“மீண்டும் அவரை தொடர்பு கொண்டபோது..!’’ – உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன்… நடந்ததை விவரிக்கும் நண்பர்

ரஷ்யா – உக்ரைன் போரில் கர்நாடக மாநில ஹாவேரி பகுதியைச் சேர்ந்த 21 வயதான நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். அவர் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், அவரின் நண்பர் ஶ்ரீகாந்த் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “கடந்த 5 நாள்களாக உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் அடித்தளத்தில் நானும், நவீன் இன்னும் சில நண்பர்கள் பதுங்கியிருந்தோம். கார்கிவிலிருந்து வெளியேறுவது உயிரைப் பணயம் வைப்பதற்குச் சமம் … Read more

வேப்ப மரத்தின் சாறு கொரோனாவை ஒழித்துக்கட்டும்: ஆராய்ச்சி முடிவு

புதுடெல்லி : கொரோனா வைரஸ் பற்றியும், அதை ஒழித்துக்கட்டுவதற்கான மருந்துகள் குறித்தும் இன்றும் உலகளாவிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அப்படி ஒரு ஆராய்ச்சியை கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் (ஐஐஎஸ்இஆர்) ஆராய்ச்சியாளர்கள் நடத்தி உள்ளனர். இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:- * இந்தியாவை பூர்விகமாக கொண்டுள்ள வேப்ப மரம், ஒட்டுண்ணி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு சக்திக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. * வேப்ப மரத்தின் … Read more

உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைகளால் தாக்கி கோரத்தாண்டவம்

கீவ்: உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைகளால் தாக்கி கோரத்தாண்டவம் நடத்தி வருகிறது. கீவ் நகரில் உள்ள தொலைக்காட்சி டவர் ஒன்று தகர்க்கப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

காற்று மாசு உயிரிழப்பு; 2.5 மடங்கு அதிகரிப்பு| Dinamalar

புதுடில்லி: நாட்டில், காற்று மாசுபாடு காரணமாக நிகழும் உயிரிழப்புகள் 20 ஆண்டுகளில் 2.5 மடங்கு அதிகரித்து உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையின் விபரம்:காற்று மாசு நுரையீரல்மற்றும் சுவாசக்குழாயில் ஊடுருவி நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதுடன்,இதய மற்றும் சுவாச பிரச்னைகளை உருவாக்குகிறது. இந்தியாவில் 2019ல் நால்வரில் ஒருவரின் மரணத்திற்கு காற்று மாசு காரணமாக இருந்து உள்ளது. அதேபோல், 2019ல் சர்வதேச அளவில் காற்று மாசு தொடர்பான உடல் … Read more

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.33 கோடி உண்டியல் வருமானம்

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள். கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் சராசரியாக 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்களும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என வார நாட்களில் 80 ஆயிரத்தில் இருந்து 95 ஆயிரம் பக்தர்களும், வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம் போன்ற விழா நாட்களில் … Read more

தோஷிபா கார்ப் CEO திடீர் ராஜினாமா.. ஏன்.. என்ன காரணம் தெரியுமா?

ஜப்பானை சேர்ந்த மல்டி நேஷனல் நிறுவனமான தோஷிபா கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சடோஷி சுனகாவா திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது திருத்தப்பட்ட மறுசீரமைப்புத் திட்டங்கள், பங்குதாரர்களிடமிருந்து நீண்டகால கோபத்துடன் நிறுவனத்திற்குள் எதிர்ப்பினை தூண்டியுள்ளது. இதற்கிடையில் தான் இந்த பதவி விலகல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. 2800 பேர் பணி நீக்கம்.. CEO ராஜினாமா.. பெலோட்டனில் அதிரடியான பல மாற்றங்கள்..! மறுசீரமைப்பு தொடரும் பலவேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் நிறுவனம் அதன் மறுசீரமைப்பு திட்டத்தினை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

எதற்கும் தயார்… ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளிப்படை

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருக்கும் ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்துவரும் நிலையில், சீனா மற்றும் பெலாரஸ் நாடுகள் மட்டும் ரஷ்யாவை இதுவரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால் பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கா மற்றும் கனடா, மெக்சிக்கோ நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருக்கும் ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிராக தமது … Read more

உக்ரைனில் உயிருக்கு போராடும் இந்திய மாணவர்கள்… இந்திய தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன ?

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த இரண்டு மாதங்களாக ரஷ்ய ராணுவம் அதன் எல்லையில் தயார் நிலையில் காத்திருந்தது. ரஷ்ய படையினரின் ஒரு பிரிவு தங்கள் நிலைகளுக்கு திரும்புகிறது என்று ரஷ்யா கூறுவதை ஏற்க வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரித்தது. அந்த நிலையில், பிப்ரவரி 15 ம் தேதி உக்ரைனில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் இங்கு தங்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுபவர்கள் பதற்றமான சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக இந்தியா செல்லலாம். அவ்வாறு இந்தியா செல்ல … Read more

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்பு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 22-ந் தேதி வெளியாகின.  இந்த தேர்தலில் வெற்றிபெற்ற 12,838 வார்டு கவுன்சிலர்கள் இன்று காலை பதவி ஏற்கிறார்கள் இதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செய்யப்பட்டுள்ளன.  காலை 9.30 மணிக்கு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்குகிறது. சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க. 153 வார்டிலும், அ.தி.மு.க. 15 வார்டிலும் வெற்றி பெற்றது.  காங்கிரஸ் 13 … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,982,918 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.82 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,982,918 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 438,387,799 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 370,760,815 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 74,434 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.