ராணுவ கட்டுப்பாட்டில் உக்ரைன்… நாட்டை விட்டு வெளியேற தவிக்கும் மக்கள்…

உக்ரைன் ராணுவம் தனது கையில் உள்ள ஆயுதங்களைக் கீழே போடும் வரை ரஷ்யா-வின் வழியில் குறுக்கிடுபவர்கள் யாராக இருந்தாலும் அதன் விளைவைச் சந்திக்க வேண்டி வரும் என்ற புடினின் போர் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் மீது குண்டு மழை பொழியப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் சுரங்கத்தில் தஞ்சமடைந்துள்ள மக்கள் உக்ரைனில் சிவில் சட்டம் முடக்கப்பட்டு நாட்டை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றுள்ளார் உக்ரைன் அதிபர் ஸிலென்ஸ்கி. ஏ.டி.எம்.களில் வரிசை கட்டி நிற்கும் மக்கள் இதனால் உக்ரைனில் உள்ள … Read more

உக்ரைனில் படிக்கும் 4 ஆயிரம் தமிழக மாணவர்களின் கதி என்ன?

சென்னை: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. போர் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்திய மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தூதரகம் மூலம் எடுக்கத் தொடங்கியது. ஆனால் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே தாயகம் திரும்பி இருக்கிறார்கள். உக்ரைனில் சுமார் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். மருத்துவம், ஏரோநேடிக் என்ஜினியரிங் போன்ற படிப்புகளை அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்து வருகிறார்கள். விடுதிகளிலும், … Read more

இந்தியர்களை அழைத்து வர மாற்று வழி என்ன என்பது குறித்து ஒன்றிய அரசு ஆலோசனை

டெல்லி: இந்தியர்களை அழைத்து வர மாற்று வழி என்ன என்பது குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனில் வான்வழி மூடப்பட்டுள்ளதால் ஒன்றிய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

டில்லி திரும்பிய ஏர் இந்தியா விமானம்| Dinamalar

புதுடில்லி: ரஷ்யா தாக்குதலை துவங்கிய நிலையில், உக்ரைன் வான்வெளி மூடப்பட்டது. இதனையடுத்து, அங்குள்ள இந்தியர்களை மீட்க சென்ற ஏர் இந்தியா விமானம் டில்லி திரும்பியது. உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் நமது நாட்டவர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்டு வரப்படுகின்றனர். டாடா நிறுவனம் வாங்கிய ஏர் இந்தியா மூலம், கோவிட் காலகட்டத்தில் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்கள் அழைத்து வர ‘வந்தே பாரத்’ திட்டம் மூலம் அழைத்து வரப்பட்டனர். தற்போது, உக்ரைனில் இருந்தும் இந்தியர்கள் அழைத்து … Read more

கச்சா எண்ணெய் விலை 102 டாலரை தொட்டது.. இந்தியா, பிரிட்டனுக்கு கழுத்தை நெரிக்கும் பிரச்சனை..!

உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவாக நிற்பதையும் தாண்டி, ரஷ்ய அதிபர் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அறிவிப்பு விடுத்த நிலையில், ரஷ்ய பாதுகாப்புப் படை துப்பாக்கி சுடு, பீரங்கி தாக்குதலைத் தாண்டி உக்ரைன் நாட்டின் கெய்வ், கார்கிவ் பகுதிகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலைத் துவங்கியுள்ளது. உக்ரைன்-க்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் போன்ற பெரும்பாலான வல்லரசு நாடுகள் ஒத்துழைப்பு கொடுக்கும் நிலையில் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் ரஷ்யா இந்தப் போரை 3 … Read more

''எடப்பாடிக்கு ஆன்ம பலம் இருக்குமானால்…'' – நாஞ்சில் சம்பத் சவால்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில், தி.மு.க – அ.தி.மு.க இடையே நடைபெற்ற அனல் பறக்கும் விவாதம், தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட சூழலிலும்கூட தகித்துக்கிடக்கிறது. இதையடுத்து தி.மு.க-வுக்கு எதிராக அ.தி.மு.க தொடுத்த கேள்வி – விமர்சனங்களுக்குப் பதில் விளக்கம் கேட்டு தி.மு.க ஆதரவுப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம்… ”தி.மு.க-வின் எட்டு மாத ஆட்சியில், புதிதாக எந்தத் திட்டத்தையும் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை’ என்கிறாரே எடப்பாடி பழனிசாமி?” ”என்ன சாதித்தார் என்று கேட்கின்ற எடப்பாடிக்கு நான் சொல்வது, தமிழ்நாட்டில் உள்ளாட்சி … Read more

ரஷ்யா அணுஆயுதத்தை லண்டன் மீது வீசினால் பிரித்தானியாவுக்கு எவ்வளவு பாதிப்பு? வெளியான வரைபடம்

ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடங்கி, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடான பிரித்தானியா மீது ரஷ்யா அதன் அணுஆயுதங்களை பயன்படுத்தினால் லண்டனில் ஏற்படும் பேரழிவை குறித்த தகவலை அணுஆயுத வரலாற்றாளர் அலெஸ் வெல்லெர்ஸ்டீன் வெளியிட்டுள்ளார். ரஷ்யா உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளை சுதந்திர நாடக அறிவித்ததை தொடர்ந்து, பலநாடுகளாலும் ரஷ்யா உக்ரைன் மீது தனது போரை துவங்கிவிட்டது என்ன குற்றம்சாட்டி வருகின்றனர். இதுவரை உக்ரைன் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களும் இடையிலான சண்டையாகவே  இருப்பதால் இது பனிப்போராகவே கருதப்படுகிறது. ஆனால் … Read more

கர்நாடக ஹிஜாப் போராட்டத்துக்கு இஸ்லாமிய மாணவர் அமைப்பு காரணம்! நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிஎப்ஐ அமைப்பினர் தலையீடு உள்ளதாகவும், அவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவே,  முஸ்லிம் மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் கல்லூரியில் போராட தொடங்கினர் என்று உடுப்பி கல்லூரி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணாக்கர்களிடையே ஏற்றத்தாழ்வு, சாதி மத வேறுபாடுகளை களையும் வகையில், சீருடை திட்டம் அமல் படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியவும் … Read more

நாடு முழுவதும் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது: உக்ரைன் அதிபர்

உக்ரைன் மீது ரஷியா ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தி வருவதாகவும், உக்ரைன் தங்களது இலக்கு இல்லை எனவும் புதின் அறிவித்திருந்தார். ஆனால் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில ரஷியா ராணுவம் விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இந்த நிலையில் தற்பாதுப்பை மேற்கொண்டு வரும் உக்ரைன், ரஷியாவின் ஐந்து விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. ரஷியா தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிர் ஜெலென்ஸ்கி … Read more

ரஷ்யா தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தகவல்

உக்ரைன்: ரஷ்யா தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு உரிய பதிலடி கொடுத்து வருவதாக, உக்ரைன் நாட்டின் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.