திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் பாண்டியன் ராஜினாமா

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் பாண்டியன் ராஜினாமா செய்தார். திருத்துறைப்பூண்டி துணைத் தலைவர் பதவி சிபிஐஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ராஜினாமா செய்தார்.

பில் கேட்ஸ் கள்ள தொடர்பு.. உண்மையை உடைத்த மெலிண்டா.. விவாகரத்துக்கு இதுதான் காரணம்..!

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தனது காதல் மனைவியான மெலிண்டா கேட்ஸ்-ஐ 27 வருடத்திற்குப் பின்பு விவாகரத்துச் செய்ய முடிவு செய்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. இவர்களின் விவாகரத்துக்குப் பின் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பெரிய அளவில் வெளியுலகத்திற்கு வராத நிலையில் மெலிண்டா தனது விவாகரத்து குறித்தும், விவாகரத்துக்குக் காரணத்தையும் CBS பேட்டியில் தெரிவித்துள்ளார். நீங்க என்ன என்னை தடை பண்றது.. பிபிசி, … Read more

“பதவியை ராஜினாமா செய்ய முடியாது..!" – முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக சேர்மனின் கணவர் பதில்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் இன்று நடைப்பெற்றது. அதில் தி.மு.க தலைமையால் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில், தி.முக-வினர் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். அதுகுறித்து தி.மு.க-விடம் கூட்டணிக் கட்சியினர் முறையிட்டு வரும் நிலையில், “கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தை காக்க வேண்டுமென முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவு … Read more

அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் காலமானார்! அதிரச்சியில் ரசிகர்கள்

அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52. சனிக்கிழமை அதிகாலையில் வார்னின் நிர்வாகம் சுருக்கமான ஒன்றை அறிக்கையை வெளியிட்டது. அதில், வார்ன் தாய்லாந்தின் Koh Samui-ல் மாரடைப்பால் காலமானார். ஷேன் தனது வில்லாவில் எந்தவித அசைவுமின்றி காணப்பட்டார், மருத்துவர்கள் சிறந்த முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் குடும்பம் தனியுரிமையைக் கோருவதால், மேலதிக விவரங்களை உரிய நேரத்தில் வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  1992ம் ஆண்டிலிருந்து 2007ம் … Read more

மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு : தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

பெங்களூரு மேகதாது அணைக் கட்டுமானத்துக்குக் கர்நாடக அரசு நிதிநிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவு செய்துள்ளது.  இதனால் தமிழகத்துக்கு வரும் காவிரி நீர் வரத்து மிகவும் பாதிப்படையும் என்பதால் தமிழக அரசு இதை எதிர்த்து வருகிறது.  இது குறித்துப் பல முறை மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து புகார் அளித்து வருகிறது.   ஆயினும் … Read more

ஷேன் வார்னே மறைவு அதிர்ச்சி அளிக்கிறது- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே (வயது 52) இன்று காலமானார். சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஷேன் வார்னே மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- ஆஸ்திரேலிய சுழற்பந்து … Read more

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.1,473.16 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.1,473.16 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.771.73 கோடியும், ஒன்றிய அரசு சார்பில் ரூ.581.48 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு முகாமிற்கு அரசு சார்பில் இலவச பஸ் வசதி

புதுச்சேரி-புதுச்சேரியில் நாளை துவங்கும் வேலை வாய்ப்பு முகாமிற்கு அரசு சார்பில் இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மாநில அரசு இணைந்து, நாளை 5ம் தேதி மற்றும் 6 தேதியில் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த முகாம் பிள்ளைச்சாவடியில் உள்ள தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் நடக்கிறது. கவர்னர் தமிழிசை துவக்கி வைக்கிறார். முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் பங்கேற்கின்றனர்.முகாமில், தொழில்நுட்பம், கணினி அறிவியல், மென்பொருள், நிர்வாகம், மருத்துவம், வங்கி சார்ந்த வேலை … Read more

நீங்க என்ன என்னை தடை பண்றது.. பிபிசி, பேஸ்புக், கூகுள் ப்ளே-க்கு தடை விதித்த ரஷ்ய அரசு!

உலக நாடுகள் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது அடுத்தடுத்துத் தடை விதித்து வந்த நிலையில், இன்று விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு, அறிவிக்கப்படாத தடையா பல வெளிநாட்டு நிறுவனங்கள் மீதும், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிக்கை நிறுவனங்களின் தளத்தை முடக்கப்பட்டு உள்ளது. இதனால் 5க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சேவையை ரஷ்யாவில் மொத்தமாகத் தடை செய்யப்பட்டு உள்ளது. நீங்க என்ன என்னைத் தடை பண்றது, நானே பன்றேன் என்ற தொனியில் புதின் … Read more

“கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்றவர்கள், உடனடியாக…" – ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று மறைமுக தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடந்தது. முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான வெற்றியைப் பெற்றிருக்கும் தி.மு.க, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் இடங்களை ஒதுக்கியது. அதன்படி, வி.சி.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை மறைமுகத் தேர்தலுக்கு முன்னிறுத்தியிருந்தன. திமுக-வின் கூட்டணிக் கட்சியினர் நகராட்சி, பேரூராட்சி என உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள் தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், … Read more