உக்ரைனுக்கான இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம்

உக்ரைன்: உக்ரைனுக்கான இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம் செய்யப்படுவதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. உக்ரைனில் பாதுகாப்பு நிலைமை மிக மோசமடையும் நிலையில் நாட்டின் மேற்குப் பகுதிகளில் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் நாள்தோறும் தீவிரம் அடைந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பல முக்கிய கட்டிடங்கள் உருகுலைந்தன. … Read more

ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி… நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர்

மும்பை: மும்பையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை, ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி உள்ளார்.  மும்பை வடாலா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பயணிகள் ரெயில் சற்று வேகமெடுத்தபோது, ஒரு பயணி ஓடிச் சென்று ஏறினார். ஆனால், அவர் திடீரென தடுமாறி பிளாட்பாரத்தில் விழுந்தார்.  அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர், நொடிப்பொழுதில் ஓடிச் சென்று அந்த பயணியை வெளியே இழுத்தார். இதனால் … Read more

சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நிறைவு

டெல்லி: சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. 2.30 மணி நேரமாக நடைபெற்ற கூட்டத்தில் 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடைபெற்றது.

800 மாணவர்களை மீட்டு வந்த 24 வயது பெண் பைலட்: குவிகிறது பாராட்டு| Dinamalar

கோல்கட்டா: போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கி தவித்த 800 மாணவர்களை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் 6 விமானங்களை இயக்கி மீட்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார் 24 வயதே ஆன பெண் பைலட் மகாஸ்வேதா சக்ரவர்த்தி. அவரது பணியை சமூக ஊடகங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் அங்கு மருத்துவம் படிக்கச் சென்றவர்கள், பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களை போலந்து, ஹங்கேரி ஆகிய உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு வரவழைத்து இந்தியா மீட்கிறது. … Read more

“பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்!" – பிரதமர் மோடி

உக்ரைனில் நடந்து வரும் போர் பின்னணியில் நிலவும் உலகளாவிய சூழ்நிலை மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை குறித்து விவாதிப்பதற்கான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் மூன்று தலைவர்கள் உட்பட முக்கிய அரசு அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்குபெற்றனர். மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இதில் பேசிய … Read more

மற்றொரு உக்ரைன் மேயரை கடத்திச் சென்ற ரஷ்யா!

உக்ரைனின் தெற்கு நகரமான Dniprorudne நகரின் மேயரை ரஷ்யப் படைகள் கடத்திச் சென்றதாக வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா அந்நாட்டின் தலைநகர் கீவ் நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. மெலிடோபோல் என்ற நகரைக் கைப்பற்றிய ரஷ்யா, நேற்று அந்நகரின் மேயர் இவா ஃபெடரோவை கடத்திச் சென்றது. இந்நிலையில் இன்று Dniprorudne நகரின் மேயர் Yevhen Matveyev-வை ரஷ்ய படைகள் கடத்திச் சென்றுள்ளனர். Yevhen Matveyev கடத்தப்பட்டதை உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் … Read more

ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராகவும், வருங்கால பிரதமராகவும் வரவேண்டும் – செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

புதுடெல்லி: ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணாணவை அல்ல. வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே. ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராக வரவேண்டும். வருங்கால பிரதமராகவும் வரவேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். டெல்லியில் காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என ராஜஸ்தான் … Read more

பா.சிவந்தி ஆதித்தனாரின் கனவை நனவாக்க சாதி, மத பேதமின்றி செயல்பட வேண்டும்- பா.ஆதவன் ஆதித்தன் பேச்சு

தாம்வரம் வரதராஜபுரம் தெட்சணமாற நாடார் சங்க மஹால் திறப்புவிழாவில் தந்தி தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- எனது அண்ணன் சிவந்தி ஆதித்தனார், அப்பா சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனார் இருவரும் இந்த விழாவுக்கு வருவதற்கு மிகவும் விருப்பப்பட்டார்கள். ஆனால் அவர்கள் சார்பில் நான் இங்கு வந்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தினத்தந்தி குடும்பத்தில் இருந்து இங்கு வந்திருப்பதை நான் முக்கியமாக கருதுகிறேன். ரொம்ப … Read more

கீல்பவானி வாய்க்காலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

ஈரோடு: கூடக்கரை கீல்பவானி வாய்க்காலில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். கீல்பவானி வாய்க்காலில் குளித்தபோது திருப்பூரை சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தங்கத்திற்கு சூப்பர் தள்ளுபடி.. 6 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்.. ஜாக்பாட் தான்!

தங்கம் விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது, ஓட்டுமொத்த நோக்கில் அதிகரித்தே காணப்படுகிறது. இது அவ்வப்போது சரிவினைக் கண்டு இருந்தாலும், மொத்தத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 15% மேலாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் ஆபரணத் தங்கத்தின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. இது பணவீக்கமானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக, தங்கத்தின் தேவையானது மோசமான சரிவினைக் கண்டிருந்தது. … Read more