சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்கத்தின் தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை

சென்னை: சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்கத்தின் தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசில் பதிவு செய்யாமலும், 21 நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பை வெளியிடாமலும் தேர்தல் நடத்தப்படுவதாக கபடி வீரர் தொடர்ந்த வழக்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் பிணைக்கைதிகளாக இந்திய மாணவர்கள்? மத்திய அரசு மறுப்பு| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில், இந்திய மாணவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மத்திய அரசு, மாணவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: இந்திய மாணவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் வரவில்லை. கார்கிவ் மற்றும் அதன் அண்டை நகரங்களில் இருந்து உக்ரைனின் மேற்கு பகுதிக்கு இந்தியர்களை அழைத்து செல்ல சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்யும்படி அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். உக்ரைனில் … Read more

ரஷ்யா-வை ஒதுக்கிய உலக நாடுகள்.. 14வருட உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை.. ஒரு பேரல் எவ்வளவு தெரியுமா?!

உக்ரைன் மீதான தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ரஷ்யா மீது பல நாடுகள் அனைத்து விதமான தடையை விதித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி மீதான தடை மட்டும் விதிக்கவில்லை. ஆனாலும் ரஷ்யா மீது தடை விதித்த நாடுகள் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதைக் குறைத்துக் கொண்டு பிற நாடுகளிடம் இருந்து வாங்க துவங்கியுள்ளது. ஆனால் உலகில் எந்த நாடும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காத காரணத்தால் சர்வதேச … Read more

தஞ்சை மேயர்: முதல்வர் குடும்பத்துடன் நெருக்கம்… டிக்'கான சண்.ராமநாதன்! – பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாநகராட்சி தி.மு.க மேயர் வேட்பாளராக சண்.இராம நாதன், துணை மேயர் வேட்பாளராக டாக்டர் அஞ்சுகம் பூபதி அறிவிக்கப்பட்டுள்ளனர். மேயர் வேட்பாளர் சீட்டை பிடித்துவிட வேண்டும் என பலர் போட்டியிட்டாலும், ரேஸில் இந்த இருவர் தான் முன்னிலை வகித்தனர். கோடிகளில் செலவு செய்ய சிலர் தயாராக இருந்தும், உயதநிதி சண்.இராமநாதன் பெயரை டிக் செய்ததுடன் அவர்தான் வேட்பாளர் என்பதிலும் உறுதியாக இருந்து அறிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. சண்.இராமநாதன் தஞ்சாவூர் மாநகராட்சியில் மேயர் சீட்டை பிடிக்க தி.மு.க-வுக்குள் மத்திய மாவட்ட … Read more

எல்லை மீறும் ரஷ்யா! உக்ரைனில் செய்தி ஒளிப்பரப்பின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வெளியான வீடியோ

உக்ரைனில் நேரலையில் ஒருவர் செய்தி வாசித்து கொண்டிருந்த போது கட்டடத்துக்கு பின்னால் குண்டு மழை பொழிந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நேட்டோ அமைப்பு உக்ரைன் நாடுடன் சேர்வதை எதிர்த்து கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகின்றது. இந்த போர் சுமார் 8 நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் … Read more

சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம்…

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் விவரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னையில் நாளை (04-02-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி … Read more

ஆசிரியர் பணி நியமன போட்டித்தேர்வுக்கு எதிராக போராட்டம்- பட்டதாரிகள் கைது

சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்கப்பட மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் சென்னை பள்ளிக் கல்வி இயக்குநர் வளாகத்தில் கடந்த 28ம் தேதி உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.  பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமான பட்டதாரிகள் இதில் பங்கேற்றனர்.  சிலர் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர்.  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற … Read more

புதுச்சேரி, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை 1 கூண்டு ஏற்றம்

சென்னை: தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில்  உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் தூர முன்னறிவிப்பு குறியீடு 1 ஏற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட் சிகிச்சையில் 77 ஆயிரம் பேர்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்கள் எண்ணிக்கை 77 ஆயிரமாக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,561 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,29,45,160 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 14,947 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,23,53,620 ஆனது. தற்போது 77,152 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக … Read more

Future group – Amazon 18 மாத போராட்டம் முடிவு.. ரிலையன்ஸ்-க்கு அடித்த ஜாக்பாட்..!

இந்திய ரீடைல் சந்தை மொத்தமும் எதிர்பார்க்கும் மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தமாக இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் ரீடைல்-ஐ எதிர்த்து அமேசான் போட்ட வழக்கு மாபெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் நிலையில், தற்போது 18 மாத போராட்டத்திற்கு விடிவு காலம் கிடைத்துள்ளது. அமேசானுக்குப் போட்டியாகப் பியூச்சர் குரூப் நிறுவனமும் அடுத்தடுத்து வழக்கு தொடுத்து வரும் நிலையில், இன்று நடந்த வழக்கு விசாரணையில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்தத் திருப்பத்தின் மூலம் ரிலையன்ஸ் ரீடைல், பியூச்சர் ரீடைல், … Read more