ஜெலென்ஸ்கி உயிருக்கு ஆபத்து? தயார் நிலையில் அமெரிக்க- பிரித்தானிய சிறப்பு படைகள்

ரஷ்ய போர் அடுத்தகட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதியை மீட்டுவர பிரித்தானியா மற்றும் அமெரிக்க சிறப்பு படைகள் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக ஆபத்து மிகுந்த குறித்த நடவடிக்கை தொடர்பில் 70 பிரித்தானிய வீரர்களும் 150 அமெரிக்க வீரர்களும் இரவு நேர இரகசிய பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. லிதுவேனியா நாட்டில் குறித்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது என தகவல் கசிந்துள்ளது. இவர்களுடன் உக்ரேனிய சிறப்பு படை வீரர்களும் இணைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், … Read more

பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவளிக்க உச்சநீதிமன்றம் தடை

டில்லி பொதுமக்கள் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நாடெங்கும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது.    தற்போது விலங்கியல் ஆர்வலர்களின் வலியுறுத்தல் காரணமாக இவற்றை உள்ளாட்சி அமைப்புக்கள் பிடித்துச் செல்வது அடியோடு நின்றுள்ளதாகவும் இதனால் மக்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதையொட்டி டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது   வழக்கு விசாரணையின் போது பொது மக்கள் தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பதால் அவை … Read more

நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

காத்மண்டு: நேபாள நாட்டின் காத்மண்டில் வடகிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை 4.37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.   இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதையும் படியுங்கள்…உக்ரைனில் 2 நகரங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தம்- ரஷியா அறிவிப்பு

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்தின் நிதியை பயன்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 35 மாணவர்களை போர் பகுதியில் இருந்து அண்டை நாட்டிற்கு அழைத்துவர பேருந்து கட்டணமாக சுமார் ரூ.14 லட்சத்தை (17,500 டாலர்) மாநில அரசு செலுத்தியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

செய்திகள் சில வரிகளில்… 251 கிலோ மணி காணிக்கை| Dinamalar

கொப்பால்: வரலாற்று சிறப்புமிக்க கங்காவதி கிஷ்கிந்தா அஞ்சனாத்ரி மலை மீது உள்ள ஆஞ்சநேயாஸ்வாமி கோவிலுக்கு, ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி மதுரா ஆஸ்ரமத்தின் சார்பில் 251 கிலோ எடை கொண்ட மணி காணிக்கையாக வழங்கியுள்ளனர். இதை செய்வதற்கு 2.10 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. பத்து பேர் கொண்ட ஊழியர்கள், மலை மீது கொண்டு வந்தனர்.16 தங்க பதக்கம் பெறும் மாணவிபெலகாவி: விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 21 வது பட்டமளிப்பு விழா பெலகாவியின் ஞானசங்கமா வளாகத்தில் வரும் 10 ல் நடக்கிறது. … Read more

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவு

காத்மாண்டு,  நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இத்தகவலை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 04.37 மணிக்கு தலைநகர் காத்மாண்டுவில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் இந்த நிலநடுக்கமானது நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கிழக்கு-வட கிழக்கே 166 கிமீ தொலைவில் மையமாக வைத்து உண்டானதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தையில்… நம்பிக்கை தெரிவித்த உக்ரைன்

கடும் நெருக்கடிக்கு மத்தியில் உக்ரைன்-ரஷ்யா இடையே மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு, முடிவு எட்டாத நிலையில், வரும் 7ம் திகதி மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா போரை கை விட்டு பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மன்ற பொது சபை உறுப்பு நாடுகளும் வலியுறுத்தி வந்துள்ளன. இதனிடையே, இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை தொடர்பில் ரஷ்ய தூதுக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில், … Read more

பொறியியல் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கு  நேரடி செமஸ்டர் தேர்வு தேதிகள் மற்றும் அடுத்த கல்வியாண்டுக்கான கல்லூரி திறப்பு குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் பின்னர் ஆன்லைன் மூலம் பாடங்களையும் செமஸ்டர் தேர்வுகளையும் நடத்தி வருகிறது. பின்னர் தொற்று குறைந்தவுடன் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால், பொறியியல், பாலிடெக்னிக்  மற்றும் கலை, அறிவியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடைபெற்று வருகின்றன. பின்னர் மார்ச் 7-ம் … Read more

மகளிர் உலக கோப்பை – டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

மவுன்ட் மாங்கானு: நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்திய உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. இந்நிலையில், டாஸ் … Read more

பயணிகள் ரயிலில் தீ

மீரட்: உத்தரப் பிரதேச மாநிலம், சஹரன்பூரில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு பயணிகள் ரயில் டெல்லி நோக்கி புறப்பட்டு சென்றது.  ரயில் தவுராலா ரயில் நிலையத்தை சுமார் 7.10க்கு வந்தடைந்த நிலையில் ரயிலின் இரு பெட்டிகள் தீப்பற்றியது. பெட்டிகளில் இருந்த பயணிகள் அலறினர். பின்னர், ரயில் நிலை ஊழியர்கள் உதவியுடன் பெட்டியில் இருந்தவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ரயில் பெட்டியில் பரவிய தீயை அணைத்தனர்.