கூட்டணி தர்மம் மீறல்: திருமாவளவன் கொந்தளிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள சேர்மன் பதவிகளில் கூட்டணி தர்மத்துக்கு எதிராக, திமுகவினர் போட்டியிட்டு  வெற்றி பெற்றுள்ளது. இது திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, கட்சி முன்னணி தலைவர்களுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி, நகராட்சி, பேருராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் பதவிகளில் … Read more

மேயர் பொறுப்பை சுமக்கும் சாதாரண, சாமானிய மக்கள்

தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளிலும் இன்று மேயர்கள் மற்றும் துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். மேயர் பொறுப்பை சுமக்கும் பலர் சாதாரண மற்றும் சாமானிய மக்கள் ஆவர். சிலர் ஏழ்மை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். வாடகை வீட்டிலேயே வசிக்கிறார்கள். விவசாயமும் செய்து வருகிறார்கள். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மேயர் பதவி கிடைத்திருப்பது அவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக உள்ளது. இதனால் உள்ளாட்சி மன்றங்களில் புதிய காட்சிகள் அரங்கேறி வருகின்றன. சென்னை மேயர்-ஆர்.பிரியா சென்னை மேயர் ஆர்.பிரியா … Read more

பட்டுக்கோட்டை நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைப்பு

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் அவைக்கு வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

கவசம் தொழில்நுட்பம்: ரயில்வே இன்று சோதனை| Dinamalar

புதுடில்லி : தெலுங்கானாவில் இன்று நடக்கவுள்ள,’கவசம்’ எனப்படும், ரயில் விபத்து தடுப்பு தொழில்நுட்பத்தின் சோதனையில், ரயில்வே அமைச்சரும், ரயில்வே வாரிய தலைவரும் ஆளுக்கொரு ரயிலில் பயணிக்க உள்ளனர். ரயில் விபத்துக்களை தடுப்பதற்காக, ‘கவசம்’ எனப்படும் தானியங்கி ரயில் விபத்து தடுப்பு தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.இதை ரயிலில் பொருத்துவதன் வாயிலாக, இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வரும்போது, அவை நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவதற்கு முன், குறிப்பிட்ட தொலைவில் ரயில் தானாகவே நிற்க, ‘கவசம்’ … Read more

ரஷ்யாவின் வீழ்ச்சி ஆரம்பம்.. உலக நாடுகளின் தடைகள் வேலை செய்யத் துவங்கியது..!

விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா பல ஆண்டுகள் திட்டமிட்டு தனது நிதி ஆதாரத்தை மேம்படுத்திக் கொண்டு உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இல்லாத போதும் நேட்டோ படைகள் உக்ரைன் நாட்டில் களமிறக்கப்பட்ட காரணத்தால் ரஷ்யா தனது பெரும் படையைக் கொண்டு உக்ரைன் நாட்டிற்குள் வேகமாக முன்னேறி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்க்கு எதிர்ப்பு தெரிவித்த மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரம், வர்த்தகம், நிதியியல் சேவைகள் எனத் தொடர்ந்து பல … Read more

உக்ரைனிலிருந்து திரும்பும் இந்திய மாணவர்களின் மருத்துவப் படிப்பு இனி..?!

உக்ரைனில் இந்திய மாணவர்கள்! பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உக்ரைனில் படித்துவருகிறார்கள். குறிப்பாக அந்த நாட்டில் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவக் கல்வி தான் பயின்று வருகிறார்கள். மருத்துவக் கல்விக்கு அடுத்தபடியாக அங்கு பொறியியல் பயிலும் மாணவர்களும் அதிகம் இருக்கிறார்கள். இந்திய மாணவர்கள் தவிர உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் உக்ரைனில் கல்வி கற்றுவருகிறார்கள். உக்ரைனில் மாணவர்கள் மருத்துவம் பயில ஆர்வம் கட்டுவதற்கு, அங்குக் கல்விக் கட்டணம் குறைவு என்பதும், அங்கு மருத்துவம் பயின்றால் பல்வேறு நாடுகளில் மருத்துவராக … Read more

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தின் நிலைமை குறித்து உக்ரைன் வெளியிட்ட முக்கிய தகவல்

உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் நிலைமை குறித்து உக்ரைன் அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  உக்ரைன் மீது தொடர்ந்து 9வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்ய படைகள், தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை உக்ரைனின் தெற்கில் உள்ள Zaporizhzhia அணு மின் நிலையம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியத்தை தொடர்ந்து, நிலையத்தில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனிடையே 5 மணியளிவில் தீயணைப்பு வீரர்கள் தீயை … Read more

நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள்! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள் என்றும், தடுப்பூசியால் மட்டுமே கொரோனா 3வது அலையின் தாக்கத்தை தடுக்க முடிந்தது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்னமும் மிரட்டி வருகிறது. தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் கொரோனா தொற்றின் தாக்குதலில் இருந்து தப்பி உள்ளனர். இதனால் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என … Read more

அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்க எதிர்ப்பு- ஓ.பன்னீர்செல்வம் நடத்த இருந்த ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தி உள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தோல்வி, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆட்சியை இழந்தது. அடுத்து நடைபெற்ற 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் தோல்வி, இப்போது நடைபெற்று முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வி என அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்வியால் அ.தி.மு.க.வில் தொண்டர்கள் சோர்வடைந்து வருகின்றனர். அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இரட்டை தலைமை இருப்பதால்தான் … Read more

சப்ரோசியா அணுமின் நிலையத்தை கைப்பற்றியது ரஷ்யா

கீவ்: உக்ரைனில் தாக்குதல் நடத்தப்பட்ட சப்ரோசியா அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான சப்ரோசியா அணுமின் நிலையத்தை ரஷ்யா தாக்கியிருந்தது.