ரஷ்ய ராணுவத்தினர் கொடுத்த உணவுகளை அவர்கள் கண் முன்னே காலால் மிதித்த உக்ரேனியர்! வைரலாகும் வீடியோ

ரஷ்ய ராணுவம் வழங்கிய உணவை அவர்கள் கண் முன்னே உக்ரேனியர்கள் வீசி எறிந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைனில் தொடந்து போர் தொடுத்து வரும் ரஷ்யா இராணுவம், மக்கள் வெளியேறுவதற்காக Mariupol மற்றும் Volnovakha இரண்டு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. உக்ரைனின் தெற்கில் உள்ள கெர்சனை நகரை ரஷ்ய படை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். கார்கிவ், மரியுபோல், தலைநகர் கிவ் ஆகிய நகரில் உக்ரைன்-ரஷ்யா படைகளுக்கு இடையே … Read more

கத்தார் கல்லறையில் பழமையான முத்து கண்டுபிடிப்பு

தோஹா:  கத்தார் கல்லறையில் 6,500 ஆண்டுகள் பழமையான முத்து மணியைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் எட்டு மாதங்களுக்கு நடைபெறவுள்ள ஃபிஃபா 2022 உலகக் கோப்பையின் தொகுப்பாளராக இருக்கும் தீபகற்ப நாட்டின் முத்து-டைவிங் வரலாற்றில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. கத்தார் அருங்காட்சியகங்களின் அகழ்வாராய்ச்சி மற்றும் தள நிர்வாகத்தின் தலைவரான ஃபெர்ஹான் சாகல் தலைமையிலான உள்ளூர் அகழ்வாராய்ச்சி பணி, தீபகற்பத்தில் உள்ள ஆரம்பக்கால மனித குடியிருப்புகளுக்கு ஒத்த பழமையான இயற்கை முத்து மணிகளை கத்தாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிமு 4600 தேதியிட்ட இந்த முத்து,  நாட்டின் பழமையான கற்கால தளங்களில் ஒன்றான வாடி அல் டெபாயனில் உள்ள கல்லறைக்குள் … Read more

உ.பி பயணிகள் ரெயிலில் திடீர் தீ விபத்து: பெட்டிகளை தனியாக பிரித்ததால் உயிர் சேதம் தவிர்ப்பு

உத்தர பிரதேசம் மாநிலம் மீரட் நகர் அருகே உள்ள தௌராலா ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில் நின்றுக் கொண்டிருந்தது. சஹாரன்பூரில் இருந்து டெல்லிக்கு சென்றுக் கொண்டிருந்த ரெயிலில் ஏராளமானோர் பயணித்திருந்தனர். இந்நிலையில், எஞ்ஜின் அருகில் இருந்த இரண்டு ரெயில் பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், ரெயில் பெட்டிகளில் இருந்த அனைத்து பயணிகளையும் உடனடியாக வெளியேற்றினர். தீ இரண்டு பெட்டிகளில் பரவியதால், தீப்பிடித்த பெட்டியில் இருந்து மற்ற பெட்டிகளை தனியாக பிரிக்கப்பட்டது. இதனால் உயிர் சேதம் … Read more

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை: மேகதாதுவில் அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். 2022-2023 பட்ஜெட்டில் மேகதாது அணை கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அறிக்கை செய்யப்பட்டுள்ளது.    

இந்தியா 574 ரன்கள் குவிப்பு| Dinamalar

மொகாலி: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணி 574 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா 175 ரன்களை குவித்தார்.இந்தியா வந்துள்ள இலங்கை அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மொகாலியில் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 357 ரன்கள் குவித்தது. 2ம் நாள் ஆட்டத்தை துவங்கிய … Read more

சோனி, ஹோண்டா-வின் புதிய கூட்டணி.. களமிறங்கு ஜப்பான்.. இனி ஆட்டம் வேற லெவல்..!

எலக்ட்ரிக் கார்கள் தான் எதிர்காலம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ரஷ்யா – உக்ரைன் மீதான மூலம் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் இனி உலக நாடுகளைக் காப்பாற்ற முடியும் என்பது தெளிவாகியுள்ளது. தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. 3 நாள் ஏற்றத்திற்கு பிறகு வீழ்ச்சி.. எவ்வளவு குறைந்திருக்கு? டெஸ்லா, வோக்ஸ்வாகன் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, ஜெர்மனி நாட்டின் வோக்ஸ்வாகன் சிறந்து விளங்கும் விலையில், தரமான … Read more

சசிகலாவை சந்தித்துப் பேசிய ஓ.ராஜா உட்பட பலர் அதிமுக-விலிருந்து நீக்கம்!

நடந்த முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க ஒரு மாநகராட்சியைக் கூட கைப்பற்றாமல் படுதோல்வியைச் சந்தித்தது. இதன் விளைவாக மீண்டும் அ.தி.மு.க-வில் கழக நிர்வாகிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்க்கவேண்டும் என்று ஒரு அந்தக் கட்சியில் ஒரு தரப்பினர் சமீப நாள்களாக வெளிப்படையாகக் கூறிவருகின்றனர். அண்மையில் கூட ஓ.பி.எஸ் வீட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் சேர்த்தாலே எல்லா பிரச்னையும் முடிந்துவிடும் என்று அ.தி.மு.க தேனி … Read more

உக்ரேனியர்கள் உயிரிழப்பிற்கு மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டமைப்பே காரணம்: ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைன் வான்பரப்பை பறக்க தடை விதிக்கப்படும்(no-fly zone) பகுதியாக அறிவிக்க நேட்டோ பாதுகாப்பு அமைப்பு மறுத்திருப்பது, பொதுமக்கள் மீது குண்டுமழை பொழிய அனுமதி வழங்கி இருப்பதுபோல் உள்ளது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனை நாட்டை ஏவுகணைகள், போர் விமானங்கள், டாங்கிகள் என பலவற்றின் மூலம் அங்குள்ள குடியிருப்பு பகுதிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் என அனைத்தின் மீதும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இதனால் ரஷ்யாவின் இந்த வான்வழி தாக்குதலை எதிர்கொள்ள … Read more

சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தம்பி ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ் ஓபிஎஸ் அதிரடி

சென்னை: சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தம்பி ராஜா உள்பட 3 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக  அதிமுக ஒருங்கிப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்து உள்ளனர். மற்றொரு அறிக்கையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட 10 அதிமுகவினரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்னொரு அறிக்கையில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுகவுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த  அதிமுக நிர்வாகிகள் 23 பேர் … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு… கடந்து வந்த பாதை

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல் ராஜ் கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் இன்று தீர்ப்பளித்தார். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5 பேர் விடுதலை என்றும் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வருகிற 8-ந்தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கு கடந்து வந்தபாதை குறித்து விரிவாக பார்க்கலாம். * 2015 ஜூன் 23-ந் தேதி இரவு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் சாமி கும்பிட சென்ற … Read more