உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் 35 பேர் உயிரிழப்பு

கீவ்: உக்ரைனில் லிவிவ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீசியதில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளதாக லிவிவ் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் கையிருப்பில் 17.42 கோடி டோஸ் தடுப்பூசிகள் – மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி, மாநிலங்கள் கையிருப்பில் 17.42 கோடி டோஸ் தடுப்பூசிகள் மீதமுள்ளன என்று  மத்திய குடும்பநல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 17 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 896 டோஸ் தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் மீதமுள்ளன. இதுவரை 182 கோடியே 65 லட்சத்து 14 ஆயிரத்து 930 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மத்திய … Read more

டாடாவின் அதிரடி திட்டம்.. உக்ரைன் – ரஷ்யா பிரச்சனையால் திணறும் உலோகத் துறை..!

ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு மத்தியில் ரஷ்ய சப்ளையர்கள் மற்றும் வங்கியாளர்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால் அங்கு நிச்சயமற்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் சப்ளை சங்கிலியில் தொடர்ந்து தாக்கம் இருந்து வருகின்றது. இதற்கிடையில் ரஷ்யாவில் இருந்து நிலக்கரியினை இறக்குமதி செய்து வரும் டாடா நிறுவனம், தற்போது மாற்று சந்தையினை எதிர்பார்க்கிறது. இரும்பு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நிலக்கரியின் தேவையானது ஏற்கனவே கடும் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில், பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டது. இது … Read more

கொடைக்கானல் காட்டுத்தீ பரவல்: கோடை வெப்பமா? மனிதர்களின் அத்துமீறலா? வனத்துறை விசாரணை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதிகள் கோடை வெப்பத்தின் காரணமாக வனத்தில் கடந்த ஒரு வாரமாக காட்டுத்தீ பரவி வருகிறது. கொடைக்கானல் பெருமாள்மலை, மச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ பரவல் அதிகமாக உள்ளது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயால் தோகைவரை, மச்சூர், பெருமாள்ம‌லை உள்ளிட்ட பகுதிகளும், பழநி அடிவாரப் பகுதியான கலையமுத்தூர், வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைச்சாலையும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. தீயணைக்கும் பணி உலகம் முழுக்கப் பற்றியெறியும் … Read more

நேட்டோ பிரதேசத்திற்கு அருகிலுள்ள ராணுவ தளம் மீது ரஷ்ய சரமாரி ஏவுகணை தாக்குதல்! பரபரப்பு வீடியோ

நேட்டோ எல்லையில் இருந்து 15 மைல் தொலைவில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷ்யா பயங்கர வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. போலந்து எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் லிவிவ் என்ற இடத்தில் ரஷ்ய நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 57 பேர் காயமடைந்துள்ளனர். லிவிவ் நகரில் உள்ள Yavoriv ராணுவ தளம் மீது ரஷ்யா 30 ராக்கெட்டுகளை வீசியதாக உள்ளூர் கவர்னர் தெரிவித்துள்ளார். உக்ரேனியர்கள் மட்டுமின்றி, Yavoriv ராணுவ தளத்தில் வெளிநாட்டு ராணுவ … Read more

கோவைக்கு மோடி அரசு ஏதாவது செய்துள்ளதா? கோவை எம்.பி. கேள்வி

கோவை: கோவைக்கு பிரதமர் ஏதாவது செய்துள்ளாரா? கோவை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். கோவை எம்.பி., நடராஜன் தனது சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். பினனர் வானதி சீனிவாசனுக்கு கோவை எம்.பி., நடராஜன் சவால் விடுத்துள்ள சவாலில், கோவைக்கு இதுவரை பிரதமர் மோடி அரசு செய்த ஒரு நல்ல விஷயத்தை செல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆதரவற்ற சிறுமிகளை குறி வைத்து காதல் வலைவீசும் வாலிபர்கள்

தகவல் தொடர்புகள் அதிகரித்துள்ள இந்த காலத்தில் செல்போன்கள் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை. குழந்தைகள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்த கூடாது. இதன் மூலம் அவர்களது நினைவு திறன் பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில் கொரோனா வந்தது. இதனால் குழந்தைகளின் உலகமே செல்போன் என்கிற தவிர்க்க முடியாதாகவே மாறிப்போனது. வீட்டில் இருந்த செல்போன்களை எப்போதாவது குழந்தைகளிடம் விளையாடுவதற்கு கொடுத்து வந்த பெற்றோர் முழு நேரமும் செல்போனை அவர்களிடமே கொடுக்க வேண்டிய கட்டாயத்தை கொரோனா வைரஸ் … Read more

உக்ரைனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம்

உக்ரைன்: உக்ரைனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் பாதுகாப்பு சூழ்நிலை மிக மோசனமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதால் தூதரகத்தை மாற்ற வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது. உக்ரைனில் உள்ள நிலைமைகளை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கான இந்திய தூதரகம் போலந்துக்கு இடமாற்றம்| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக, போலந்து நாட்டிற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உக்ரைனில் பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்து வருவதாலும், மேற்கு பகுதியில் தொடர் தாக்குதல் நடப்பதாலும், அந்நாட்டிற்கான இந்திய தூதரகத்தை தற்காலிகமாக போலந்து நாட்டிற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் காலங்களில், ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும். இவ்வாறு … Read more