தெருவில் வாக்கிங் சென்றவருக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம்! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன சுவாரஸ்யம்

இந்தியாவில் வாக்கிங் சென்ற ஒருவருக்கு எதிர்பாராதவிதமாக 26.11 கேரட் வைரம் கிடைத்ததையடுத்து ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறியுள்ளார். மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் வசித்து வருபவர் சுஷீல் ஷுக்லா. இவர் செங்கல் சூலை வியாபாரம் செய்து வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை தனது நண்பர்களுடன் வாக்கிங் சென்றுள்ளார். அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்த வழியில் சுரங்கம் ஒன்று தென்பட்டுள்ளதையடுத்து சுரங்கத்தின் உள்ளே எதோ மின்னுவது போல இருந்திருக்கிறது. அப்போது அதை … Read more

உக்ரைன் போர் எதிரொலி: தங்கம், கச்சா எண்ணை விலை கிடுகிடு உயர்வு, பங்கு சந்தைகள் சரிவு…

டெல்லி: உக்ரைன் போர் எதிரொலியாக தங்கம், கச்சா எண்ணை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பங்கு சந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.   இன்று ஒரேநாளில், இந்தியாவில் தங்கத்தின் விலை . ரூ.864 உயர்ந்து உயர்ந்து புதிய உச்சத்துக்கு சென்றுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது, ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது.இந்த தாக்குதலாம் உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா உள்பட உலக நாடுகள் கடும் … Read more

2-வது வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

சென்னை: தி.மு.க. உறுப்பினரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய ஜெயக்குமாரின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. இதனிடையே, ராயபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் மீது 2-வதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஜாமின் கோரி ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கி … Read more

கீவ் நகரிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமையகம் மீது ரஷ்ய படை தாக்குதல்

உக்ரைன்: கீவ் நகரிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உளவுத்துறை அமைப்பின் தலைமையகம் ரஷ்ய படைகளால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார், பைக் விலை விரைவில் உச்சம் தொடலாம்.. என்ன காரணம் தெரியுமா?

சப்ளை பாதிக்கப்படலாம் என்ற பதற்றத்தின் மத்தியில் லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில், அலுமினியம் விலையானது வரலாற்று உச்சத்தினை எட்டியுள்ளது. இது ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், ரஷ்யாவில் இருந்து சப்ளை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? மேலும் அதிகரித்துள்ள மின்சார கட்டணம் காரணமாகவும் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் அலுமினியம் விலையானது உச்சம் தொட்டுள்ளது. மெட்டல்கள் … Read more

`அரசியலில் ஈடுபட ஆர்வமா?' – 1973-ல் வெளியான ஜெயலலிதாவின் பேட்டி #AppExclusive

ஜெயலலிதா சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்: படத்திற்கு ஒப்பந்தம் ஆவதற்கு முன், நீங்கள் மிகவும் முக்கியமாய் என்ன கவனிப்பீர்கள்? கதையையும், அதில் வரப்போகும் என் பாத்திரத்தையும் கவனிப்பேன் பிறகு, இயக்குநர் யார் என்பதையும் கவனிப்பேன். உங்களுக்கு முன்போல் இப்போதெல்லாம் அதிகப் படங்கள் இல்லை என்று சொல்கிறார்களே? அப்படிப் படங்கள் இல்லாததற்கு என்ன காரணம்? படங்கள் இல்லை என்று யார் சொன்னது? எப்போதும் போல், நாள்தோறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அளவிற்கு, ஓய்வு நேரமே இல்லாத அளவிற்குப் படங்கள் இருக்கின்றன. … Read more

ரத்த பூமியாக மாறும் உக்ரைன்! ரஷ்யா தாக்குதலில் உடல் சிதறி உயிரிழந்த ராணுவ வீரர்கள்.. பதறவைக்கும் சம்பவம்

ரஷ்யா-உக்ரைன் இடையே வெடித்த போரில் இதுவரை உக்ரைனை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலை உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு போர் விமானங்களை அழித்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை உக்ரைன் நாட்டின் விமான நிலையங்கள், வான்வெளி பாதுகாப்பு போன்றவற்றை … Read more

இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் கிடையாது! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: இந்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி மெகா முகாம் நடைபெறாது என்றும்,  அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 2,534 இடங்களில் தினந்தோறும் தடுப்பூசி போடுவதில் மாற்றம் இருக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் நடைபெற்ற பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரூ 1.11 கோடி செலவில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் பணியிடங்க ளுக்கான 6 பணி … Read more

பட்டாசு ஆலையில் தீ விபத்து- 4 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசு ஆலை கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் 4 பேர் பலியாகினர்.  இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.