ஹரியானா: கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது ஆளும் பாஜக அரசு!

இந்தியாவில் மதரீதியாகக் கொலைகள் நிகழும்போதும், மதக்கலவரங்கள் ஏற்படும்போதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக்கப்படும் ஒரு விஷயம், `கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்’ தான். சமீபத்தில் கூட, தமிழகத்தில் அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மதமாற்ற தடைச் சட்டம் என்ற குரல் ஓங்கியது. இந்த நிலையில், தற்போது ஹரியானா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஹரியானா முதல்வர் மனோஹர் லால் கட்டார் ‘கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதா’வை அறிமுகம் செய்தார். ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் … Read more

ரஷ்யா-உக்ரைன் போர்: சமீபத்திய முக்கிய தகவல்கள்…

ரஷ்யா மீதான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் ஏறக்குறைய ஒரு போர்ப் பிரகடனம் என்றும், உக்ரைன் மீது பறக்கக் கூடாத வலயத்தை விதிக்கும் எவரும் மோதலில் நுழைந்ததாகக் கருதப்படும் என்றும் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். மரியுபோல் துறைமுகத்தில் பல நாட்கள் தாக்குதல் நடத்தப்பட்டுவரும் நிலையில் பிறகு பொதுமக்கள் தப்பிக்க அனுமதிக்கும் வகையில் ரஷ்யா போர்நிறுத்தத்தை அறிவித்தது. அதனுடன் அருகிலுள்ள வோல்னோவாகா நகரத்திலும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் மரியுபோலில் உள்ள அதிகாரிகள் ரஷ்யர்கள் போர்நிறுத்தத்தை மீறி தொடர்ந்து ஷெல் … Read more

05/03/2022 7.30 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 223 பேருக்கு கொரோனா பாதிப்பு ..!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 223 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல்  குறைந்து வருகிறது. தொற்று பரவலை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடும் பணியையும் தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது.  தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 261 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று 223  ஆக குறைந்துள்ளது. … Read more

உக்ரைன் வான்பகுதியை தடை செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? 3வது நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 10வது நாளாக நீடிக்கிறது. உக்ரைன் வீரர்களும் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்துவருகின்றனர். இந்த போரில் இரு தரப்பிலும் பெருமளவு உயிர்ச்சேதம்  ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக இரண்டு நகரங்களில் மட்டும் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், உக்ரைன் வான் பகுதியை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலமாக மூன்றாம் தரப்பு நாடுகள் அறிவித்தால், அந்த நாடுகள் ஆயுத மோதலில் பங்கேற்பதாக ரஷியா கருதும் என அதிபர் புதின் எச்சரித்துள்ளார். ரஷிய ராணுவத்தின் … Read more

மீட்பு நடவடிக்கைக்காக ரூ.3.50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்டு விமானம் மூலம் அழைத்து வர ரூ.3.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாடு மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி | Dinamalar

புதுடில்லி :ஒடிசாவில் அதி நவீன, ‘பிரமோஸ்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ரஷ்யாவின் என்.பி.ஓ.எம்., நிறுவனத்துடன் இணைந்து, பிரமோஸ் அதிநவீன ஏவுகணைகளை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்து வருகிறது. நிலத்தில் இருந்து மட்டுமல்லாமல், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களிலிருந்தும் செலுத்தக்கூடிய வகையில் இந்த ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.மணிக்கு 3,400 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ., அமைப்பு தொடர்ந்து பரிசோதித்து வருகிறது.இந்நிலையில் மீண்டும், அதிநவீன பிரமோஸ் … Read more

சொல்றதுக்கே வெறுப்பாதான் இருக்கு.. ஆனாலும் சொல்றேன்..! #ElonMusk

ரஷ்யா – உக்ரைன் போல் மூலம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாலும், இவ்விரு நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்கள் பல துறைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் காரணத்தால் ஒட்டுமொத் சப்ளை செயினும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ் கச்சா எண்ணெய் பற்றி முக்கியமான கருத்தை வெளியிட்டு உள்ளார். எலான் மஸ்க்-ஐ மிரட்டிய ஃபோர்டு நிறுவனம்.. நடந்தது என்ன தெரியுமா..?! டெஸ்லா நிறுவனம் பெட்ரோல், டீசல் மற்றும் சுற்றுச்சூழலை … Read more

உட்கட்சி குஸ்தி: அதிகாரபூர்வ வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றிபெற்ற திமுக-வினர்! நடந்தது என்ன?!

திருவண்ணாமலை மாவட்டம், 4 நகராட்சிகளையும், 10 பேரூராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. இதில் திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்று முடிந்தது. மொத்தம் 27 வார்டுகளை உள்ளடக்கிய இந்த நகராட்சியில், தி.மு.க -18, அ.தி.மு.க-3, பா.ம.க-2, சுயேச்சை-3, காங்கிரஸ்-1 ஆகிய இடங்களில் முறையே வெற்றிபெற்றன. சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிகளை பிடிப்பதற்கு தேவைப்படும் பெரும்பான்மையான கவுன்சிலர்களை தன்வசம் கொண்டிருந்தது தி.மு.க கூட்டணி. இதனால் சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிகளை தி.மு.க கூட்டணியே … Read more

பிரித்தானிய பத்திரிகையாளர்கள் மீது ரஷ்ய இராணுவம் சரமாரி துப்பாக்கிச்சூடு! வெளியான பரபரப்பு வீடியோ

உக்ரைனில் பணிபுரியும் ஐந்து பேர் கொண்ட ஸ்கை நியூஸ் குழுவினர் மீது ரஷ்ய இராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகியுள்ளது. மார்ச் 28-ஆம் திகதி திங்கட்கிழமையன்று உக்ரைன் தலைநகர் கீவில் இந்த சம்பவம் நடந்தது. பிரித்தானியாவைச் சேர்ந்த ஸ்கை நியூஸின் தலைமை நிருபர் ஸ்டூவர்ட் ராம்சே தனது குழுவினரை அழைத்துக்கொண்டு கீவ் நோக்கி சென்றபோது, திடீரென அவர்களது காரின் மீது தோட்டாக்கள் பாய்ந்தன. அவர்கள் அனைவரும் கவச உடைகளை அணிந்திருந்தனர். இருப்பினும் இந்த சம்பத்தில் … Read more

கபில்தேவின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா இன்று தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார் முதல் இன்னிங்ஸ் முடிவில் 228 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். … Read more