குடும்பமே சேர்ந்து முறைகேடு.. கம்பெனி பணத்தை மிஸ்யூஸ் பண்ணிருக்காங்க.. பாரத்பே மோசடிகள்!

பாரத் பே நிறுவனத்தில் நிதி முறைகேடு குற்றசாட்டின் பேரில் பல மோசடிகள் நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த வாரத்தில் பாரத்பே-வின் கட்டுப்பாட்டாளர் மாதுரி ஜெயின் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் அழகு பராமரிப்பு, விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்க, வெளி நாட்டு பயணம் உள்ளிட்டவற்றிக்காக பல கோடி ரூபாய் நிறுவன பணத்தில் செலவு செலவு செய்துள்ளதாக குற்றச் சாட்டும் உள்ளது.. இந்த நாடுகளில் 4 நாள் மட்டுமே வேலை, 3 நாட்கள் விடுமுறை.. இந்தியாவில் எப்போது..! … Read more

அதிமுக கவுன்சிலர்கள் பதவியேற்பில் பாரபட்சமா?!பிரிக்கப்பட்ட மேடை மீண்டும் அமைக்கப்பட்டது ஏன்?!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் இருக்கின்றன. இவற்றுக்குக் கடந்த 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், ராமேஸ்வரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க 11 இடங்களையும், அ.தி.மு.க 6 இடங்களையும், காங்கிரஸ் 1 இடத்தையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றினர். அலங்காரம் கலைக்கப்படும் மேடை இந்த நிலையில், ராமேஸ்வரம் நகராட்சி தேர்தலில் … Read more

கைப்பற்றிவிட்டோம்! ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் தொடர்ந்து 7வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 24 அன்று, ரஷ்யா உக்ரைனில் ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இந்நிலையில், உக்ரைனின் கெர்சன் நகரை ரஷ்ய இராணுவ படைகள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.  ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Igor Konashenkov கூறியதாவது, கெர்சன் நகரில் உணவு … Read more

296 யோசனைகள்: 15வது ஆண்டாக வேளாண் நிழல் பட்ஜெட்டை வெளியிட்டது பாமக…

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி இன்று தனது 15வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசுக்கு  296 யோசனைகளை தெரிவித்துள்ளது. டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக, விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் போட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக ஆண்டு தோறும் நிழல் பட்ஜெட்டையும் தாக்கல் செய்து வருகிறது. இந்த நிலையில், ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கடந்த ஆண்டு (2021) பதவி ஏற்றதும், தமிழக வரலாற்றில் முதன்முறையாக … Read more

தமிழகம் முழுவதும் கோவில்களில் ரூ.120 கோடி வாடகை வசூல்- அமைச்சர் தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- கணினி வழியாக திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் 01.07.2021 முதல் நாளது தேதி வரை ரூ.120 கோடியே 18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அதிக வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான கோவில்களான சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ரூ.4.28 கோடியும், பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.3.23 … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் நடக்கும் விசாரணை திங்கட்கிழமை முதல் நிறுத்தம்: தலைமை நீதிபதி அமர்வு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் நடக்கும் விசாரணை திங்கட்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. காணொளி மற்றும் நேரடி விசாரணை என இருவேறு விசாரணை நடத்தும்போது பல சிக்கல் எழுகின்றன என நீதிபதிகள் கூறியுள்ளனர். தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்களுக்கு மட்டும் காணொளி மூலம் வாதிட அனுமதிக்கப்படுவர் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

பிரதமரின் தாயார் எடைக்கு நிகரான தங்கம்; காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நன்கொடை| Dinamalar

வாரணாசி: பிரதமரின் தாயார் எடைக்கு நிகரான 60 கிலோ தங்கத்தை வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோவிலுக்கு பிரதமர் மோடியின் தாயாரின் எடைக்கு நிகரான தங்கத்தை தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது. நன்கொடை அளித்தவரின் விவரங்கள் வெளியாகவில்லை. மாறாக, தான் தீவிர மோடியின் ரசிகர் எனவும், பிரதமர் மோடியின் தாயாரான … Read more

பான் ஆதார் லிங்க் முதல் ITR தாக்கல் வரை.. 5 முக்கிய விஷயங்களை மார்ச் இறுதிக்குள் செய்யணும்!

மார்ச் மாதம் தொடங்கி இன்றுடன் இரண்டு நாள் தான். ஆனால் மார்ச் கடைசிக்குள் செய்ய வேண்டிய அவசியமான 5 அவசியமான வேலைகளை பல உள்ளன. அவற்றை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம். மார்ச் மாதம் கடைசி என்பது வெறும் நிதியாண்டு முடிவு மட்டும் அல்ல, பற்பல அறிவிப்புகளுக்கும் கடைசி நாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அப்படி என்னென்ன அவசியமான விஷயங்கள் உள்ளன. நினைவில் கொள்ள வேண்டியவை எவை? இதனை செய்யாவிட்டால் என்னென்ன பிரச்சனைகளை … Read more

`சாதிய பாகுபாடு, நிரப்பப்படாத இடங்கள், மாணவர் இடைநிற்றல்!' – 4 ஐ.ஐ.டி-களின் அதிர்ச்சி தகவல்கள்

“ஐ.ஐ.டி எனப்படும் உயர்கல்வி நிறுவனத்தின் சென்னை வளாகத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கொடுமைகளும் அநீதிகளும் இழைக்கப்படுகின்றன. இதற்கு அந்த ஐ.ஐ.டி நிறுவனம், ஆர்.டி.ஐ மூலமாகத் தந்திருக்கும் ஆவணங்களே சாட்சி” என்று அதிர வைக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் கார்த்திக். “எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்களைப் பொறுத்தவரை மொத்தம் 22.5% மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், அதிகபட்சமாக 17% மாணவர்கள்தான் சேர்க்கப்படுகிறார்கள். மொத்தமுள்ள ஆசிரியப் பணியிடங்களில் வெறும் 3% பேர்தான் அட்டவணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்” என்று … Read more

உக்ரைன் தலைநகரை நெருங்கும் ரஷ்யப் படை: தப்புவதற்காக மக்கள் மேற்கொண்ட கடைசி நேர நடவடிக்கை

உக்ரைன் தலைநகரை ரஷ்ய இராணுவத்தின் பிரிவு ஒன்று நெருங்குவதை அறிந்து மக்கள் ரயிலில் ஏறித் தப்ப முயல்வதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு உக்ரைன் தலைநகர் Kyivஇல், குடியிருப்புப் பகுதிகளில் வான்வெளித்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தின் ஒரு முழு பிரிவு, சுமார் 15,000 இராணுவ வீரர்கள் கொண்ட இராணுவப் பிரிவு ஒன்று நெருங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. அத்துடன், தென் கிழக்கு திசையிலிருந்து மற்றொரு படைப்பிரிவும் Kyivஐ நெருங்குவதாகவும், உக்ரைன் தலைநகரை சுற்றி வளைப்பது அதன் திட்டம் … Read more