IND vs SL: ஷ்ரேயாஸுக்கு ஹாட்ரிக் அரைசதம்; உலக சாதனையுடன் தொடரை முடித்த இந்தியா!

மேற்கிந்திய தீவுகளை வைட் வாஷ் செய்த ஒரே வாரத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் முழுமையாக வென்றிருக்கிறது இந்திய அணி. நேற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து அசத்த எளிதாகப் போட்டியை வென்றது இந்தியா. இத்தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது அரைசதம் இது. மூன்று போட்டிகளில் அவர் மொத்தமாக அடித்துள்ள மொத்த ரன்கள் 204 (ஸ்ட்ரைக் ரேட் – 174.35) Ind vs SL முதல் ஆட்டத்தில் பொறுமையாகத் தொடங்கி இறுதியில் அதிரடி காட்டிய ஷ்ரேயாஸ் அதற்கடுத்த … Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்கள்! உடல்களை சோதனை செய்த வனத்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் 7 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரை கே.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், மர்மமான முறையில் மயில்கள் இறந்த கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையில் 7 மயில்கள் இறந்து கிடந்ததை கண்டு அதனை சோதனை செய்தனர். அப்போது 7 மயில்களும் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் வனத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் பேரதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து … Read more

மாறன் ட்ரெய்லர் இன்று ரிலீஸ்…

தனுஷ் – மாளவிகா மோகனன் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கிறது மாறன். #MaaranTrailer From Today! #Maaran streaming soon on @disneyplusHSTam #MaaranOnHotstar@dhanushkraja @SathyaJyothi@karthicknaren_M @MalavikaM_ @gvprakash @thondankani @smruthi_venkat @Actor_Mahendran @KK_actoroffl @RIAZtheboss pic.twitter.com/uWmRJ2iVU6 — Diamond Babu (@idiamondbabu) February 28, 2022 இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று … Read more

மு.க.ஸ்டாலின் சுயசரிதை புத்தகம்- ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

சென்னை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி-கல்லூரி படிப்பு, இளமை காலம் முதல் அரசியலில் கடந்து வந்த நிகழ்வுகள், பொதுக்கூட்ட பேச்சுகள், திரையுலகில் கால்தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தில் அனுபவித்த கொடுமைகள் என அவரது 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை “உங்களின் ஒருவன்” என்ற தலைப்பில் புத்தகமாக சுயசரிதை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. … Read more

தமிழக மருத்துவ கல்லூரிகளில் சீட் கிடைக்காதவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில செல்கின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழக மருத்துவ கல்லூரிகளில் சீட் கிடைக்காதவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில செல்கின்றனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். உக்ரைனில் உள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்காக செலவை அரசே ஏற்கிறது என கூறினார். குறைந்த கட்டணம் வசூலிக்கக்கூடிய நாடுகளில் கல்வி பயில செல்வது வழக்கமானது தான் எனவும் தெரிவித்தார்.

இன்றே கடைசி நாள்.. கண்டிப்பா இதை செய்திடுங்க.. எல்ஐசி IPO பலன் கிடைக்க அவசியம்!

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் எல்ஐசி (LIC) நிறுவனத்தின், ஐபிஓ விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்கள், சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக பாலிசிதாரர்களுக்கு சில சலுகைகளையும் அறிவித்துள்ளது. எல்ஐசி நிறுவனத்தில் பாலிசி வைத்திருக்கும் பாலிசிதாரர்கள் பங்கு வெளியீட்டில் பங்குகளை வாங்க நினைத்தால், பிப்ரவரி 28-க்குள் எல்ஐசி- பாலிசியுடன் பான் நம்பரையும் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. எல்ஐசி ஐபிஓ: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. அப்போ இந்திய … Read more

கருணை அடிப்படையில் அரசுப்பணி! – லட்சக்கணக்கில் லஞ்சம்; சர்ச்சையில் புதுச்சேரி சுகாதாரத்துறை

புதுச்சேரியில் அரசின் துறைகளில் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணிகள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி சுகாதாரத்துறையில் பணிகளை வழங்குவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் கவுரவத்தலைவர் பாலமோகன், பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன், ஆலோசகர் கீதா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “சுகாதாரத்துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த சுகாதார ஊழியர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்குவது வழக்கம். அதன்படி … Read more

உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு நடுவே புகுந்த நாடு! இன்று முடிவுக்கு வருகிறதா யுத்தம்? வெளியான முக்கிய தகவல்

பெலாரஸில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதனால் யுத்தம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்குள் புகுந்து ரஷ்யா 4 நாட்களுக்கு மேலாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து 5ஆவது நாளாக ரஷ்யா மிக கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் இதுவரை 3.68 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்கள் என ஐநா தெரிவித்துள்ளது. போர் தொடங்கிய இரண்டாவது நாளே உக்ரைன் … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் : இன்று ஐநா பொதுச்சபை அவசரக் கூட்டம்

நியூயார்க் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தொடர்பாக விவாதிக்க இன்று ஐநா பொதுச்சபை கூட்டம் கூடுகிறது. ரஷ்யப்படைகள் உக்ரைன் மீது நடத்தி வரும் போர் தொடர்கிறது.  இதனால் உலக நாடுகள் மிகவும் கவலை அடைந்துள்ளன.  ரஷ்ய விமானப் படைகள் குண்டு வீசி உக்ரைன் நாட்டில் உள்ள விமான நிலையங்களை அழித்துள்ளனர்.  இதனால் அந்நாட்டில் விமான போக்கு வரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. தினசரி பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  பல வெளிநாட்டவர் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாததால் அண்டை … Read more

மகா சிவராத்திரி: நாளை இரவு சிவாலயங்களில் 4 சாமத்திலும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை

சிவராத்திரியை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், அலங்காரங்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டு உள்ளார். அதனடிப்படையில் அனைத்து சிவாலயங்களிலும் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருவதாக அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. இந்த நிலையில் சிவராத்திரியன்று சிவாலயங்களில் நடத்தப்படும் வழிபாடுகள் குறித்து மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தலைமை அர்ச்சகர் ஜெயா குருக்கள் (எ) வெங்கட சுப்பிரமணியம் சிவாச்சாரியார் கூறியதாவது:- சிவாலயங்களில் … Read more