Dinamalar

புதுடில்லி-தன் வீட்டில், 10 கோடி ரூபாய் மதிப்பு உள்ள ‘டைனிங் டேபிள்’ பயன்படுத்திய தாக எழுந்துள்ள குற்றச் சாட்டை, ‘பாரத்பே’ நிறுவனத்தின் இணை நிறுவனர் அஷ்னீர் குரோவர் மறுத்துள்ளார் .’ஆன்லைன்’ பண பரிவர்த்தனை நிறுவனமான பாரத்பே நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்டதாக, அதன் இணை நிறுவனர் அஷ்னீர் குரோவரின் மனைவி மாதுரி ஜெயின் குரோவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவரது பங்குகள் முடக்கப்பட்டு உள்ளன.இதையடுத்து, நிறுவனத்தில் இருந்து அஷ்னீர் குரோவர் வெளியேறினார். இந்நிலையில், அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும், 10 … Read more

ஒரே நாளில்… சரணடைந்த துருப்புகள் தொடர்பில் ஜெலென்ஸ்கி வெளியிட்ட தகவல்

ஒரே நாளில் 500 முதல் 600 ரஷ்ய துருப்புக்கள் சரணடைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு 17 நாட்களை கடந்துள்ள நிலையில், விளாடிமிர் புடினின் படைகள் மன உறுதி இழந்துள்ளதாகவே கருதப்படுகிறது, பலர் உணவு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, பல குழுக்கள் போரிடாமல், வெறுமனே சுற்றித்திரிவதாகவும், பலருக்கு தாங்கள் அப்பாவி மக்களை கொல்லத்தான் அனுப்பப்பட்டோமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, ரஷ்யாவை அவமானப்படுத்தும் வகையில், … Read more

டீக்கடை மாணவிக்கு குவிந்தது நிதி உதவி| Dinamalar

கொச்சி-கேரளாவில், சாலையோரம் டீக்கடை நடத்துபவரின் மகள் மருத்துவக் கல்லுாரியில் சேர பணமின்றி தவித்தார். அவருக்கு ஏராளமானோர் உதவி செய்துள்ளனர். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.கொச்சியை சேர்ந்த ஜாசன், வேன் டிரைவராக பணியாற்றினார். இவரது முதுகு தண்டுவடம் 2019ல் பாதிக்கப்பட்டது. இதனால் வேன் ஓட்ட முடியவில்லை. குடும்ப வருமானத்திற்காக, இவரது மனைவி பிந்து ஆட்டோ ஓட்டினார். ஜாசனின் மூத்த மகன் சாமுவேல் ஹோட்டல் நிர்வாகமும், … Read more