பலத்த பிரச்சனையை எதிர்கொள்ள போகும் 51 நிறுவனங்கள்.. ரஷ்யாவால் வந்த விளைவு.. ஏன்?

ரஷ்யா – உக்ரைன் போருக்கு மத்தியில் பல்வேறு நாடுகள் பொருளாதார தடையை விதித்து வருகின்றன. இதற்கிடையில் பல்வேறு நாட்டினை சேர்ந்த நிறுவனங்களும் ரஷ்ய நிறுவனங்களுடனான வணிக உறவினையே முறித்துக் கொண்டு வருகின்றன. இதற்கிடையில் மூடிஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனம், 51 ரஷ்ய நிறுவனங்களின் ரேட்டிங்ஸை குறைக்க திட்டமிட்டுள்ளது. ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..! இது ஏற்கனவே பங்கு சந்தையில் பெரும் சரிவினைக் கண்டுள்ள நிலையில், மேற்கொண்டு சரிவினைக் காண வழிவகுக்கலாம். தர மதிப்பீடு பிப்ரவரி 25 … Read more

உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் இல்லை: முக்கிய ஐரோப்பிய நாடு அறிவிப்பு

ரஷ்யாவுக்கு எதிராக துருப்புகளை களமிறக்கவோ உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை அனுப்பவோ தாங்கள் தயாராக இல்லை என ஹங்கேரி பகிரங்கமாக அறிவித்துள்ளது. குறித்த தகவலை ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் Peter Szijjarto புதன்கிழமை அறிவித்துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஹங்கேரி, துருப்புகளை அனுப்புவதில்லை எனவும் ஆயுதங்களை வழங்கவும் தயாரில்லை என்பதுடன், ஹங்கேரி ஊடாக ஆபத்தான ஆயுதங்களை உக்ரைனுக்கு கொண்டு செல்வதையும் தடை செய்துள்ளது. மேலும், அண்டை நாடான உக்ரைனில் இருந்து அடையாளம் தெரியாத ஆயுதக் குழுக்களின் … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் நிலை கேள்விகுறி… பிணைக்கைதிகளாக இருப்பதாக ரஷ்யா உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு

உக்ரைனில் படித்து வந்த சுமார் 20,000 இந்தியர்களில் இதுவரை சுமார் 3,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ளவர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. கார்கிவ், சுமி ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிணைக்கைதிகளாக உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. Ukraine Foreign Affairs Ministry “urgently calls on govt of India, Pakistan, China &other counties … Read more

உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது – ரஷியா அதிர்ச்சித் தகவல்

கார்கிவ் : உக்ரைன் – ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் நேற்று உத்தரவிட்டிருந்தது.  கார்கிவ்வில் தங்கியுள்ள இந்தியர்கள்,  பெசோசின், பபாயி, பெஸ்லியுடோவ்கா ஆகிய பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டிருந்தது.  இதற்காக உக்ரைன் நாட்டு நேரப்படி நேற்று மாலை 6 மணிவரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுவதில் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.  … Read more

இன்றும்(மார்ச் 3), நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும்: இந்திய வானிலை மையம்| Dinamalar

புது டில்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் இன்றும்(மார்ச் 3) மற்றும் நாளை (மார்ச் 4) ஆகிய தேதிகளில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய … Read more

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.51 கோடி உண்டியல் வருமானம்

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள். கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் சராசரியாக 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்களும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என வார நாட்களில் 80 ஆயிரத்தில் இருந்து 95 ஆயிரம் பக்தர்களும், வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம் போன்ற விழா நாட்களில் … Read more

ரஷ்ய முதலாளிக்கு ஆப்பு வைத்த உக்ரைன் ஊழியர்.. துளியும் வருத்தம் இல்லையாம்..!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் போர் உலக நாடுகள் மத்தியில் பதற்றமான நிலை உருவாக்கியுள்ளது, இந்நிலையில் உக்ரைன் மக்கள் மத்தியில் ரஷ்யா மீதான வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது. ரஷ்ய அரசின் இந்தப் போரை எதிர்த்து ரஷ்ய நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், உக்ரைன் மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ள வெறுப்புணர்வு, கோபம், சோகம், கண்ணீரை விளக்க வார்த்தைகள் இல்லை. இந்த நிலையில் ஸ்பையின் நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம், உக்ரைன் ஊழியர் ஒருவர் ரஷ்ய முதலாளியைப் … Read more

ரஷ்ய துருப்புகளின் வெறியாட்டம்… மொத்தமாக சிதைந்த உக்ரைன் நகரம்: வெளிவரும் பகீர் தகவல்

ரஷ்ய துருப்புகளின் தொடர் 15 மணி நேர உக்கிர தாக்குதலுக்கு பின்னர் உக்ரேனிய நகரம் மரியுபோல் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய துருப்புகள் மொத்தமாக சுற்றிவளைத்து உக்கிர தாக்குதல் மேற்கொண்டதாகவும், மரியுபோல் நகரம் மொத்தமாக சிதைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 450,000 மக்கள் குடியிருக்கும் மரியுபோல் நகரை சிதைக்க வேண்டும் என ரஷ்ய திருப்புகள் திட்டமிட்டே தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மட்டுமின்றி, மின்சாரம், குடிநீர் சேவைகள் என அனைத்தையும் துண்டித்துள்ளதும், முக்கிய பகுதிகளில் கடுமையான தாக்குதலை முன்னெடுத்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. மேலும், … Read more

அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும் – தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தல்

தேனி: அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும் – தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு கூட்டணியில் பாஜக சேர்த்து கொண்டதுதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட கட்சியின் சில பெருந்தலைகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். அப்படியிருந்தும் அத்தேர்தலில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதிமுகவால் ஏன் வெற்றி பெற முடியவில்லை’ என்று அதிமுகவின் தீவிர அபிமானிகள் கேட்கும் அளவுக்கு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக அமைந்துவிட்டன. … Read more

தர்க்கம் செய்வதற்கு இது நேரமல்ல, நீட் தேர்வை ரத்து செய்வதே உடனடி இலக்கு- முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிளஸ் 2 தேர்வில் 97 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தனது மருத்துவக் கனவை நனவாக்கிட உக்ரைன் நாட்டிற்குச் சென்று படித்த கர்நாடக மாநிலத்து மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கின்றது. உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமலும்- தங்களது மருத்துவக் கனவு என்ன ஆகுமோ என்ற கவலையிலும், பெரும் இன்னல்களை … Read more