பள்ளிகளை திறந்தாலும் கவனம் மிக அவசியம்| Dinamalar

புதுடில்லி:“பள்ளிகள் கல்லுாரிகள் விடுதிகள் ஆகியவற்றை திறக்கலாம். அதேநேரத்தில் நாம் மிகுந்த கவனத்துடனும் இருக்க வேண்டியதும் அவசியம் ” என ‘நிடி ஆயோக்’ உறுப்பினர் டாக்டர் பால் தெரிவித்துள்ளார்.நம் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கிடையே கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.இந்நிலையில் நிடி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் பால் கூறியதாவது: மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இந்நிலையில் பள்ளிகள் … Read more

ரஷ்யாவை காலி செய்யும் பணக்காரர்கள்.. சொந்த நாட்டு மக்களே வெளியேறும் அவலம்.. ஏன்!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது இன்னும் பூதாகரமாக வெடித்து வருகின்றது. உக்ரைன் மீது ஆக்ரோஷமாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவை, தாக்குதலை நிறுத்துமாறு பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் இதனை எதையும் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையால் கவலை! … Read more

இன்றைய ராசி பலன் | 04/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

ஒரு ஊருக்கு அனுப்பப்பட்ட 45 சவப்பெட்டிகள்… உக்ரைனில் இருந்து வெளிவரும் பகீர் தகவல்

உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் கை ஓங்கியுள்ளதாக தகவல் வெளியானாலும், கடந்த 8 நாட்களில் 9,000 ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளிவந்துள்ளது. உக்ரைன் தரப்பில் இருந்தே குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். மட்டுமின்றி, வெளியாகும் புகைப்படங்களும் குறித்த தகவலை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. இந்த நிலையில், ரஷ்ய துருப்புகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களை துணிந்து எதிர்கொள்ளும் உக்ரைன் துருப்புகளை உண்மையான மண்ணின் மக்கள் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார். மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவதாக சூளுரைத்த ரஷ்யாவின் … Read more

உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் குரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது! – பிரான்ஸ் தூதர்

பிரான்ஸ்: உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் குரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் தீர்மானிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவு கிடைத்தால் அது மிகவும் வரவேற்கத்தக்கது என்று கூறினார்.

கட்சியில் யாரை சேர்ப்பது, நீக்குவது என்பதை பொதுக்குழுவே முடிவெடுக்கவேண்டும் – கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டில் உள்ளாட்சி தேர்தல் தோல்வி தொடர்பாக தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்றும், வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் நிபந்தனையின்றி அ.தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், “காலம் கனியும். காத்திருங்கள்” என பதிலளித்தார். … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவுக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவுக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சிறப்புக் குழு, மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு தேவையான அனுமதியை வெளியுறவுத்துறை அமைச்சகம் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மாணவர்கள் வெளிநாடு செல்ல முந்தைய அரசுகளே காரணம்| Dinamalar

வாரணாசி:”மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு முந்தைய அரசுகளே காரணம்,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், உக்ரை னில் இருந்து மீட்டு வரப்பட்ட உ.பி.,யை சேர்ந்த மருத்துவ மாணவர்களுடன், பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:உக்ரைனில் இருந்து மீட்டு வரப்பட்ட பல மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் தங்கள் கோபத்தை என்னிடம் வெளிப்படுத்தினர். … Read more

தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்.. ஆகாஷ் அம்பானி சொல்வதை பாருங்க..!

இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமம், மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு வணிக நிறுவனமாகும். ரிலையன்ஸ் குழுமம் தற்போது பல்வேறு புதிய வணிகங்களில் களமிறங்கி வருவதோடு, மிகப்பெரிய முதலீடுகளையும் செய்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் பிசினஸ் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனம், அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான சான்மினா கார்ப்பரேஷனுடன் வணிக ரீதியிலான ஒப்பந்தம் செய்துள்ளது. தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. 3 … Read more

உக்ரைன் விவகாரம்: `ஐ.நா-வில் இந்தியாவின் குரல் முக்கியமானது!' – பிரான்ஸ் தூதர்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதலால் அந்த நாடு மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவித்தும், பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன. இந்த நிலையில், ஐ.நா. சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவின் குரல் முக்கியமானது என இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “உக்ரைனில் மக்கள் இறப்பதும், அகதிகளாக வெளியேறுவதும் வழக்கமாக … Read more