வாந்தி வருவதாக பள்ளிக்கூட வகுப்பறையில் வெளியேறி மாடியில் இருந்து கீழே குதித்த மாணவி!

தமிழகத்தில் பள்ளி கூடத்துக்கு உள்ளேயே மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழில் செய்து வரும் சங்கர் – சந்தனமாரி தம்பதியின் இரண்டாவது மகளான அர்ச்சனா, அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். உயிரை மாய்த்து கொண்டார் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்த மாணவி, பிற்பகலில் திடீரென வாந்தி வருவதாக கூறிவிட்டு, வகுப்பறையை விட்டு வெளியேறியிருக்கிறார். வகுப்பறையை விட்டு வெளியே வந்த மாணவி, … Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வு.. பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வு நாளை தொடங்கி அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டிய விஷ்யங்கள் தொடபான காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியாகாந்தி இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட … Read more

புளியங்குடியில் கல்லூரி மாணவி தற்கொலை- 2 பேராசிரியர்கள் மீது வழக்கு

புளியங்குடி: தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி மேலரதவீதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மாடத்தி. இவர்களது மகள் இந்து பிரியா (வயது18). இவர் புளியங்குடியில் மனோ கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கணேசன் இறந்து விட்டதால் மாடத்தி பீடி சுற்றி மகளை வளர்த்து வந்தாள். இந்நிலையில் நேற்று இந்து பிரியா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்து பிரியா தூக்குபோட்டு கொண்ட அறையில் … Read more

தமிழகத்தின் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மார்ச் 15-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும் பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சீக்ரெட் சிஙகாரம்| Dinamalar

புதிய பாடம்! மத்தியில் ஆளுங்கட்சி, கதர்காரங்க இல்லாத தேசத்த உருவாக்குவோம்னு சபதம் போட்டிருந்தாங்க. அவங்க நினைச்சது நடக்கற மாதிர ிதான் ஐந்து மாநில தேர்தல் ரிசல்ட்டும் வந்திருக்கு.இந்த தோல்வி கதர்காரங்களுக்கு பெரிய அடியை கொடுத்திருக்கு. முக்கியமா பஞ்சாப் ‘ரிசல்ட்’ அவங்களுக்கு பெரிய பாடத்தையே கத்து கொடுத்திருக்காம். அங்க மூத்த தலைவர், முன்னாள் சிஎம்ம புறக்கணிச்சது தான் தோல்விக்கு காரணம்னு நெனக்கிறாங்க. அதே மாதிரி கர்நாடகாவுலயும் நடக்க கூடாதுன்னு டில்லிக்காரங்க நினைக்கிறாங்க.ஏன்னா கர்நாடகாவுல மட்டும்தான் கதரு ஓரளவுக்கு பவரா … Read more

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியாகாந்தி இல்லத்தில் தொடங்கியது!

புதுடெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இது காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி முன்னணி தலைவர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கட்சித்தலைமை மீது விமர்சனங்களை வீசத்தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பாதி ஒரு மாத இடைவேளைக்குப்பின் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.  பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் காங்கிரஸ் எம்.பி.க்களின் … Read more

இருநாட்டு பக்தர்கள் கூட்டு திருப்பலி; அமைச்சரிடம் பேச்சுவார்த்தை – கச்சத்தீவு திருவிழா ஹைலைட்ஸ்!

கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருடந்தோறும் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா இலங்கை, தமிழக பக்தர்கள் கலந்துகொண்டு இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிலுவைப் பாதையும், அதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. சிலுவைப்பாதை நடைபெற்ற காட்சி பின்னர், நேற்று மீண்டும் சிலுவைப் பாதை நடத்தி, இருநாட்டு மீனவர்களுக்கு இடையிலான … Read more

உக்ரைன் அகதிகளுக்கு தங்க இடமளிக்கும் பிரித்தானியர்களுக்கு பணம் வழங்கப்படும்! அரசு அறிவிப்பு

 உக்ரைன் அகதிகளுக்கு தங்க இடமளிக்கும் பிரித்தானியர்களுக்கு மாதத்திற்கு பணம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ‘Homes for Ukraine’ என்றழைக்கப்படும் புதிய திட்டத்தின் கீழ், குடும்ப உறவுகள் இல்லாவிட்டாலும், போரிலிருந்து வரும் அகதிகளை பிரித்தானியாவுக்கு வர அனுமதிக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அகதிகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தங்க அறை அல்லது வீட்டை வழங்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு மாதத்திற்கு 350 பவுண்டுகள் கொடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், வணிகங்கள் … Read more

இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தனி நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய திட்டங்கள், அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வருகிற மார்ச் 18ஆம் தேதி 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அனைத்துத் தரப்பு மக்களும் அதிகளவிலான எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் … Read more

பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல் – இலங்கை முதல் இன்னிங்சில் 109 ரன்னுக்கு சுருண்டது

பெங்களூரு: இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 252 ரன்களில் ஆல் அவுட்டானது. ஸ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் குவித்தார். விராட் கோலி 23 ரன்கள், ரிஷப் பண்ட் 39 ரன்கள், விஹாரி 31 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டும், தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டும் … Read more