அமெரிக்க வேலையை தூக்கி எறிந்த சேலம் இளைஞன்.. இன்று விவசாய துறையில் கோடீஸ்வரன்..!

சேலம் மாவடத்தின் சிறு டவுன் பகுதியை சேர்ந்த கிரு மைக்காப்பிள்ளை மாதம் பல லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் அமெரிக்க வேலையைத் தூக்கி எறிந்து விட்டுத் தற்போது விவசாயத் துறையில் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் வர்த்தகத்தை உருவாக்கி பல கோடி இளைஞர்களுக்கு உதாரணமாக மாறியுள்ளார். இளைஞர்களே விவசாயம் செய்ய வாங்க.. வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்..! கிரு மைக்காப்பிள்ளை எல்லோரையும் போலவே கிரு மைக்காப்பிள்ளை-யும இன்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு சில ஆண்டுகள் சாப்ட்வேர் துறையில் … Read more

94 குடும்பம்; 94 வீடுகள்! – முடிவுக்கு வந்த, 'சர்க்கஸ்' கலைஞர்களின் 50 வருட வாழ்வாதாரப் பிரச்னை

கரூர் மாவட்டத்தில் உள்ள வேட்டமங்கலம் ஊராட்சியில் இருக்கும் குந்தாணிப்பாளையத்தில் கூடாரம் அமைத்து குடியிருந்து கொண்டு, வெளியூர்களுக்கு சென்று சர்க்கஸ் நடத்துவது, கயிறு மேல் நடப்பது, சர்க்கஸூக்கு வாய்ப்பில்லாதபோது, கிடைத்த கூலி வேலைகளை செய்வது என்று 94 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குந்தாணிப்பாளையத்தில் உள்ள கூடாரங்கள் ‘சொந்தமாக இடமில்லை. வீட்டுக்கு வழியில்லை’ என்று கடந்த 50 வருடங்களாக அல்லாடி வந்த அந்த மக்களின் துயர், துடைக்கப்பட்டிருக்கிறது. அந்த 94 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டிருப்பதோடு, அவர்களுக்கு அரசு சார்பில் … Read more

உக்ரைன் மீது தடைகள் விதிக்காத சுவிட்சர்லாந்து மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் சாடல்

உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்துவரும் நிலையில், சுவிட்சர்லாந்து ரஷ்யா மீது தடைகள் எதுவும் விதிக்காததற்காக, ஐரோப்பிய ஒன்றியம் சுவிட்சர்லாந்தைக் கடுமையாக சாடியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் இது ஐரோப்பிய பாதுகாப்புக்கும் நிலைத்தன்மைக்கும் இது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அது உக்ரைனை மட்டுமல்ல, அது ஐரோப்பாவையே பாதிக்கிறது. நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை என்று சொல்லவில்லை, ஐரோப்பாவையே பாதிக்கிறது என்கிறோம். சுவிட்சர்லாந்தும் ஐரோப்பாவின் ஒரு பாகம்தானே என்று … Read more

உக்ரைன் – ரஷ்ய போர் : கட்டுப்பாட்டை இழந்தது ?

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களை ஆதரித்து சிறப்பு ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த புடின் ரஷ்ய ராணுவத்தை உக்ரைனில் களமிறக்கினார். மூன்றாவது நாளாக தொடரும் இந்த சிறப்பு நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பதே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாண மக்களை உக்ரைன் ராணுவதத்திடம் இருந்து காப்பற்றப்போவதாக கூறிய ரஷ்யா தனது ராணுவத்தை இவ்விரு மாகாணங்களை தாண்டி உக்ரைன் முழுவதும் தரையிறக்கியது. ராணுவ நிலைகளை நிலைகுலையைச் செய்ததை அடுத்து உக்ரைன் தலைநகர் … Read more

மேயர் பதவிக்காக தி.மு.க.வுடன் பா.ஜனதா மல்லுகட்டுவது ஏன்?- பொன்.ராதாகிருஷ்ணன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இதில் 21 மாநகராட்சிகளிலும் தி.மு.க. பெருவாரியான கவுன்சிலர்களை பெற்று மிகப்பெரிய வெற்றியை கைப்பற்றி உள்ளது. வருகிற 4-ந் தேதி மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜனதா ஓரளவு வாக்குகளை பெற்று உள்ளது. பா.ஜனதா வலிமையாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயர் தேர்தலை சந்தித்தது. மொத்தம் 52 வார்டுகளை கொண்ட இந்த மாநகராட்சியில் தி.மு.க.வும், … Read more

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த மாணவி உயிரிழப்பு

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் சென்னையைச் சேர்ந்த மாணவி உயிரிழந்தார். குண்டூரில் இருந்து சென்ற ஹெலிகாப்டர் நல்கொண்டாவில் விபத்துக்குள்ளானதில் பயிற்சி விமானி மகிமா உயிரிழந்தார். பயிற்சியின் போது ஹெலிகாப்டர் மேலெழும்ப முடியாமல் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ருமேனியாவில் விமானங்கள் தயார்: மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர்| Dinamalar

திருச்சி: ”உக்ரைனில் இருந்து வெளியேறி ருமேனியா வந்த இந்தியர்களை, டில்லி அழைத்து வர விமானங்கள் தயாராக உள்ளன,” என, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார். தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோவில்களில் சுவாமி வழிபாடு செய்வதற்காக, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி விமானம் மூலம் திருச்சி வந்தார்.விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க, மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்நாட்டில் போர் … Read more

NSE சித்ரா-வை கட்டுப்படுத்திய இமயமலை சாமியார் யார்..? உண்மையை உடைத்த சிபிஐ..!

என்எஸ்ஈ அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குனரான சித்ரா ராமகிருஷ்ணா சுமார் 20 வருடமாகப் பங்குச்சந்தையில் பல்வேறு ரகசிய மற்றும் முக்கியமான தகவல்களை முகம் தெரியாத இமயமலை சாமியாரிடம் பகிர்ந்து வந்தது முதலீடு சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை முதலில் செபி மட்டுமே விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது வருமான வரித் துறை, சிபிஐ எனப் பல துறை கையில் எடுத்துள்ளது. இந்நிலையில் NSE சித்ரா ராமகிருஷ்ணா-வை கட்டுப்படுத்திய இமயமலை சாமியார் யார் என்பதைச் … Read more

மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கிறீங்களா? இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்!

நவீன வீட்டு உபயோக சாதனங்களைப் பயன்படுத்துகையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டுமென்பதற்கு கீழேயுள்ள சம்பவமே ஓர் உதாரணம். அந்த நபருக்கு வயது 26. காபி குடிக்க விரும்பிய அவர் ஒரு கப்பில் நீர் ஊற்றி அதை மைக்ரோவேவ் ஓவனுக்குள் (microwave oven) வைத்துச் சூடு செய்திருக்கிறார். இது காபி தயாரிக்க அவர் வழக்கமாகச் செய்கிற முறைதான். அன்றைக்கும் அதேபோல ஓவனுக்குள் நீரை வைத்தவர், சிறிது நேரம் கழித்து ஓவனை ஆஃப் செய்துவிட்டு கப்பை வெளியே எடுத்திருக்கிறார். நீர் … Read more

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நாவில் தீர்மானம் தோல்வி! புத்திசாலித்தனமாக முறியடித்த புடின் அரசு

ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பல நாடுகள் ஆதரவு கொடுத்தும் தீர்மானமானது தோல்வியில் முடிந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக போர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பல நாடுகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அமெரிக்கா பொருளாதார ரீதியாக பெரிய உதவியை வழங்க முன் வந்துள்ளது. இந்நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தில் 15 நாடுகளில் 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தது. ஆனாலும் இந்த தீர்மானமானது தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கான … Read more