தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 22 பேர் கைது

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் சேவாபாரதி பகுதியை சேர்ந்தவர் சிவா. இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை துறைமுகத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை (வயது 60), சிவபாரதி (27), சவுந்தரராஜன் (34), நாகை நம்பியார் நகரை சேர்ந்த பிரகாஷ் (35), செல்வம் (45), அக்கரைபேட்டையை சேர்ந்த செல்வநாதன் (29), ரெத்தினசாமி (34), சந்திரபாடியை சேர்ந்த அய்யப்பன் (40), முருகேசன் (55) ஆகிய 9 மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று இரவு கச்சத்தீவு … Read more

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

மும்பை: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் இந்திய பங்கு சந்தையில் கடும் சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 428 புள்ளிகள் சரிந்துள்ளது. மேலும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 413 புள்ளிகள் சரிந்தது.

Bharatpe-வில் தொடரும் சர்ச்சைகள்.. நிதி முறைகேடு காரணமாக மாதுரி ஜெயின் பணி நீக்கம்!

நிதி முறைகேடு குற்றசாட்டின் பேரில் பாரத் பே நிறுவனத்தின் கட்டுப்பாட்டாளர் மாதுரி ஜெயின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வெளியான இடி செய்தியில், இவ்விஷயத்தினை அறிந்த இருவர் இதனை உறுதிபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 2018 முதல் 2.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த நிறுவனத்தின் நிதி பொறுப்பில் ஜெயின் இருந்து வந்தார். எலான் மஸ்க்-ன் புதிய கேர்ள் பிரண்ட் இவர்தான்.. 50 வயதில் செய்யும் வேலையா இது..! தொடர் சர்ச்சை யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற … Read more

Ukraine Russia Crisis: உக்ரைன் தலைநகரை தாக்கும் ரஷ்ய படைகள்… கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தொட்டது! Live Updates

கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தொட்டது! கச்சா எண்ணெய் ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது. தொடர்ந்து தாக்குதல் தொடரும் பட்சத்தில், கச்சா எண்ணெய் விலை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உக்ரைன் தலைநகரை தாக்க தொடங்கியது ரஷ்ய படைகள் உக்ரைன் – ரஷ்யா போர்ப் பதற்றம் … Read more

டென்னிஸ் வீராங்கனை மீது காதல் விபரீதம் – ஜெயிலுக்கு சென்ற இளைஞர்

பிரபல டென்னிஸ் வீராங்கனை எமா ரடுகானுவை காதலித்த 35 வயது இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை 19 வயதான ரடுகானு கடந்தாண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். பார்ப்பதற்கு ஆண்களை கவரும் வண்ணம் இருக்கும் அவரது தோற்றம் பலரையும் ரசிகர்களாக மாற்றியது.  இதனிடையே  35 வயது லாரி ஓட்டுனர் அம்ரித் மகர் என்பவர் ரடுகானுவை கடந்த 8 மாதமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். மேலும் … Read more

மேலும் 1 வாரம் மக்கள் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளை பார்க்கலாம் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழக அரசின் 3 அலங்கார ஊர்திகளை மேலும் 1 வாரம் பொதுமக்கள் பார்க்கலாம் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் கடந்த 26ம் ேததி நடந்த குடியரசு நாள் விழாவில் செய்தித் துறை சார்பில் விடுதலைப் போரில்  தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சுதந்திரப் போராட்ட  வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் மூன்று அலங்கார ஊர்திகளின்  அணிவகுப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள மக்கள்  கண்டுகளிக்கின்ற வகையில் முதல்வர் … Read more

ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை ஒமைக்ரானின் புதிய வடிவமும் தாக்க வாய்ப்பு: ஆய்வு தகவல்

லண்டன் : கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் 2019 டிசம்பர் மாதம் முதன் முதலாக வெளிப்பட்டது. தொடர்ந்து அது ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றங்களை அடைந்து வருகிறது. அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ந் தேதி உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் (பிஏ.1) கண்டறியப்பட்டு இன்றைக்கு அதுவும் உலகமெங்கும் பரவி உள்ளது. இந்த வைரசை கவலைக்குரிய மாறுபாடாக உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது. இந்த நிலையில் ஒமைக்ரானின் புதிய … Read more

உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்துமாறு ரஷியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்!!

ஜெனீவா : உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று ரஷியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டானியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த ரஷ்யா வாய்ப்பு தர வேண்டும் என்றும் ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர கூட்டத்தில் குட்டரஸ் தெரிவித்துள்ளார்.  

காஷ்மீரில் அமையுது சாரதா கோவில்| Dinamalar

சென்னை : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா கோவிலுக்கு செல்ல முடியாததால், இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில், புதிய சாரதா கோவில் கட்டப்பட உள்ளது. இந்திய – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் நதிக் கரையில், அன்னை சாரதாம்பாள் கோவில் உள்ளது. ‘சாரதா பீடம்’ என அழைக்கப்படும் இக்கோவில், 51 சக்தி பீடங்களில் ஒன்று.மிகப் பழமையான இக்கோவில் வளாகத்தில், மிகப்பெரிய வேத பாடசாலை இருந்தது. ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற … Read more

டாடா-வுக்கு மத்திய அரசு எதிர்ப்பு.. இல்கர் ஆய்சி நியமனத்தில் பிரச்சனை.. பிளான் பி தேவை..!

இந்திய அரசிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 69 வருடத்திற்குப் பின்பு மீண்டும் டாடா குழுமம் கைப்பற்றிய நிலையில், ஆரம்பம் முதல் பல மாற்றங்களை அதிரடியாகச் செய்து வந்தது. குறிப்பாக ஏர் இந்தியாவில் நீண்ட காலமாக முக்கியப் பிரச்சனையாக இருந்த வாடிக்கையாளர் சேவை, உணவு தரம், ஆன் டைம் விமானச் சேவை போன்றவற்றை மேம்படுத்தப் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில் ஏர் இந்தியாவைக் கைப்பற்றிப் பல வாரங்களாகப் புதிய சிஇஓ பெயரை அறிவிக்கக் காலதாமதம் ஆன … Read more