தமிழகத்தில் 223 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 223 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது 3,505 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 596 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,09,674 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் அழுத்த நோய் விழிப்புணர்வு கண்காட்சி

புதுச்சேரி : கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை கவர்னர் தமிழிசை துவக்கி வைத்தார்.உலக கண் அழுத்த நோய் வாரத்தை முன்னிட்டு, அரவிந்தர் கண் மருத்துவமனை, புதுச்சேரி நகராட்சி இணைந்து, கடற்கரை சாலை காந்தி திடலில் கண் அழுத்த (குளுக்கோமா) நோய் குறித்த விழிப் புணர்வு கண்காட்சியை நடத்தினர்.இக்கண்காட்சியை கவர்னர் தமிழிசை துவக்கி வைத்து பார்வையிட்டார். மத்திய கலால் மற்றும் ஜி.எஸ்.டி., ஆணையர் பத்மஸ்ரீ மற்றும் எலைட் ரோட்டரி குழுமத்தினர் கலந்து கொண்டனர். புதுச்சேரி : … Read more

மறக்க மாட்டோம்… பிரித்தானியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா: வெளியான பின்னணி

உக்ரைன் விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலை குறித்து பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது ரஷ்யா. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உலகப் போராக வெடிக்கும் ஆபத்தை உருவாக்கியுள்ள நிலையில், பிரித்தானியாவை பகிரங்கமாக எச்சரித்துள்ளது ரஷ்யா. போரிஸ் ஜோன்சன் நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளால் ரஷ்யா கடும் அதிருப்தியில் இருப்பதாக உள்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும், உக்ரைன் விவகாரத்தில் பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நடவடிக்கைகளை ஒருபோதும் ரஷ்யா மறந்துவிடாது எனவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் எச்சரித்துள்ளார். … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டம் நிறைவடைந்தது…!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்  ,இன்று மாலை 6மணி அளவில் தொடங்கி அமைச்சரவை கூட்டம் இரவு 7மணி அளவில் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்  வரைவு  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட இருப்பதாக தகவல் வெளியானது. மேலும்,  தமிழ்க தொழில் வளர்ச்சி , மின்விநியோகத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக உள்ளதாகவும் , நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக  சட்டப்பேரவை கூட்டுவது … Read more

மொகாலி டெஸ்ட் – கபில்தேவ் சாதனையை முறியடித்தார் ரவீந்திர ஜடேஜா

மொகாலி: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரி‌ஷப் பண்ட் அதிரடியாக ஆடி 96 ரன்னும், அஸ்வின் 61 ரன்னும், அனுமான் விஹாரி 58 ரன்னும் எடுத்தனர். 100-வது டெஸ்டில் ஆடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 45 ரன் எடுத்தார். 7-வது வீரராக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 175 … Read more

பூந்தமல்லி கிளைச்சிறையில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்

பூந்தமல்லி: மதுரையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக நடராஜன்(31), முருகன்(எ)லோடு முருகன்(40) ஆகியோர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி தனி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பூந்தமல்லி தனி கிளை சிறை ஜெயிலர் ரமேஷ் சிறைக்குள் திடீர் சோதனை செய்தார். அப்போது நடராஜன், முருகன் ஆகியோர் அறைகளில் இருந்து 2 செல்போன்கள், 2 சிம் கார்டுகள், பேட்டரி, சார்ஜர் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மற்ற சிறை கைதிகளிடம் செல்போன் உள்ளதா, … Read more

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி பரிசோதனைக்கு பரிந்துரை| Dinamalar

புதுடில்லி:கொரோனா வைரசுக்கு எதிரான ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற தடுப்பூசியை ‘பூஸ்டர் டோசாக’ வழங்குவதற்கான மூன்றாம் கட்டப் பரிசோதனை நடத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. ரஷ்ய நாட்டு தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு இணையான மூலப் பொருட்களை உடையது ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி. தெலுங்கானா மாநிலம் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு சில நிபந்தனைகளுடன் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அலுவலகம் கடந்த மாதம் … Read more

இன்றைய ராசி பலன் | 06/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology |Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

தடை செய்யப்பட்ட பகுதி… மேற்கத்திய நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த புடின்

உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கும் நாடுகள் ரஷ்யாவுடன் போருக்கு தயாரானதாகவே கருதப்படுவார்கள் என்று ஜனாதிபதி புடின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண் விமானிகளுடனான சந்திப்பு ஒன்றில் சனிக்கிழமை கலந்துகொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அவ்வாறான தடை விதிப்பு என்பது, தங்கள் சேவையை முடக்குவதற்கு ஒப்பான ஒன்று என குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பார் என்றால், அடுத்த நொடியே அவர்களும் ரஷ்யாவுக்கு எதிராக போருக்கு … Read more

உ.பி.யில் 7ந்தேதி 7வது கட்ட இறுதி வாக்குப்பதிவு: மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது…

லக்னோ: உத்தரபிரதேச சட்டசபைக்கான 7வது கட்ட தேர்தல் வரும் 7ந்தேதி (நாளை மறுதினம் – திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இது இறுதிக்கட்ட தேர்தல் ஆகும். இதையொட்டி, தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5மணியுடன் முடிவடைந்தது. தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 6 கட்டங்களாக தேர்தல்  வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில்,  7வது கட்ட வாக்குப்பதிவு  … Read more