முன்னாள் அமைச்சர்… 23 ஆண்டுகள் மாவட்டச் செயலாளர் – குமரி சுரேஷ்ராஜன் பதவிநீக்கப் பின்னணி இதுதான்!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக சுமார் 23 ஆண்டுகள் பதவி வகித்தவர் சுரேஷ்ராஜன். 1996-ல் எம்.எல்.ஏ ஆகி இளம் வயது அமைச்சராக வலம்வந்தார் இவர். முதலில் இளைஞரணி பொறுப்பில் இருந்தவர், பின்னர் 1998-ல் ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டச் செயலாளரானார். நேற்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் முடிந்த சில மணி நேரங்களில் சுரேஷ்ராஜனின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என அறியப்பட்ட சுரேஷ்ராஜனிடம் இருந்து திடீரென மாவட்டச் … Read more

ஷேன் வார்னே மரணம் குறித்து 3 நண்பர்களிடம் விசாரணை! பொலிசார் தகவல்

ஷேன் வார்னே மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேன் வார்ன் ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 194 ஒரு நாள் போட்டிகளில் 293 போட்டிகளை விளையாடி உள்ளார். மேலும் 55 ஐபிஎல் போட்டிகளிலும் ஷேன் வார்ன விளை யாடி உள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் வெற்றி கோப்பையை தட்டி சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஷேன் வார்ன் தான் கேப்டனாக இருந்தார்.  பல்வேறு … Read more

உக்ரைனில் இருந்து வரும் மருத்துவ மாணவர்கள் எஃப்எம்ஜிஇ தேர்வை முடித்தால் இன்டர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!

டெல்லி: உக்ரைனில் இருந்து வரும் மருத்துவ மாணவர்கள் இன்டர்ன்ஷிப் முடிக்காமல் இருந்தால், அவர்கள் எஃப்எம்ஜிஇ தேர்வை (FMGE/Foreign Medical Graduates Examination /வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி களுக்கான தேர்வு) எழுதி தேர்ச்சி பெற்றால், அவர்கள் இந்தியாவில் இன்டர்ன்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ கவுன்சில் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் மருத்துவம் படித்து வந்த பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், மருத்துவ படிப்பினை தொடர்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இறுதியாண்டு வரை பலர் படித்து … Read more

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் கட்சி கட்டுப்பாட்டை மீறலாமா? கி.வீரமணி வேதனை

சென்னை: திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற அமைப்புகளுக்கு கடந்த 19-ந் தேதி அன்று நடைபெற்ற தேர்தலில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு நற்சான்று வழங்குவது போல, எதிர்பாராத இமாலய வெற்றியை தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் வழங்கியிருக்கிறார்கள். 1.3.2022 அன்று 69 வயதில் அடியெடுத்து வைத்த, ‘‘உங்களில் ஒருவன்’’ என்று கண்ணிமைக்காமல் கடமையாற்றும் நமது முதல்-அமைச்சருக்குப் பிறந்த நாள் பரிசாக முதல் நாள் வந்து பலரும் … Read more

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தல்!!

மொகாலி: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஜடேஜா அடித்த 2-வது சதம் இதுவாகும். 

இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 6 ஆயிரத்திற்கு கீழ் சென்றது| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்திற்கு கீழ் சென்றது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,921 பேருக்கு கோவிட் உறுதியானது. 11,651 பேர் குணமடைந்தனர். 289 பேர் உயிரிழந்தனர்.தற்போது, 63,870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,23,78,721 பேர் கோவிட்டில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பும் 5,14,878 ஆனது. தினசரி கோவிட் தொற்று விகிதம் 0.63 ஆக உள்ளது. 178.55 கோடி டோஸ் … Read more

இந்தியாவில் இதுவரை 178.52 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, கொரோனா தொற்றுக்கு அணை போடும் விதமாக நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தொடர்ந்து கட்டம் கட்டமாக பல்வேறு பிரிவினருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இதுவரை 178.52 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன என்று மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் இரவு 7 மணி வரை 21 லட்சத்து 70 ஆயிரத்து 356 தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. ஒமைக்ரான் … Read more

சீன பொருளாதாரம் வீழ்ச்சியா? 30 வருட குறைவான டார்கெட் வைத்த ஜி ஜின்பிங் அரசு..!

பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியில் உலக நாடுகளுக்குத் தொடர்ந்து வியப்பு அளித்து வந்த சீனா இந்த வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 30 வருட குறைவான அளவீட்டை நிர்ணயம் செய்துள்ளது. ஒரு சீன மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா அமெரிக்காவுடன் போட்டிப்போட்டு வரும் நிலையில், பல உற்பத்தி மற்றும் மூலப் பொருட்களுக்காக உலக நாடுகள் சீனாவை நம்பியிருக்கும் வேளையில், வளர்ச்சி அளவீட்டை 30 வருட குறைவான அளவீட்டை அறிவித்துள்ளது பெரும் … Read more

“நீங்க எங்களுக்கு கெடச்ச பொக்கிஷம்!" – தஞ்சை மாநகராட்சி ஆணையரை பாராட்டி நெகிழ்ந்த மேயர்

தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக தி.மு.க-வைச் சேர்ந்த சண்.இராமநாதன், துணை மேயராக டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆணையர் சரவணக்குமார் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம் என மேயரும், தஞ்சையின் பொக்கிஷம் என துணை மேயரும் ஆணையரை பாராட்டி வாழ்த்தி பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் திமுக மேயர் சண்.இராம நாதன்,ஆணையர் சரவணக்குமார் தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில், தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் 40 வார்டுகளிலும், அ.தி.மு.க 7 இடங்களிலும், சுயேச்சைகள் … Read more

இலங்கையில் விளையும் இந்த பொருளை சாப்பிட்டால் புற்றுநோய் வராது! அடுக்கடுக்கான ஆச்சரிய நன்மைகள்

கறிவேப்பிலை உணவுகளில் சேர்க்கப்படுவதற்கு அதன் தனித்துவம் வாய்ந்த சுவை மட்டும் காரணம் அல்ல, அதன் மருத்துவ குணங்களும் தான். கறிவேப்பிலையின் அறிவியல் பெயர் முர்யா கோயினீகி. அதன் சொந்த ஊர் இந்தியா மற்றும் இலங்கை ஆகும். இவற்றில் கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவை உள்ளன. வைட்டமின் சி, ஏ, பி மற்றும் ஈ உள்ளிட்ட வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. ஆல்கலாய்டுகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் … Read more