சிறப்பு படைவீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின்!

உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய சிறப்பு படைவீரர்களுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தனது சிறப்பு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். உக்ரைனின் டான்பாஸ் பகுதிகளில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) ஆகிய நகரங்களை சுதந்திர பகுதிகளாக மாற்றும் முயற்சியில் அங்குள்ள ரஷ்யா ஆதரவாளர்களுக்கு உதவுவதற்காக ரஷ்ய சிறப்பு படைவீரர்களை ஜனாதிபதி விளாடிமிர் புதின் முதன்முதலில் அனுப்பிவைத்தார். பின்பு ரஷ்ய படைகள் சிறிது சிறிதாக உக்ரைன் பகுதிகளுக்குள் முன்னேறவே, அதை உக்ரைன் மீதான முழுநீள போராக … Read more

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு கொரோனா

சென்னை: நடிகை சுருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும் பாடகியுமான நடிகை சுருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனை அவருடைய சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

கையில் இருக்கும் உணவு 2 நாளில் தீர்ந்து விடும்- உக்ரைனில் தவிக்கும் தென்காசி மாணவர்கள் கண்ணீர் மல்க வீடியோ

கடையநல்லூர்: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணை வீசி ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் சிக்கி தவித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நடு அய்யாபுரம் தெருவை சேர்ந்த அக்பர்அலி மகன் அப்துல் அஜீம், பீர்முகம்மது மகன் ஜியாத், அமீனுத்தீன் மகன் அப்துர் ரஹ்மான், முகமது கனி மகன் … Read more

எனது பிறந்தநாளையொட்டி, கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: எனது பிறந்தநாளையொட்டி, கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மக்களுக்கு பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாக்.,கிற்கு ஆதரவாக பலமுறை இந்தியாவின் முதுகில் குத்திய உக்ரைன்| Dinamalar

புதுடில்லி: சர்வதேச உறவுகளில், நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர பகைவனும் இல்லை. நிரந்தர நலன்களே முக்கியம் என்ற பழமொழி உண்டு. இது இந்தியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான உறவில் மிக கச்சிதமாக பொருந்தும். ரஷ்யா நடத்தும் தாக்குதலை நிறுத்த இந்தியாவிடம் வலியுறுத்தி வரும் உக்ரைன் நாடு, முக்கியமான தருணங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளதுடன், பல முறை நமது முதுகிலும் குத்தியுள்ளது தெரியவந்துள்ளது. அமைதியை விரும்பும் இந்தியா @@subtitle@@ இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. அண்டை … Read more

ரஷ்யா – உக்ரைன் பதற்றம்.. தங்கம் விலை ரூ.10,000 வரை அதிகரிக்கலாம்.. இது வாங்க சரியான தருணம்..!

தங்கத்தின் தேவையானது நடப்பு ஆண்டில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டலாம் என சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக் காட்டியது. இதற்கிடையில் தற்போது இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது சாதகமாக அமையலாம். மேலும் இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பங்கு சந்தைகளும் கடும் ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிக சேமிப்பு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், தேவையானது தொடர்ந்து … Read more

'கல்வெட்டில் தேவதாசி' ஆய்வு நூல்; புத்தக கண்காட்சியில் வெளியீடு!

கல்வெட்டுகளில், தேவதாசிகள் பற்றி சொல்லப்பட்டுள்ள தரவுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ‘கல்வெட்டில் தேவதாசி’ என்கிற நூல், தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக நேற்று சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. கல்வெட்டுகளில் இடம்பெற்றிருக்கும் தேவதாசிகள் பற்றிய செய்திகளை, அவர்களின் வாழ்வைப் பேசுவதால் இந்த நூல் கவனம் பெறுகிறது. தேவதாசி என்கிற விளிப்பெயர் சரியானது தானா என்கிற கேள்வியையும் இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. தேவரடியார்கள், தேவமகளார் என்று கல்வெட்டுகளில் சுட்டப்படும் இவர்களின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்களோடு விரிவான ஆய்வைச் செய்து … Read more

உக்ரைன் போர் குறித்த நிலைப்பாட்டை வெளியிட்ட வடகொரியா: போருக்கு அமெரிக்காவே மூலக்காரணம் என குற்றச்சாட்டு

ரஷ்யா உக்ரைன் மீது நான்காவது நாளாக இன்றும் போர் தொடுத்துவரும் நிலையில், உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு அமெரிக்காவே மூலக்காரணம் என வட கொரியா குற்றம்சாட்டியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24ம் திகதி முதல் போர்தொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் இந்த பதற்றமான போர் சூழலுக்கு அமெரிக்காவே முழுமுதற்காரணம் என வட கொரியா குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, வடகொரிய வெளியுறவு அமைச்சகத்திற்கான … Read more

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பெலாரசில் பேச்சு வார்த்தை நடத்த முடியாது – உக்ரைன்

கீவ்: ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பெலாரசில் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று தாக்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர். இன்று காலை உக்ரைனின் மற்றொரு பெரிய நகரமான … Read more

நெல்லை இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் 4-ம் கட்ட சோதனை வெற்றி

பணகுடி: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் ககன்யான் திட்டமாகும். பூமியின் தாள்வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். ககன்யான் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் செயல் படுத்தப்படுகிறது. இந்த திட்டம் 2023-ம் ஆண்டு செயல்படுத்தப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்த திட்டத்தை இந்தியா செயல்படுத்துகிறது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் … Read more