மெட்ரோ இணைப்பு உள்பட வெகுஜன போக்குவரத்தை அரசு முன்கூட்டியே விரிவுப்படுத்துகிறது- பிரதமர் மோடி

நலத் திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற் பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, புனே நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின்  ஒரு பகுதியை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- ஒவ்வொரு நகரத்திலும் ஸ்மார்ட் போக்குவரத்து வசதிகளுக்காக பசுமை போக்குவரத்து மற்றும் மின்சார வாகனங்களை வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. மெட்ரோ இணைப்பு உட்பட வெகுஜன போக்குவரத்தை அரசாங்கம் முன்கூட்டியே விரிவுபடுத்துகிறது. சுற்று பொருளாதாரத்தை … Read more

டெஸ்ட் போட்டியில் தமிழ்நாடு வீரர் அஸ்வின் சாதனை

மொஹாலி: டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் கபில்தேவை முந்தினார் அஸ்வின். 435 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் கபில்தேவை முந்தி 2ம் இடத்துக்கு முன்னேறினார் அஸ்வின். டெஸ்டில்  619 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார்.

இமாசலபிரதேசத்தில் கொரோனா காலத்தில் தற்கொலைகள் அதிகரிப்பு

சிம்லா,  இமாசலபிரதேச மாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்றைய கூட்டத்தொடரின்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதல்-மந்திரி ஜெய் ராம் தாக்கூர், கொரோனா காலத்தில் தற்கொலைகள் அதிகரித்ததாக தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், “கொரோனா தொற்றின்போது இமாசலபிரதேசத்தில் 1,552 தற்கொலை சம்பவங்களும், 144 தற்கொலை முயற்சிகளும் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் அனைத்தும் மார்ச் 1, 2020 மற்றும் பிப்ரவரி 1, 2022-க்கு இடையிலான காலக்கட்டத்தில் நடந்துள்ளன” என்றார்.

வீடு வாசல் எல்லாம் போச்சு.. அழுது புலம்பும் பணக்காரர்கள்..!

ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர் உலக நாடுகளை மொத்தமாகப் புரட்டிப்போட்டு உள்ளது என்றால் மிகையில், இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்ய பணக்காரர்களைக் குறித்து வைத்து மிகப்பெரிய வேட்டையைத் துவங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் உலக நாடுகள் ரஷ்ய அரசு மீதும், அரசு நிறுவனங்கள் மீதும் தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது மட்டும் அல்லாமல் ரஷ்ய பணக்காரர்கள், முக்கியப் புள்ளிகள் மீதும் திட்டமிட்டுத் தடை விதித்தது. இதற்கு … Read more

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2022: மகரம் – கே.பி.வித்யாதரன்

மனிதர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ளவர்களே! துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமைதாங்கி நீங்கள். புரட்சிகரமான எண்ணங்கள் உடைய நீங்கள், மனிதநேயத்தை மழுங்கவைக்கும் மூடச் சிந்தனைகளைத் தூக்கி எறிவீர்கள். உங்களுக்கு 21.03.2022 முதல் 08.10.2023 வரையிலும் ராகுவும், கேதுவும் இணைந்து என்ன மாற்றத்தைத் தருவார்கள் என்று பார்ப்போம். ராகுவின் பலன்கள்! இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து இழப்பு, ஏமாற்றம், விரக்தி என நாலாபுறமும் வாட்டி வதைத்த ராகு பகவான், இப்போது ராசிக்கு … Read more

இப்படி செய்தால்… ரஷ்யா-சீனாவை மோதவிட்டு வேடிக்கை பார்க்கலாம்! டிரம்ப் கொடுத்த ஐடியா

 ரஷ்யா-சீனாவை மோதவிட்டு வேடிக்கை பார்க்க அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா, மற்ற நாடுகளில் இதில் தலையிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவின் பங்கு சந்தை மற்றும் ரூபிள் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், ரிபப்ளிக்கன் … Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து தமிழ்நாட்டை நோக்கி நகர்வதால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்ப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சென்னையில் அடுத்த 12 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்

மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தியா-இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று, பதும் நிசங்காவின் விக்கெட்டை அஸ்வின் சாய்த்தார். இதன் மூலம் டெஸ்டில் தனது 434 விக்கெட்டை அவர் கைப்பற்றி உள்ளார். இதன் மூலம் கபில்தேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார். தமது 85 டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின் 30 முறை  5 விக்கெட்களையும், 7 முறை 10 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் … Read more

கடல் சீற்றத்தால் இடிந்து விழுந்த பழைய துறைமுக பாலத்தை பழமை மாறாமல் மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: புதுச்சேரி ஆளுநர் பேட்டி

புதுச்சேரி: கடல் சீற்றத்தால் இடிந்து விழுந்த பழைய துறைமுக பாலத்தை பழமை மாறாமல் மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். பழைய துறைமுக பாலத்தை சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.60 கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.