மார்ச் 4 ஆம் தேதி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெறுகிறது

சென்னை தமிழகத்தில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வரும் மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. தமிழக மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடந்து 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுள்ள்ன.  இந்த தேர்தல்களில் வெற்றி … Read more

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க அவசர கால மீட்புக் குழுக்கள் – தமிழக பாஜக தகவல்

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழக பாஜக சார்பில் அவசர கால தொடர்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஹெல்ப் லைன் மூலம் எனக்கு கிடைக்கும் தகவல்களை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறோம். உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் இதர தமிழர்களின் நிலைமைகளை விளக்கி, அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு … Read more

ரஷ்ய ராணுவம் மீது நடத்திய தாக்குதலில் 1,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு; உக்ரைன் அரசு தகவல்

கீவ்: ரஷ்ய ராணுவம் மீது நடத்திய தாக்குதலில் 1,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு என உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது பல்வேறு முனைகளில் 2-வது நாளாக தீவிர தாக்குதலை ரஷ்ய ராணுவம் நடத்தி வருகிறது.

கிரிப்டோ கரன்சி வர்த்தகம் | Dinamalar

புதுடில்லி:நாடு முழுதும் ‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயங்கள் வாயிலாக வர்த்தகம் செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக அஜய் பரத்வாஜ் என்பவர் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அஜய் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மனுதாரரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும். அமலாக்கத் துறை … Read more

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.267 கோடி நிதி – மத்திய அரசு விடுவிப்பு

புதுடெல்லி, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நேற்றைய தினம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள உள்ளாட்சிகளுக்கான நிதி, நிவாரண நிதிகள், மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் தமிழகத்தின் பங்கு உள்ளிட்டவற்றை இந்த நிதியாண்டிற்குள் மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என வலுயுறுத்தினார். இந்த நிலையில் இன்று தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் 267 கோடி ரூபாய் நிதியை விடுவித்துள்ளது. தமிழகம் தவிர ஒரிசா, ஜார்க்கண்ட், கர்நாடகா, … Read more

ரஷ்யா மீது இத்தனை தடைகளா.. புதின் நிலைமை இனி திண்டாட்டம் தானா..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான போரை அறிவித்து 2வது நாளான இன்று தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் அரசு தன் நாட்டு மக்களின் கையில் ஆயுதங்களைக் கொடுத்துப் போர் செய்யத் துவங்கியுள்ளது. இதற்கிடையில் உக்ரைன் நாட்டின் சில முக்கியப் பகுதிகளில் உக்ரைன் ராணுவத்துடன் நேட்டோ படைகள் பாதுகாத்து வருகிறது. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? இந்நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால்,ரஷ்யா … Read more

இன்றைய ராசி பலன் | 26/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

உக்ரைனில் இவ்வளவு இயற்கை வளமா! ரஷ்யா கைப்பற்ற துடிப்பதற்கு இதுவும் காரணம்..

உக்ரைனைக் கைப்பற்றுவதற்கு ரஷ்யாவிடம் பல காரணங்கள் இருந்தாலும், உக்ரைன் நாட்டில் உள்ள ஏராளமான வளங்கள் மிக முக்கியமான காரணமாக உள்ளது. உக்ரைன் நாட்டில் இல்லாத வளங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளங்கள் நிறைந்த நாடாக உக்ரைன் உள்ளது. யுரேனியம் (Uranium): ஐரோப்பா கண்டத்தில் முதல் இடம் டைட்டானியம் (Titanium): ஐரோப்பாவில் இரண்டாவது இடம், உலகில் 10-வது இடம் மாங்கனீசு (Manganese): உலகளவில் 2-வது இடம் இரும்புத் தாது (Iron Ore): உலகளவில் 2-வது இடம் மெர்குறி … Read more

தமிழகத்தில் இன்று 507 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  25/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 507 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,48,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்   இன்று தமிழகத்தில் 66,366 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,42,18,370 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.   இன்று 507 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,48,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 38,000 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 1,794 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,01,938 பேர் குணம் … Read more

உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய ஸ்வீடனுக்கு ரஷியா எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல்களால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. 1000க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை கொன்றுவிட்டதாக உக்ரைன் கூறி உள்ளது.    போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் … Read more