சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான தனது அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான தனது அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான ராக்கெட் எஞ்சின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாக  ரஷ்யா அறிவித்துள்ளது. நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகள்தான் அணு ஆயுத போர் குறித்து பேசிவருகிறார்கள் என ரஷ்யா கூறியுள்ளது.

ஊதிய உயர்வு பெற்ற வவுச்சர் ஊழியர்கள் அலகு குத்தி முதல்வருக்கு நன்றி| Dinamalar

புதுச்சேரி: வாக்குறுதி அளித்தவாறு சம்பளத்தை உயர்த்தி கொடுத்த முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்து, பொதுப்பணி துறை வவுச்சர் ஊழியர்கள் அலகு குத்தி, ஊர்வலமாக சென்றனர். புதுச்சேரி பொதுப்பணி துறையில் பணியாற்றி வரும் 1,311 வவுச்சர் ஊழியர்களுக்கு மாத சம்பளம் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதற்கு, கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கினார். அதையடுத்து, வவுச்சர் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார்.ஊதிய உயர்வு … Read more

ரஷ்யாவுக்கு அடுத்த அடி.. மூடிஸ், ஃபிட்ச்-ன் அறிவிப்பு தான் காரணம்..!

ரேட்டிங் நிறுவனங்களான ஃபிட்ச் மற்றும் மூடிஸ் ஆகியவை, ரஷ்யா மீதான தரத்தினை குறைத்துள்ளன. இதனால் ரஷ்யாவுக்கு என்ன பாதிப்பு? எதற்காக இந்த ரேட்டிங்குகள் கொடுக்கப்படுகின்றன. உண்மை நிலவரம் தான் வாருங்கள் பார்க்கலாம். ஒரு மனிதனுக்கு கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? அதனை அவரால் திரும்ப செலுத்த முடியுமா? முடியாதா? என்பதைத் தான் கிரெடிட் ஸ்கோர் என்கிறார்கள். அதே போல ஒரு நாட்டின் ரேட்டிங்கினை பொறுத்து அந்த நாட்டுக்கு கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? அந்த நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு கடன் … Read more

“அதிமுக முடிவைப் பொறுத்திருந்து பார்ப்போம்!” – டிடிவி தினகரன் சொல்வதென்ன?

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓபிஎஸ், அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அதிமுக செயலாளர் சையது கான் தலைமை தாங்கினார். தேர்தல் தோல்வி காரணமாக சசிகலா, டி.டி.வி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தேனி அதிமுக மாவட்டச் செயலாளர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலா, தினகரன் இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கட்சியில் … Read more

போர் ரஷ்யாவுடனோ ரஷ்ய மக்களுடனோ அல்ல… புடினுடன் மட்டும்தான்: பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வலியுறுத்தல்

உலகம் ரஷ்யாவுடனோ அல்லது ரஷ்ய மக்களுடனோ போர் செய்யவில்லை என்றும், போர், புடினுடன் மட்டும்தான் என்றும் கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான். உக்ரைனில் நடக்கும் போர் குறித்து தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய மேக்ரான், உக்ரைனில் நேட்டோ படைகள் இல்லை என்றும், ரஷ்யா தாக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். உலகம் அறிந்த வண்ணமாக ரஷ்யாவிலும் பல்வேறு நாடுகளிலும் வாழும் ரஷ்யர்களே போரை எதிர்த்து பேரணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சரணடையும் ரஷ்ய வீரர்களை உக்ரைன் மக்கள் அன்புடன் வரவேற்று உணவளிப்பதைக் … Read more

உள்ளாட்சியிலும் மலர்ந்தது திமுக ஆட்சி: 20 மேயர், 15துணைமேயர், 126 நகராட்சிதலைவர் உள்பட 1201 தலைமை பதவிகளுக்கு திமுக போட்டி….

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளில் 20 மேயர், 15துணைமேயர், 126 நகராட்சிதலைவர் உள்பட 1201 தலைமை பதவிகளுக்கு திமுக போட்டியிடுகிறது. உள்ளாட்சி யிலும் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளதால், உள்ளாட்சியிலும் திமுக ஆட்சி மலர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்  நடைபெற்று முடிந்தது. அதன்படி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சி கள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று, 22ந்தேதி எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 21 மாநகராட்சிகளில் … Read more

20 மாநகராட்சியில் மேயர், துணை மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களின் முழு விவரம்

சென்னை: தி.மு.க. தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளை நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர்- துணை மேயர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:- சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆர் பிரியாவும், துணை மேயர் பதவிக்கு மு. மகேஷ் குமாரும் போட்டியிடுகிறார்கள். மதுரை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு இந்திராணியும், திருச்சி மாநகராட்சியில் மேயர் பதவிக்கு மு.அன்பழகனும், துணை மேயர் பதவிக்கு திவ்யா தனக்கோடியும் போட்டியிடுகிறார்கள். … Read more

கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக விளம்பர பலகைகள் வைக்க உத்தரவிட முடியாது.: ஐகோர்ட் கருத்து

சென்னை: அனைத்து கோயில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆடை கட்டுப்பாடு அமலில் உள்ள கோயில்களில் மட்டும் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என ஐகோர்ட் கூறியுள்ளது.

உலக தரத்தில் பொருட்கள் உற்பத்தி: பிரதமர் வலியுறுத்தல்| Dinamalar

புதுடில்லி: உள்ளூர் உற்பத்தியாளர்கள், உலகளவிலான தரத்தை பேண வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பட்ஜெட்டிற்கு பிறகு, ‘உலகத்திற்காக மேக் இன் இந்தியா’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் கவனம் செலுத்துவதுடன், தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். செமி கண்டக்டர்கள் உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற வேண்டும். ‘மேக் இன் இந்தியா’ காலத்தின் கட்டாயம்.இந்த திட்டம் தற்போதைய காலத்தின் தேவை … Read more

ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய இந்தியா முடிவு.. புதிய திட்டம் தீட்டும் ஆர்பிஐ..!

உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் நிதியியல் தடைகளை விதித்த நிலையில், இந்தியா மட்டும் ரஷ்யா உடனான நீண்ட கால நட்பை முக்கியமானதாகக் கருதி எவ்விதமான தடையும் விதிக்கவில்லை. இதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் தடை விதிக்கும் கூட்டணியில் இருந்து இந்தியா ஒதுங்கியது. இந்நிலையில் இந்தியா ரஷ்யா உடன் முன்பை விடவும் அதிகமாக வர்த்தகம் செய்ய முடிவு செய்து உள்ளது. இதற்காக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் … Read more