திருப்பூர் துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது திமுக

திருப்பூர்  :திருப்பூர் துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது திமுக . கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவியையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது திமுக.

சிட்லகட்டாவில் பட்டு மார்க்கெட் நாராயண கவுடா நம்பிக்கை| Dinamalar

சிக்கபல்லாபூர்-சிட்லகட்டா நகரின் அரசு பட்டு கூடு மார்க்கெட்டை, மாநில பட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் நாராயணா கவுடா நேற்று பார்வையிட்டார். அப்போது, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பட்டு மார்க்கெட் புனரமைக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.பட்டுத்துறை அமைச்சரான பின், முதன் முறையாக, உலக பிரசித்தி பெற்ற, சிக்கபல்லாபூர் சிட்லகட்டா நகரின் பட்டு மார்க்கெட்டுக்கு, அமைச்சர் நாராயண கவுடா நேற்று வந்தார். விவசாயிகள், தொழிலாளர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.பின் அவர் பேசியதாவது:மார்க்கெட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க … Read more

வெளிநாடு செல்லும் மாணவர்கள் குறித்து மத்திய மந்திரி கருத்து – டி.கே.சிவக்குமார் கண்டனம்

பெங்களூரு, குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் படிக்க வெளிநாடுகளுக்கு செல்வதாகவும், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களில் 90% பேர் இந்தியாவில் நுழைவுத் தேர்வில் கூட தேர்ச்சி பெறுவதில்லை என்றும் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியிருந்தார்.  இது குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது;- “உக்ரைனில் கர்நாடக மாணவர் நவீன், ரஷியாவின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளார். மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, இந்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் உக்ரைனில் சென்று படிக்கிறார்கள் … Read more

20 ஆண்டு திட்டம்… 45 வயதிலேயே ஓய்வுகாலத்திற்கு ஏற்ற அசத்தலான திட்டம்.. ரெடியாகிக்கோங்க..!

இன்றைய காலகட்டத்தில் பலரும் நினைப்பது இளமை காலகட்டத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. ஓய்வூகாலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டும் என நினைப்பர். ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும். எதில் முதலீடு செய்யலாம், வாருங்கள் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் டெக் நிறுவனங்களில் பணிபுரியும் பலரும் நினைப்பது, கொஞ்ச காலத்திற்கு பணிபுரிந்து விட்டு, பிறகு நிம்மதியாக சொந்த ஊரில் ஏதேனும் வணிகத்தினை செய்து வாழவே விரும்புகின்றனர். இதே தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஒரு கட்டத்திற்கு மேல், அரசு ஊழியர்களைப் போலவே … Read more

ஹீரோ எலெக்ட்ரிக் Eddy ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் குறைந்த வேகத்தில் பயணிக்கும் Eddy ஸ்கூட்டர் ₹ 72,000 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை கொண்டுள்ள எடி ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவெண் பெற வேண்டிய அவசியம் இல்லை. ஹீரோ எடியின் விரிவான விவரக்குறிப்புகள் விரைவில் நடைபெறும் அறிமுக விழாவில் வெளிப்படுத்தப்படும். முழு பேட்டரி வரம்பு வெளியிடப்படவில்லை என்றாலும், அது … Read more

முந்தும் முன்னாள் எம்எல்ஏ… உறவினரை முன்னிறுத்தும் சிட்டிங் எம்எல்ஏ! -பரபரக்கும் ஓசூர் மேயர் ரேஸ்

பழைமையும், பெருமையும் தாங்கிப்பிடிக்கும் வணிக வீதிகளையும் சந்தைகளையும் கொண்ட ஓசூர் மாநகராட்சியின் மேயர் பதவியைக் கைப்பற்றுவதில் தி.மு.க புள்ளிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த ஓசூர் 2019-ல்தான் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 45 வார்டுகளை உள்ளடக்கி, முதல் முறையாக மாமன்ற தேர்தலைச் சந்தித்த இந்த மாநகராட்சியும் தி.மு.க-வின் வசமாகியிருக்கிறது. தி.மு.க 21 வார்டுகளிலும், அதன் கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க 16 வார்டுகளிலும், சுயேட்சைகள் 5 … Read more

டி20 கோப்பையை எடுத்துக் கொண்டு ரோகித் சர்மா சந்தித்த இந்த நபர் யார் தெரியுமா?

இலங்கை அணியுடனான டி20 தொடரில் கோப்பையை வென்ற ரோகித் சர்மா ஒரு நபரின் கையில் அதனைக் கொடுத்து அழகு பார்த்தார். இதுகுறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.  எப்போதும் இந்திய அணிஒரு தொடரின் கோப்பையை கைப்பற்றும் போது அணியில் யாரேனும் இளம் … Read more

ஷாருக் கான் நடிக்கும் பதான் அறிவிப்பு வெளியானது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் ஹீரோவாக நடித்து 2018 ம் ஆண்டு வெளியான ஜீரோ திரைப்படத்திற்குப் பின் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த ஷாருக் கான் நீண்ட இடைவெளிக்குப் பின் பதான் என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக இன்று அறிவிப்பு வெளியிட்டார். தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. I know it’s late… But … Read more

உக்ரைன்-ரஷியா இடையே இன்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை

பெலாரஸ்: உக்ரைன்-  ரஷியா இடையேயான போர்  நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்குள்ள முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.  போர் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.பொதுச் சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ரஷ்யாவும், உக்ரைனும் மத்தியஸ்தம் மற்றும் அமைதியான வழிமுறைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் … Read more

மார்ச்-03: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.