வேலூர் தினசரி சந்தை கடைகளை ஏலம்விட நகராட்சி வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

வேலூர்: வேலூர் தினசரி சந்தை கடைகளை ஏலம்விட நகராட்சி வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து புதிய கடைகள் கட்டப்பட்ட பின் ஏலம் நடத்த வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலூர் தினசரி சந்தையில் பழைய கட்டடங்களின் உறுதியை ஆராயமல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறினார்.

யார் இந்த மாதபி புரி பச்.. செபியின் புதிய தலைவராக நியமனம்..!

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவராக மாதபி பூரி புச் நியமிக்கப்பட்டுள்ளார். செபியின் தலைவர் அஜய் தியாகியின் காலம் பிப்ரவரி 28 அன்று முடிவடையவுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் பதவி காலம் நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் தான் மாதபி தலைவராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளார். நிதி அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் தலைவர் பதவிக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்தது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 6 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ரஷ்யா – … Read more

`ரஷ்ய தாக்குதலின் தீவிரம் குறைந்துள்ளது!' – உக்ரைன் ராணுவம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரஷ்யப் படைகளின் தாக்குதலால், உக்ரைனில் ராணுவத்தினர் மட்டுமின்றி குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உலக நாடுகள் மட்டுமல்லாமல், ரஷ்ய மக்களும் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவில் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உக்ரைன் : தாக்குதல் நடைபெற்ற இடம் இந்த நிலையில் ரஷ்யா – உக்ரைன் நாடுகள் இடையே பெலாரஸில் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் … Read more

உக்ரைனில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்: இணையத்தில் பரவும் வீடியோ காட்சிகள்

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் கனல்கள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்காக ஷேஹினி எல்லை பகுதிக்கு வந்த இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குவதல் நடத்துவதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது. ரஷ்யா உக்ரைன் இடையே இன்று ஐந்தாவது நாளாக போர் தொடரும் நிலையில், பல்வேறு நாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளையும் வலியுறுத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களை பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் … Read more

மேயர், துணைமேயர் உள்பட மறைமுக தேர்தலும் அமைதியா நடக்கனும்! உயர் நீதிமன்றம்

சென்னை: நகர்பபுற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து, மேயர், துணைமேயர் உள்பட தலைவர்கள் தேர்தல் ஏப்ரல் 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த  மறைமுக தேர்தலும் அமைதியா நடக்கனும், சிசிடிவி நடைமுறை தொடரணும்  என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பெரும்பாலான வெற்றிகளை திமுக  பெற்றுள்ளதால், மேயர், துணைமேயர் உள்பட தலைவர்களின் பதவிக்களுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ந்தேதி நடைபெற உள்ளது. … Read more

தி.மு.க. ஆட்சியில் குண்டர்களும், ரவுடிகளும் சுதந்திரமாக திரிகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

சேலம்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறி அதை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் இன்று காலை சேலம் கோட்டை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். பின்னர் அ.தி.மு.க.வினர் தி.மு.க. அரசை கண்டித்து பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கண்டன உரை ஆற்றியதாவது:- … Read more

ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு!!

பெய்ஜிங் : ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடைகள் ஒரு தலைப்பட்சமானது எனக் கூறி சீன வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.  

நம் சொந்த மக்களை நாமே கைவிடக் கூடாது: ராகுல்| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மாணவர்களை மத்திய அரசு எப்படி வெளியேற்ற போகிறது என்ற திட்டத்தை உடனடியாக பகிர வேண்டும் எனவும், நம் சொந்த மக்களை நாமே கைவிடக் கூடாது என்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனை விட்டு அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்தியர்கள், உக்ரைனை விட்டு வெளியேறுவதற்காக போலந்து எல்லையை கடக்க … Read more

மார்ச் மாதத்தில் 13 நாட்கள் விடுமுறையா? வங்கி ஸ்ட்ரைக்கும் இருக்கு.. கவனமா இருங்க!

நாளை மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இந்த மார்ச் மாதத்தில் உள்ள 31 நாட்களில் 13 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக உள்ளது. இதில் தமிழகத்தில் எவ்வளவு நாள் விடுமுறை. பொது விடுமுறைகள் எத்தனை நாட்கள்? இம்மாதத்தில் வங்கி ஸ்ட்ரைக்கும் உண்டு. ஆக மொத்தம் எத்தனை நாட்கள் வங்கிகள் செயல்படாது, வாருங்கள் பார்க்கலாம். பொதுவாக ஒரு மாதம் தொடங்குவதற்கு முன்னதாக வங்கி விடுமுறை பற்றி அறிவிக்கப்படும். இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே தங்களது வங்கி … Read more

சென்னை: இரண்டாவது மனைவியைக் கொலை செய்தது ஏன்?! – கணவன் அதிர்ச்சி தகவல்

சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (29). எலெக்ட்ரீசியனாக வேலைப் பார்த்து வருகிறார். இவரின் இரண்டாவது மனைவி வெண்ணிலா (23). கடந்த 26-ம் தேதி இளங்கோவன், புழல் எம்.ஜி.ஆர் நகரில் குடியிருக்கும் தன்னுடைய தாத்தா வீட்டுக்கு மனைவியை அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளங்கோவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார். மனைவியுடன் இளங்கோவன் இதுகுறித்து புழல் காவல் நிலையத்துக்கு … Read more