பாட்டில் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு

சென்னை: தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் (PACKAGED DRINKING WATER) தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளது.  மேலும் தரமற்ற குடிநீரை அருந்துவதால் காலரா, டைபாய்டு, அமீபியாசிஸ்,  வயிற்றுபோக்கு,  இ-கோலி தொற்று ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.  பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரில், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட தரங்கள் குறைவாக இருப்பின் உணவு பாதுகாப்பு … Read more

உக்ரைன் தலைநகர் கீவில் மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடு நீட்டிப்பு

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவில் மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்.28ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருக்கும்.  ஊரடங்கின் போது வெளியில் இருப்பவர்கள் எதிர் நாட்டவர்களாக கருதப்படுவார்கள் என கீவ் மேயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்தியா கலக்கல் வெற்றி; ஸ்ரேயாஸ், ஜடேஜா அபாரம்| Dinamalar

தரம்சாலா: இரண்டாவது ‘டி-20’ போட்டியில் துணிச்சலாக ஆடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என சுலபமாக கைப்பற்றியது. ஸ்ரேயாஸ் கலக்கல் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று ‘டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. லக்னோவில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலையில் இருந்தது. நேற்று இரண்டாவது போட்டி, தரம்சாலாவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங் … Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ கணவனை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கவைத்த பெண் கவுன்சிலர்..!

திருவனந்தபுரம், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டன் மேடு பகுதியை சேர்ந்தவர் சுனில் வர்கீஸ்(38). இவரது மனைவி சவுமியா (33). இவர் வண்டன்மேடு பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வரும் வினோத் (43) என்பவருடன் சவும்யாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. இதனால் வினோத் துபாயிலிருந்து அடிக்கடி ஊருக்கு வந்து சவுமியாவை சந்தித்து வந்தார்.  இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதற்கு சுனில் … Read more

பியூச்சர் ரீடைல் கடைகளைக் கைப்பற்றி வரும் ரிலையன்ஸ்.. ஊழியர்கள் மகிழ்ச்சியின் உச்சம்..!

இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தகப் பரிமாற்றமாக விளங்கும் ரிலையன்ஸ் – பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் கைப்பற்றல் திட்டத்திற்கு எதிராக அமேசான் வழக்கு தொடுத்துள்ள நிலையில், இந்தியாவிலும், சிங்கப்பூரில் வருட கணக்காக நடந்து வரும் நிலையில் இன்றும் தீர்வு காணப்படாமல் உள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் ஸ்மார்ட்டாக யோசித்துப் பியூச்சர் ரீடைல் கடைகளை அடுத்தடுத்து கைப்பற்றி வருகிறது. இதை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் தற்போது முக்கியமான விஷயமாக உள்ளது. எல்ஐசி ஐபிஓ: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு … Read more

நீலகிரி: `ஆம்புலன்ஸில் டீசல் இல்லை' அலட்சிய ஊழியர்கள்? -பழங்குடியின முதியவர் மரணத்தில் நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஓவேலி, எல்லைமலைப் பகுதியைச்‌ சேர்ந்தவர் 67 வயதான மாதன். பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், வழக்கம் போல இன்று காலை பணிக்கு கிளப்பியிருக்கிறார். அப்போது, திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை நாடியுள்ளனர். நீண்ட நேரம் காத்திருந்தும் 108 ஆம்புலன்ஸ் வராததால் தனியார் வாகனம் ஒன்றை வாடகைக்கு பிடித்து, மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். புகார் அளித்த உறவினர்கள் மாதன் வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் … Read more

ரஷ்ய வீரர்களை குழப்பி திசைதிருப்பி நாட்டை விட்டு விரட்ட உக்ரைன் பலே திட்டம்!

நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களை குழப்பி திசைதிருப்ப உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. உக்ரைன் மீது 3 நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டு தலைநகர் கீவிவை கைப்பற்றி போராடி வருகிறது. அதேசமயம், ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைன் இராணுவம் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரேனியர்கள் தங்கள் பிராந்தியங்களில் உள்ள சாலை குறியீடுகளில் இருந்து தெருக்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களை அகற்றுமாறு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கோரியுள்ளது. இது … Read more

26/02/2022 8 PM: தமிழ்நாட்டில் இன்று 480 பேருக்கு கொரோனா பாதிப்பு, 2 பேர் மட்டுமே உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு ஐநூறுக்கும்  கீழே குறைந்துள்ளது மக்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அதிக பட்சமாக சென்னையில் 126 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 8.0 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் இன்று மட்டும் 63,263  மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 6,42,81,633 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் … Read more

கேப்டன் சனகா அதிரடி… இந்தியாவுக்கு 184 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை

தரம்சாலா: இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி தரம்சாலாவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் பதும் நிசங்கா, தனுசா குணதிலக இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  குணதிலக 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அசலங்கா (2), கமில் மிஷாகா (1), சண்டிமல் (9) என சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். எனினும், மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய … Read more

இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்; பிரதமர் மோடி வலியுறுத்தல்

டெல்லி: இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கவும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.