சுக்கரனின் இடமாற்றம்! இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் சுக்கிர யோகம் கிடைக்கப்போகுதாம்… இன்றைய ராசிப்பலன்

சுக்கிரன் 2022 பிப்ரவரி 27 ஆம் திகதி தனது நட்பு ராசியான மகர ராசிக்கு இடம் மாறியது. நட்பு ராசிக்குள் சென்றதால் அனைத்து ராசிகளிலும் சற்று நல்ல தாக்கம் இருக்கும். இருப்பினும் 4 ராசிகள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுகிறார்கள். அந்தவகையில் நாளைய நாள் சுக்கிரனால் சிறப்பான பயன்களை பெறப்போகும் ராசிக்காரர் யார் என இங்கே பார்ப்போம்.   உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  … Read more

ஆவடி மேயராகும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த உதயகுமார்

சென்னை ஏழைக்குடும்பத்தை சேர்ந்த திமுக உறுப்பினர் உதயகுமார் ஆவடி மாநகராட்சி மேயர் ஆகிறார்.   சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் ஜி உதயகுமார் ஆவடி 9 ஆம் வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.  இவர் திமுக வட்டச் செயலாளராக உள்ளார்.  இவர் திருமுல்லைவாயில் காலனி திருவள்ளுவர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தந்தை குணசேகரன் பாதுகாப்புத்துறை ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.  இவரது மனைவி விநாயகி.  இவர்களுக்கு … Read more

அ.தி.மு.க.வில் சசிகலாவும், நானும் மீண்டும் இணைகிறோமா?- டி.டி.வி.தினகரன் பேட்டி

சென்னை: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில், என்னையும், சசிகலாவையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள். இதேபோல ஒட்டுமொத்த அ.தி.மு.க. வும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பார்ப்போம். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவரத்தான் அ.ம.மு.க. முயற்சிக்கிறது. அ.தி.மு.க.வை கைப்பற்ற அல்ல. சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய இடத்தில் அ.தி.மு.க.தான் இருக்கிறது. ஏனெனில் அந்த கட்சியில் இருந்துதான் தற்போது இதுபோன்ற குரல்கள் கேட்கிறது. … Read more

திருத்துறைப்பூண்டி நகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் துணை தலைவர் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு!!

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி நகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் துணை தலைவர் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டுள்ளது.நகராட்சி துணைத் தலைவர் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

பெட்ரோல் விலை உயர வாய்ப்பு; கலால் வரியை குறைக்க அரசு ஆலோசனை| Dinamalar

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்காமல் இருக்க, கலால் வரியை குறைப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலக சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, இழப்பை சமன் செய்ய, எண்னெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை அதிகரிக்கக்கூடும். அப்படி அதிகரிக்கும்போது, மக்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கும் வகையில், கலால் வரியை குறைப்பது குறித்து அரசு சிந்தித்து … Read more

பேச்சுவார்த்தை, ராஜாங்க ரீதியிலான பாதைக்கு திரும்ப வேண்டும் – குவாட் மாநாட்டில் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பு ‘குவாட்’ ஆகும்.   இந்நிலையில் குவாட் தலைவர்களின் கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, இந்திய பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான … Read more

100% வேலைவாய்ப்பு.. சராசரி சம்பளம் 34 லட்சம்.. அசத்தும் ஐஐடி..!

பொதுவாக ஐஐஎம் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருந்து முன்னணி நிறுவனங்கள் தேடி தேடி வேலைவாய்ப்பை அளிக்கும், ஆனால் உண்மையில் அனைத்து ஐஐஎம் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறி தான். இப்படியிருக்கையில் நாட்டின் முன்னணி ஐஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐஐஎம் கல்கத்தா புதிய சாதனையைப் படைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய இந்தியா முடிவு.. புதிய திட்டம் தீட்டும் ஆர்பிஐ..! ஐஐஎம் கல்கத்தா இந்தியன் … Read more

குண்டாஸ் போடாமல் இருக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டாரா?! – வைரலான ஆடியோ; பதவியை ராஜினாமா செய்த எஸ்.ஐ

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, சாயர்புரம், குரும்பூர், கயத்தாறு, சேரகுளம், திருச்செந்தூர், புதுக்கோட்டை தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போனதால் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை போலீஸார் பார்வையிட்ட போது, ஒரு கும்பல் காரில் வந்து ஆடுகளை திருடிச் சென்றது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி வாகனச் சோதனையின் போது அந்த கும்பல் … Read more

ரஷ்யாவின் குலைநடுங்க வைக்கும் திட்டம்: கசிந்த ஆவணங்களால் ஸ்தம்பித்த உக்ரைன்

உக்ரைன் மக்களின் மன உறுதியை குலைக்க ரஷ்யா அதிர்ச்சி திட்டமொன்றை இனிவரும் நாட்களில் முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உக்ரைன் மாவட்டங்கள் சில இதுவரை சரணடைந்துள்ளன. குறித்த தகவல்கள் ரஷ்யாவால் உறுதி செய்யப்பட்டாலும், உக்ரைன் தரப்பில் ஏற்றுக்கொள்ளாமல் உள்ளனர். மட்டுமின்றி, உக்ரைன் மக்கள் தெருக்களில் இறங்கி, ரஷ்ய துருப்புகளை தடுத்து நிறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் மக்களின் மன உறுதியை குலைக்கும் வகையில், ரஷ்ய துருப்புகளால் கைப்பற்றும் உக்ரைன் … Read more

ஐக்கிய அரபு நாடுகள் விஜய் சேதுபதிக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது

விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு நாடுகள் கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், த்ரிஷா, பார்த்திபன், அமலா பால் உள்ளிட்ட நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கவும், வேலை செய்யவும் அல்லது 100 சதவீத முதலீட்டுடன் தொழில் செய்யவும் முடியும். இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் தவிர இந்தியாவில் பிரபலமாக இருப்பவர்கள் பலருக்கும் வழங்கப்பட்டிருக்கும் இந்த கோல்டன் விசாவை விஜய் சேதுபதியிடம் அந்நாட்டு அதிகாரிகள் இன்று … Read more