`2 இடங்களில் ஓட்டு போட்ட திமுக பெண் கவுன்சிலர்?' – நீதிமன்றம் வரை சென்ற சுயேச்சை – திருச்சி சர்ச்சை

பிப்ரவரி 19-ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. திருச்சி மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட முத்துலட்சுமி என்பவர், கருமண்டபம் பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள 647-வது வாக்குச் சாவடிக்கு தனது வாக்கினை செலுத்த வந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், “உங்க ஓட்டு ஏற்கனவே போட்டாச்சே!” எனச் சொல்ல, “நான் இப்ப தானேங்க வரேன். என்னோட ஓட்டை யார் போட்டது!” என முத்துலட்சுமி கேட்க பெரும் பரபரப்பு உண்டானது. உடனே, அந்த … Read more

ரஷ்ய ராணுவத்தை அழித்தொழிக்கும் உக்ரைன் பைரக்டர் விமானம்: அதிரடி தாக்குதல் காட்சிகள்!

உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ரஷ்ய ராணுவ துருப்புகளை பைரக்டர் Bayraktar என்ற ஆளில்லா போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தி உக்ரைன் ராணுவம் அதிரடிக்காட்டி வருகிறது. உக்ரைனில் 18வது நாளாக போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் கீவ்வை ரஷ்ய துருப்புகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். போரின் 17வது நாளான நேற்று நகரின் பெரும்பாலான பகுதிகளில் வான் தாக்குதலுக்கான அபாய எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு … Read more

அதிக கோல் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ

ஓல்ட் ட்ராஃபோர்டு: கிறிஸ்டியானோ ரொனால்டோ 807 கோல்களை அடித்து, ஆண்கள் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சனிக்கிழமை (மார்ச் 12) அன்று பிரீமியர் லீக் போட்டியாளர்களான டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பருக்கு எதிராக ஒரு சிறந்த ஹாட்ரிக் சாதனையுடனான வெற்றிக்குப் பிறகு 807 கோல்களுடன் தொழில்முறை கால்பந்தாட்டத்தின் அனைத்து நேர முன்னணி வீரர் என்ற சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்து வரலாறு … Read more

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து கவர்னரை நீக்க வேண்டும்- வைகோ அறிக்கை

சென்னை: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய கவர்னர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது. மாணவர்கள் இடையே, அறிவியல் மனப்பான்மையை, பல்கலைக் கழகங்கள் வளர்க்க வேண்டும். மாநில அரசுகளின் கல்விக் கொள்கையின்படிதான் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம்; அதைத் துணைவேந்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே … Read more

சென்னையில் போலீஸ் வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் தப்பி ஓட்டம்!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் போலீசார் வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் தப்பியோடினர். பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றித் திரிந்த 5 பேர் தப்பியோடிய நிலையில், காரை ஓட்டி வந்த செல்வமணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஒயிட் காலர் பிச்சைக்காரர்கள் கேரள அமைச்சர் சர்ச்சை கருத்து| Dinamalar

திருவனந்தபுரம் : ”அரசு பணியில் இருக்கும் ஒரு பிரிவினர், ‘ஒயிட் காலர்’ பிச்சைக்காரர்கள் போல் இழிவாக நடந்து கொள்கின்றனர்,” என, கேரள அமைச்சர் கோவிந்தன் கூறி உள்ளார். அவமானம் கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இம்மாநில உள்ளாட்சி மற்றும் கலால் துறை அமைச்சர் எம்.வி.கோவிந்தன், திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று பேசியதாவது: சமுதாயத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில், இழிவான நபர்களின் ஒரு குழு … Read more

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தினை தொட்ட பெட்ரோல் விலை.. இந்தியாவில் எப்போது?

சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுவது எரிபொருள் விலை அதிகரிப்பு தான். வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே எரிபொருள் விலை அதிகரிப்பால், 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. அந்தளவுக்கு எரிபொருள் விலையானது உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், இன்னும் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. தங்கம் விலை மீண்டும் குறையலாம்.. எவ்வளவு சரியும்..வாங்கலாமா.. … Read more

IND vs SL: ஒரே நாளில் 16 விக்கெட்டுகள்… இன்றே முடிந்துவிடுமா பிங்க் பால் டெஸ்ட்?

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி ஆல்-அவுட், அடுத்த களமிறங்கிய இலங்கை பேட்டர்களில் பாதி பேர் பெவிலியனில். இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் போட்டி முதல் நாளின் முடிவிலேயே மூன்றாவது நாள் போல மாறியிருக்கிறது. Shreyas Iyer முதல் ஓவரின் ஐந்தாவது பந்தை அகர்வாலுக்கு ஃபுல்லராக அவுட்சைட் ஆஃபில் வீசினார் லக்மல். பந்து பிட்சான இடத்தில் புழுதி நன்றாக எழும்பியது. அந்த ஒற்றை பந்தே ஆட்டத்தின் மொத்த போக்கையும் தெளிவாகக் கூறிவிட்டது. … Read more

ஆழம் தெரியாமல் காலை விட்ட புடின்! திணறும் ரஷ்யா… கெத்து காட்டும் உக்ரைன்

உக்ரைன் – ரஷ்யா போர் தொடரும் நிலையில் தற்போது ரஷ்யாவின் ராணுவ படை மற்றும் பீரங்கிகள் முன்னேற முடியாமல் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி தாக்குதலை தொடங்கிய நிலையில் 15 நாட்களாக தாக்குதல் தொடர்கிறது. போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில், ஒரு சில பகுதிகளில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான … Read more

தொடங்கியது காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியாகாந்தி இல்லத்தில் தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது. இந்நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து சோனியாகாந்தி இல்லத்தில் நடந்து வரும் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.