மத்தியஅரசு அலுவலகங்களில் 30% பணியிடங்கள் காலி: பணியாளர் துறை அலுவலகம் முன்பு மத்திய செயலகம் அதிகாரிகள் தர்ணா…

டெல்லி: மத்தியஅரசு அலுவலகளில் 30 பணியிடங்கள் காலி உள்ளது. அந்த பணியிடங்களை நிரப்ப மோடி தலைமையிலான பாஜக அரசு முன்வராததை கண்டித்து,  மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் அலுவலகத்திற்கு வெளியே மத்திய செயலகம் துறை அதிகாரிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றது முதல், மத்தியஅரசின் பல்வேறு துறைகளில் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளாக மத்திய … Read more

தி.மு.க. தொண்டர் மீது தாக்குதல்: அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் கைது

சென்னை: தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு பிரச்சினை தொடர்பாக தி.மு.க. – அ.தி.மு.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தி.மு.க. தொண்டரான நரேஷ்குமார் என்பவரை பிடித்து அவரது சட்டையை கழற்றி ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பான புகாரின் … Read more

வாகனங்களில் அதிவேகமாக உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குள் நுழையும் ரஷ்யர்கள்

கீவ்: வாகனங்களில் அதிவேகமாக உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குள் ரஷ்யர்கள் நுழைந்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட உக்ரைன் ராணுவ வாகனங்களில் உக்ரைன் வீரர்களின் சீருடையில் உள்ளே நுழைந்து வருவதாக உக்ரைன் பாதுகாப்பு துணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும்: ஸ்டாலின்| Dinamalar

சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான பயண செலவை அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், பொது மக்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், ‛தமிழகத்தை சேர்ந்த தொழில்முறை படிப்புகள் பயிலும் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் மற்றும் … Read more

NSE ஆனந்த் சுப்ரமணியன் கைது.. சிபிஐ அதிரடி நடவடிக்கை..!

இந்தியாவையே உலுக்கிய NSE சித்ரா ராமகிருஷ்ணா வழக்கில் செபி, வருமான வரித் துறை, சிபிஐ எனப் பல அரசு அமைப்புகள் நேரடியாக விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒருவாரமாக இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஆனந்த் சுப்ரமணியனை சிபிஐ விசாரணை செய்து வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். என்எஸ்ஈ சித்ரா-வை கட்டுப்படுத்திய சென்னை – இமயமலை சாமியார் இவர் தானா..? ஆனந்த் சுப்ரமணியன் கைது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ பிப்ரவரி 25ஆம் தேதி (இன்று) … Read more

டூ இன் ஒன் ஃபார்முலா… ஸ்டாலினிடம் சென்ற பஞ்சாயத்து! – வேலூர் மாநகர மேயர் ரேஸில் முந்துவது யார்?

வேலூர் மாநகராட்சியைத் தி.மு.க கைப்பற்றியுள்ளது. இந்த மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் இருக்கின்றன. இதில், 45 வார்டுகளைத் தி.மு.க கூட்டணி கைப்பற்றியுள்ளது. 7 வார்டுகளில் அ.தி.மு.க-வும், 6 வார்டுகளில் சுயேட்சைகளும், பா.ஜ.க மற்றும் பா.ம.க தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் மேயர், துணை மேயர், நான்கு மண்டலக் குழுக்களின் தலைவர்கள் பதவிகளைக் குறிவைத்து, ஆளுங்கட்சிப் புள்ளிகள் பலரும் காய்நகர்த்துகிறார்கள். இதற்காக நடத்தப்படும் பேரம் தலையைக் கிறுகிறுக்க வைக்கிறதாம். பெண்கள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் … Read more

2022ம் ஆண்டில் மூன்றாம் உலகப்போர்! பாபா வாங்கேவின் கணிப்பு பலித்துவிடுமா?

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில், மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற அச்சத்தில் உலகம் மூழ்கியிருக்கிறது. இதற்கிடையில், பிரெஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் 2022ஆம் ஆண்டில் போர் ஒன்று உருவாகும் என கணித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாஸ்ட்ரடாமஸ் ஆனாலும் சரி, கண் பார்வையற்றவரான வங்கா பாபாவானாலும் சரி, 2022ஐக் குறித்து பயங்கரமான விடயங்களித்தான் கணித்துக் கூறியுள்ளார்கள். அவ்வகையில், 2022இல் என்னென்ன நடக்கலாம் என அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம். புதிய பெருந்தொற்று ஒன்று உருவாகும் தற்போதைய சூழலில் கொரோனா … Read more

சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ. 25,000 உடன் விருது! தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை: சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ. 25,000 மற்றும் விருது வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான போட்டியில், அரசு அல்லது அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ சமுதாயத்தின் நலனுக்காக இன்றியமையாது பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்களை கண்டறிந்து, அவர்களை அங்கீகரிக்கும் வகையில் “சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது” வழங்குவதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இது குறித்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  … Read more

உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்- பெற்றோர்கள் கண்ணீருடன் கோரிக்கை

உக்ரைனில் போர் உச்சக் கட்டத்தை எட்டி உள்ளது. அங்கு படித்து வரும் தமிழக மாணவ- மாணவிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இதையடுத்து அவர்களது பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை உடனடியாக மீட்டு பத்திரமாக ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்று கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் உக்ரைனுக்கு சென்று படித்து வருகிறார்கள். அவர்கள் யார், யார் என்பது பற்றிய விவரம் வருமாறு:- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர் … Read more

உக்ரைன் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு..!!

சென்னை: உக்ரைன் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இதுவரை 1000 பேர் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் தங்கியுள்ள மற்ற தமிழர்களின் விவரங்களும் சேகரிக்கப்படுகிறது என்று அயலக தமிழர் நலப்பிரிவு ஆணையர் ஜெசிந்தா தெரிவித்திருக்கிறார்.