உக்ரைனில் இருந்து இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற உதவுங்கள்… புதினிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: ரஷியா-உக்ரைன் போர் 7வது நாளாக இன்றும் நீடிக்கிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறும்படி இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.  இதனால் இந்தியர்கள் கார்கிவ் நகரில் இருந்து வெளியேறியவண்ணம் உள்ளனர்.  ஆனால் அவர்கள் கார்கிவ் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.  உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் பேசினார். அப்போது, உக்ரைனில் தற்போதைய … Read more

பிசிசிஐ வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தத்தில் ரஹானே , புஜாரா GRADE Aவில் GRADE B மாற்றம்..!

மும்பை: பிசிசிஐ வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தத்தில் ரஹானே , புஜாரா GRADE Aவில் GRADE B மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா GRADE Bல் இருந்து GRADE C மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய மாணவர் அனைவரையும் மீட்க மத்திய அரசு முழு முயற்சி: தமிழிசை| Dinamalar

புதுச்சேரி : ‘உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு முழு முயற்சி மேற்கொண்டுள்ளது’ என கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.கடற்கரை சாலையில், ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது:இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து நேர்ந்தால், உயிரிழப்புகளை ஹெல்மெட் தடுக்கும். எனவே, இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும். அதுபோல், வைரஸ் தொற்றில் இருந்து முக கவசம் நம்மை பாதுகாக்கும்.உக்ரைனில் இருந்து அழைத்து வரப்படும் மாணவர்கள் எந்த மாநிலத்தவர் என்ற … Read more

வல்லரசு நாடுகள் ரஷ்யாவுக்கு வைக்கும் புதிய செக்.. புதின் என்ன செய்யப் போகிறார்..!

ரஷ்யா ஒரு நாளைக்கு 11 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. இதில் பாதி உற்பத்தியை உள்நாட்டு தேவைக்காக இதுநாள் வரையில் பயன்படுத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மீதான போர் காரணமாக இராணுவ உபகரணங்களுக்குக் கூடுதலான எரிபொருள் தேவைகள் காரணமாக உள்நாட்டு தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதி செய்யும் அளவீட்டில் தடுமாற்றம் ஏற்பட்டு தினமும் 5 மில்லியன் முதல் 6 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக நாடுகள் ரஷ்யா மீது பல … Read more

“இந்திய மாணவரின் மரணத்துக்கு நீட் தான் காரணம்" – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி காட்டம்!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மருத்துவம் பயிலும் மாணவர், உக்ரைனில் உயிரிழந்தார். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி , “நவீன் மரணத்துக்கு நீட் தான் காரணம்” என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 96 சதவிகிதமும், பி.யூ.சி-யில் 97 சதவிகிதமும் மதிப்பெண் பெற்ற நவீனுக்கு இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதனால்தான், … Read more

ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் சிஎஸ்கே நட்சத்திர வீரர்! சென்னை அணிக்கு பெரிய இழப்பு

 2022 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளிலிருந்து சிஎஸ்கே நட்சத்திர வீரர் தீபக் சாஹர் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாஹர் குறைந்தபட்சம் எட்டு வாரங்கள் விலகுவார், இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் பாதி போட்டிகளை அவர் தவறவிட நேரிடும் என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் தீபக் சாஹரை சென்னை அணி 14 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிப்ரவரி 20ம் திகதி கொல்கத்தாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான … Read more

உக்ரைன் போலந்து எல்லையில் பல சவால்களை சந்தித்து வந்த இந்திய மாணவர்களை காங்கிரஸ் கட்சியின் ஐரோப்பிய பிரிவு மீட்டது…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் போலந்து எல்லை வழியாக இந்திய மாணவர்களை மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளனர். உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக அங்கிருந்து வெளியேற விரும்பும் மாணவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க பிப். 15ம் தேதி அங்குள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டது. பிப். 20, 22, 24 ஆகிய தேதிகளில் மூன்று சிறப்பு விமானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிப். 18 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. Amidst a lot … Read more

தமிழகத்தில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று- 4 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 320 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 50 ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது.  எந்த மாவட்டத்திலும் மூன்று இலக்கத்தில் புதிய பாதிப்பு இல்லை. அதிகபட்சமாக சென்னையில் இன்று 89 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 45 … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதில் அக்கறை செலுத்துங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதில் அக்கறை செலுத்துங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பது ஒன்றிய அரசின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் மீது குற்றம் சுமத்துவதை நிறுத்திவிட்டு அவர்களை மீட்பதில் அக்கறை காட்டுங்கள் என தெரிவித்துள்ளார்.

ஒரேநாளில் 6 விமானங்கள் மூலம் 1,700 பேர் மீட்பு

உக்ரைன் நாட்டில் இருந்து ஒரேநாளில் இந்தியர்கள் 1,700 மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: ஆறு விமானங்கள் மூலம் இந்தியர்கள் சொந்த நாடு திரும்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை பார்வையிட ருமேனியா நாட்டிற்கு சென்று உள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டில் இருந்து ஒரேநாளில் இந்தியர்கள் 1,700 மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: ஆறு விமானங்கள் மூலம் இந்தியர்கள் சொந்த நாடு … Read more