பொருளாதாரம் சீரான வளர்ச்சியை கண்டு வருகிறது – நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார்

புதுடெல்லி, நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் ஒரு செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். பொருளாதாரம் மீண்டு வருவது போதிய வலிமையுடன் இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது;- “இந்த விவகாரத்தை தனித்தனியாக பார்க்க வேண்டும். வேளாண்துறை சிறப்பாக செயல்பட்டது. எப்போதும் 3 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி கண்டு வருகிறது. உற்பத்தி துறையை எடுத்துக் கொண்டால், அதில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. அதற்கு கட்டுப்பாடுகள் மட்டுமின்றி, நுகர்வோர் … Read more

உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை என்னவாகும்.. நீடிக்கும் குழப்பம்.. சற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. தொடர்ந்து பல தினங்களாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் சந்தையானது, இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் இந்த ஏற்றம் தொடருமா? ரஷ்யாவால் இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படலாம்.. புட்டு புட்டு வைத்த எஸ்பிஐ அறிக்கை! தொடர்ந்து உக்ரைன் -ரஷ்யா இடையேயான பதற்றமானது நீடித்து வருகின்றது. உக்ரைனின் மிகப்பெரிய துறைமுகமான … Read more

ரஷ்யாவின் முக்கிய இராணுவ தளபதியை சுட்டுக்கொன்ற உக்ரைன்: புடினின் போர் திட்டத்திற்கு பேரிடி

உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின் முக்கிய இராணுவ தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ள தகவல் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியுள்ள Major General Andrei Sukhovetsky, கீவ் நகருக்கு வெளியே சுமார் 30 மைல்களுக்கு தொலைவில் அமைந்துள்ள விமானத்தளத்தில் உக்ரைன் சிறப்புப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். Major General Andrei Sukhovetsky படுகொலை செய்யப்பட்டது காரணமாகவே, கீவ் நகரை கைப்பற்றும் ரஷ்ய துருப்புகளின் நடவடிக்கைகள் பாதியில் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கீவ் நகருக்கு … Read more

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி

செங்கல்பட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கில் அவரது ஜாமீன் மனு  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.  அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டர் ஒருவரைக் கள்ள ஓட்டு போட முயன்றதாகக் கூறி அவரை தாக்கி அரை நிர்வாணமாக இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.  இது குறித்து தமிழகம் முழுவதும் கடும் சர்ச்சை எழுந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் … Read more

ஆபரேஷன் கங்கா – கடந்த 24 மணி நேரத்தில் 15 விமானங்களில் 3,000 மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர்

புதுடெல்லி: ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர். ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கிடையே, ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து இந்திய விமானப்படையின் சி-17 ரக போர் விமானம் மூலம் மேலும் 210 இந்தியர்கள் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தனர். டெல்லி வந்தடைந்த இந்தியர்களை பாதுகாப்புத்துறை இணை அதிகாரி அஜய் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,999,437 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,999,437 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 441,742,425 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 374,543,700 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 73,382 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அப்போலோ புரோட்டான் சென்டருக்கு சிறப்பு மருத்துவர் நாளை வருகை| Dinamalar

புதுச்சேரி-சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் ரூபேஷ்குமார், நாளை புதுச்சேரிக்கு வருகை தந்து மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.புதுச்சேரி அண்ணா நகர் 14வது குறுக்குத் தெரு, ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்திற்கு சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் நியூரோ சர்ஜரி சிறப்பு மருத்துவர் ரூபேஷ்குமார் நாளை 5ம் தேதி வருகை தருகிறார். காலை 9.௦௦ மணி முதல் மதியம் 2.௦௦ மணி வரை, மருத்துவ … Read more

பெங்களூருவில் 13-வது சர்வதேச திரைப்பட விழா – பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்

பெங்களூரு, கர்நாடக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 13-வது சர்வதேச திரைப்பட விழா பெங்களூருவில் நேற்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. வெளிநாட்டு படங்களும் இதில் பங்கேற்றுள்ளன இதன் தொடக்க விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது;- “கன்னட திரைப்படத்துறையை காப்பாற்ற வேண்டும் என்றால், மக்களின் மனங்களை வெல்லும் வகையில் படங்களை எடுக்க வேண்டும். திரைப்படங்களை எடுப்பதில் உயர்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். … Read more

இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையால் கவலை!

இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு கடந்த சில ஆண்டுகளாகவே இது போறாத காலம் எனலாம். ஆரம்பத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதற்கு பிறகு ஜிஎஸ்டி வருகை, பொருளாதார மந்தம், அதனை தொடர்ந்து கொரோனா, ஓமிக்ரான் என வரிசைக் கட்டிக் கொண்டு பிரச்சனையை ஏற்படுத்தி வந்தன. இன்றும் இந்தியாவில் மிகப்பெரியளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ள துறைகளில் ஒன்று ஆட்டோ மொபைல் துறை. பான் ஆதார் லிங்க் முதல் ITR தாக்கல் வரை.. 5 முக்கிய … Read more

22 ரஷ்ய கோடீஸ்வரர்களுக்கு தடை விதிக்க மறுக்கும் பிரித்தானியா: போரிஸ் ஜோன்சன் மீது கடும் விமர்சனம்

ரஷ்ய கோடீஸ்வரர்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்க பிரித்தானியா தடுமாறி வரும் நிலையில், போரிஸ் ஜோன்சன் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது உக்ரைன் விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கடும் நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது. இதுவரை 702 நபர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடைகள் விதித்துள்ளது. இதில் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களும், புடினுக்கு தொடர்புடைய 50 நிறுவனங்களும் உட்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் … Read more