பராமரிப்பு பணி: சென்னை மற்றும் கிருஷ்ணகிரியில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்…

சென்னை: பராமரிப்பு பணிக்காக இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் கிருஷ்ணகிரியில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாலை 4மணி அல்லது 5மணிக்கு மேல்தான் மீண்டும் மின்விநியோகம் செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி: எஸ்.ஆர்.பி மெயின் ரோடு/காலனி, … Read more

உக்ரைன் போர் – இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?

2 நாடுகளுக்கு இடையே நடக்கிற போர் மூன்றாவதாக வேறு ஒரு நாட்டை பாதிக்குமா? தற்போதுள்ள உலகமய பொருளாதாரத்தில், நிச்சயமாக எல்லா நாடுகளுமே ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படும். அப்படியானால், உக்ரைன் போர் இந்தியாவுக்கு என்ன விதமான பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்?. உக்ரைன் போரின் விளைவாக நேரடி, மறைமுக, செயற்கை பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டி வரும். எப்போதுமே பதற்றமான சூழல் உருவாகிறது என்றால், அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளச் சிலர் முனையத்தான் செய்வார்கள். இதன் காரணமாக செயற்கைப் … Read more

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா, சீனா ஆப்சண்ட

நியூயார்க்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்துள்ளன. ரஷ்யா தனது வீட்டோ அதிகாரம் மூலம் இந்த தீர்மானத்தை தோல்வி அடையச் செய்தது.

ரஷ்யா – உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தான் அதிகம் பாதிப்பு.. எப்படி தெரியுமா..?

ரஷ்ய படைகள் 2வது நாள் போரில் உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ நெருங்கியுள்ள வேளையில் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது கடுமையாக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தயாராகி வருகிறது. ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..! இந்தச் சூழ்நிலையில் சர்வதேச நிதியியல் தளத்தில் இருந்து ரஷ்யாவின் இணைப்பை மொத்தமாக நீக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் ரஷ்யா மிகப்பெரிய தடை பாதிப்புகள் உடன் உக்ரைன் … Read more

போர் களேபரங்களுக்கு மத்தியில் திருமணம்., உடனடியாக நாட்டுக்காக ஆயுதம் ஏந்தி நின்ற உக்ரைன் தம்பதி., நெகிழவைக்கும் படங்கள்

உக்ரைனில் திருமணம் ஆன சில மணிநேரங்களில் புது தம்பதியினர், நாட்டுக்காக துப்பாக்கி ஏந்தி போருக்கு தயாராகியுள்ளனர். உக்ரைனைச் சேர்ந்த 24 வயது ஸ்வயடோஸ்லாவ் பர்சின் (Svyatoslav Fursin) மற்றும் 21 வயது யரினா எரிவா (Yaryna Arieva) என்கிற ஜோடி வருகிற மே மாதம் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ஒரு உணவகத்தின் மேல்தளத்தில் டினிப்பர் ஆற்றை பார்த்தவாறு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாகவே உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் … Read more

உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயாராகும் ரஷ்யா

மாஸ்கோ உக்ரைன் நாட்டுடன் பெலாரஸ் நாட்டுத் தலைநகரில் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்ய அரசு தயாராகி உள்ளது. ரஷ்ய அரசு கடந்த 2 நாட்களாக உக்ரைன் நாட்டில் போர் புரிந்து வருகிறது.   ரஷ்ய விமானப் படைகள் மற்றும் தரைப்படைகள் உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.   உக்ரைனில் விமான நிலையங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதால் அங்குள்ளவர்கள் தப்பிச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்தி அமைதியை நிலை நிறுத்துமாறு ரஷ்ய … Read more

ரஷியாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்- ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

ஜெனீவா: உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ரஷியா உடனடியாக நிபந்தனையின்றி உக்ரைன் எல்லையில் இருந்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தும் அனைத்து ராணுவப் படைகளையும்  முழுமையாக  திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது. அமெரிக்கா, போலந்து, இத்தாலி, ஜெர்மனி, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவுடன் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  அதில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு … Read more

ஜெ., பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு மோதிரம் – Jayalalitha

புதுச்சேரி ; ஜெ., பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு கிழக்கு அ.தி.மு.க., சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.மறைந்த தமிழக முதல்வர் ஜெ., 74வது பிறந்த நாளையொட்டி, கடந்த 24ம் தேதி பிறந்த, குழந்தைகளுக்கு புதுச்சேரி கிழக்கு அ.தி.மு.க., சார்பில், தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாநில செயலாளர் அன்பழகன், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜாராமன், பாஸ்கர், பெரியசாமி, மாநில இணைச் செயலாளர்கள் அன்பானந்தம், திருநாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணை செயலாளர்கள் … Read more

ஊர் சுற்ற, பியூட்டி பார்லர், ஆடம்பர ஷாப்பிங்க்காக கம்பெனி பணத்தில் ரூ.53 கோடி செலவு செய்தாரா மாதுரி?

நிதி முறைகேடு குற்றசாட்டின் பேரில் பாரத் பே நிறுவனத்தின் கட்டுப்பாட்டாளர் மாதுரி ஜெயின் சில தினங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் மாதுரி ஜெயின் அழகு பராமரிப்பு, விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்க, வெளி நாட்டு பயணம் உள்ளிட்டவற்றிக்காக பல கோடி ரூபாயை நிறுவன பணத்தில் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற ஒரு நிறுவனத்தில் நிலவி வரும் தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில், தோண்ட தோண்ட பெரும் ஊழல்கள் வெளியாகி வருகின்றது. இந்த … Read more

ரஷ்ய அதிபர் புதினின் சொத்துக்கள் முடக்கம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் செய்துவரும் நிலையில், அதிபர் புதினுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கத் திட்டமிட்டுருப்பதாக மேற்குலக நாடுகள் தொடர்ந்து எச்சரித்து வந்தன. அதற்கேற்ப ரஷ்யா உக்ரைன் மீது வியாழக்கிழமை போரை ஆரம்பித்தது. முதலில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா ராணுவம், அதன் பின்னர் தரைவழியாகவும் தாக்குதலை … Read more