கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்ற தி.மு.க.வினர் பதவி விலக வேண்டும்- மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது. அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில்  சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய … Read more

விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோயில் அம்மன் சன்னதியில் இருந்து திருடப்பட்ட 3 கலசங்கள் மீட்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோயில் அம்மன் சன்னதியில் இருந்து திருடப்பட்ட 3 கலசங்கள் மீட்கப்பட்டுள்ளது. விருதகிரீஸ்வரர் கோயில் கலசம் திருடப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரிஷாப் பன்ட், ஹனுமா அரைசதம்; இந்தியா ரன் குவிப்பு| Dinamalar

மொகாலி: மொகாலி டெஸ்ட் முதல் நாளில் இந்திய அணி 357/6 ரன் குவித்தது. பேட்டிங்கில் அசத்திய ரிஷாப் பன்ட், ஹனுமா விஹாரி அரைசதம் விளாசினர். இந்தியா வந்துள்ள இலங்கை அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இன்று மொகாலியில் துவங்கியது. முதன் முதலாக டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பேற்ற இந்தியாவின் ரோகித் சர்மா, ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ரோகித், … Read more

இந்திய-வின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை.. என்ன காரணம் தெரியுமா..?

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே 8 வருட உயர்வை தொட்டு உள்ளது, இது இந்திய சந்தையை மிகப்பெரிய அளவில் அடுத்த வாரம் முதல் பாதிக்கப்போகிறது. இந்நிலையில் மத்திய அரசின் மிகப்பெரிய கனவான உள்கட்டமைப்புத் திட்டங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்வது மட்டும் அல்லாமல் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. 7வது சம்பள கமிஷன்.. ரூ.90,000 வரை சம்பளம் அதிகரிக்கலாம்.. இன்னும் பல சூப்பர் அப்டேட்கள்..! சாலை கட்டுமானம் மத்திய … Read more

கோலிவுட் ஸ்பைடர்: கமல், உதயநிதியின் அரசியல் இன்னிங்ஸ் பிளான்; நடிகராகிறாரா ரகுவரனின் மகன்?!

* ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் நலன் குமாரசாமி. அவரது ‘காதலும் கடந்துபோகும்’ படத்திற்கு பின் ஒரு ஆந்தாலஜி படம் தவிர, மீண்டும் டைரக்‌ஷன் பக்கமே கவனம் செலுத்தாமல் இருந்தார். அதன் பின் மீண்டும் விஜய் சேதுபதியையே இயக்குவார் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், தற்போது அடுத்த கதையை ரெடி செய்துவிட்டு, ஆர்யாவிடம் அதைச் சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட ஆர்யா, தேதி இல்லையென ஒதுங்கிவிட்டார். இப்போது அந்த கதையை ‘தரமணி’ … Read more

உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைவது குறித்து தனது நிலைப்பாட்டை அறிவித்தது பெலாரஸ்!

உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைவது குறித்து பெலாரஸ் அதிபர் Lukashenko தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 9வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், Energodar நகரை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், ரஷ்யாவின் நட்பு நாடாக திகழ்ந்து வரும் பெலாரஸ், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையில் பங்கேற்காது என அறிவித்துள்ளது. இதுதொடர்பில் பெலாரஸ் அதிபர் Lukashenko கூறியதாவது, உக்ரைன் மீதான ரஷ்யா போரில் பெலாரஸ் ஆயுத படைகள் பங்கேற்கவில்லை, பங்கேற்கப் போவதில்லை … Read more

கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானது அல்ல! திமுக மீது சாடிய சிபிஎம் பாலகிருஷ்ணன்…

சென்னை: பதவி வெறியால் திமுகவினர், கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானது அல்ல என திமுக மீது கூட்டணி கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர்  கே பாலகிருஷ்ணன் கொந்தளித்துள்ளார். இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தலைமை பதவிக்கான மறைமுகத் தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுக வினர் போட்டியிட்டு, அவர்களின் வாய்ப்பை தட்டிப்பறித்துள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுக தலைமை மீறி, மாவட்ட திமுகவினர்  தட்டிப் … Read more

கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானதல்ல- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிருப்தி

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. இருப்பினும் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட ஒரு சில இடங்களில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டி வேட்பாளர்கள் களம் கண்டதையும், அதன் காரணமாக எதிர் அணியினர் பலனடைந்ததையும் பார்த்தோம். இப்போது, நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்காக மறைமுக தேர்தல்கள் … Read more

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் நகர்மன்ற துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் நகர்மன்ற துணைத் தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதுமான உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தால் தேதி குறிப்பிடாமல் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எம்.டி., – எம்.எஸ்., படிப்பிற்கு இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு பட்டியல் வெளியீடு

புதுச்சேரி-முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.எம்.டி., – எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பித்த தகுதியான மாணவர்களின் பட்டியலை, அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு என பிரிவு வாரியாக சென்டாக் வெளியிட்டுள்ளது.இம்மாணவர்களுக்கு இன்று 4ம் தேதி கணினி கலந்தாய்வு மூலம் சீட் ஒதுக்கப்பட உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்படாத மாணவர்களுக்கு பதிவு கட்டணம் திருப்பி தரப்படும். … Read more