உக்ரைன் தலைநகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறி விட்டனர் – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக, உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்களை பத்திரமாக தாய் நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளதாவது: உக்ரைன் தலைநகர் கீவ்- இல் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறி விட்டனர். எங்களிடம் உள்ள தகவல் என்னவென்றால், இந்தியர்கள் யாரும் கீவ்-இல் இல்லை, யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை.  எங்களது இந்தியர்கள் … Read more

இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி: 50% பார்வையாளர்களுக்கு அனுமதி

மும்பை: மொகாலியில் வரும் 4ஆம் தேதி தொடங்கும் இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண 50% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்திய வீரர் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

உக்ரைனில் வன்முறை கூடாது ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்| Dinamalar

நியூயார்க்: ‘உக்ரைனில் வன்முறையை நிறுத்தி, ரஷ்யா – உக்ரைன் இரண்டும் நேர்மையான முறையில் பேச்சு நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’ என, ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இரு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஐ.நா., பொதுச் சபையின் சிறப்பு அவசர கூட்டம் நடந்தது. இதில், ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:உக்ரைன் நிலவரம் மோசமாகி வருவது இந்தியாவுக்கு … Read more

சுற்றி சுற்றி அடி வாங்கும் ரஷ்யா.. இனி இதிலும் பிரச்சனை தான்..!

உக்ரைனில் 6வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்ய படைகள் குறிப்பிட்டு முக்கிய பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றது. உக்ரைன் படைகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், ரஷ்யா படைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆங்காங்கே பின்னடைவையும் சந்தித்து வருகின்றன. கீவ் தாக்குதல் குறித்து ரஷ்யா எச்சரித்துள்ள நிலையில், உக்ரைனில் பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவால் அணு தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளார். இந்தியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்.. உக்ரைன் போர் பதற்றத்தால் BPCL-க்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை! தகவல் … Read more

Maha Shivaratri 2022 | மகா சிவராத்திரிப் பெருவிழா சிறப்பு நேரலை! | Mylapore

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மயிலாப்பூரில் நடைபெறும் மகா சிவராத்திரிப் பெருவிழா 2022 நேரலை! Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx Source link

தப்புக்கணக்கு போட்டுவிட்டார் புடின்… பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் காட்டம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நீடித்துவரும் நிலையில், ரஷ்ய ஜனாபதி புடின் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் காட்டமாக விமர்சித்துள்ளார். உக்ரைன் மீது 6வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஆயுதங்கள் மற்றும் துருப்புகளை குவித்து வந்தபோது, உலக நாடுகளை நெருக்கடிக்கு தள்ளும் ஒரு சூழல் ஏற்படாது என்றே உலக நாடுகள் நம்பி வந்தன. ஆனால் அமெரிக்கா மட்டும் ரஷ்யாவின் நகர்வுகளை கண்காணித்து வந்ததுடன், அதை வெளிப்படையாக அறிவித்தும் வந்துள்ளது. … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் … Read more

ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து போட்டிகளில் இருந்தும் தடை: உலக தடகள கூட்டமைப்பு அறிவிப்பு

ரஷ்ய: ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து போட்டிகளில் இருந்தும் தடை என உலக தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தடகள கூட்டமைப்பு இவ்வாறு அறிவித்துள்ளது.

கீவ் நகரில் இந்தியர்கள் முழுமையாக வெளியேற்றம்: வெளியுறவுத்துறை| Dinamalar

புதுடில்லி: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்த இந்தியர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு விட்டனர் என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் சிரிங்காலா கூறியது, உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக அடுத்த மூன்று நாட்களில் சுமார் 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளனன . புடா பெஸ்ட் புகாரெஸ்ட் நகரங்களை தவிர சுலோவாகியா போலந்து நகரங்கள் வழியாக இந்தியர்கள் மீட்கப்படுவர். கீவ் நகரில் இந்தியர்கள் யாரும் இப்போது இல்லை, இந்தியர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு … Read more

19,000 கோடி ரூபாய் டெண்டரை ரத்து செய்த மத்திய அரசு..!

மத்திய அரசுக்குச் சொந்தமான பாரத் பிராட்பேண்ட் நிகாம் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் 16 மாநிலங்களில் உள்ள கிராமங்களை ஆப்டிகல் ஃபைபர் அடிப்படையிலான அதிவேக பிராட்பேண்ட் நெட்வொர்க் சேவை மூலம் இணைப்பதற்காக 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை வெளியிட்டு இருந்தது. இந்த டெண்டரை கைப்பற்றத் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத காரணத்தால் மத்திய அரசின் உத்தரவின் படி பாரத் பிராட்பேண்ட் நிகாம் இந்த 19000 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி விதிகள் … Read more