பிப்-24: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெங்களூரில் வனம் உருவாக்க பி.எம்.ஆர்.சி.எல்., விருப்பம்| Dinamalar

பெங்களூரு-ஜப்பானின், ‘மியாவாகி’ எனப்படும் அடர்வன காட்டை உருவாக்க பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டமிட்டுள்ளது.ஒரு காலத்தில், ‘பூங்கா நகர்’ என பெயர் பெற்ற பெங்களூரு நகர், தற்போது காங்கிரீட் காடாக மாறியுள்ளது. பசுமையை காண முடியவில்லை. இழந்த பசுமையை மீண்டும் கொண்டு வர, மாநகராட்சியும் பல நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கிடையில், நகரை பசுமையாக்குவதில், தன் பங்களிப்பை அளிக்க பி.எம்.ஆர்.சி.எல்., திட்டமிட்டுள்ளது. தனக்கு சொந்தமான, அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு, வனம் … Read more

கர்நாடக முதல்வர், அமைச்சர்கள் சம்பளம் 50% உயர்வு.. 2000 லிட்டர் பெட்ரோல் இலவசம்..!

கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தும் முக்கியமான மசோதா நிறைவேற்றப்பட்டது. தேசியக் கொடி குறித்துக் கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியதை எதிர்த்துக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா -வை பதவி நீக்கம் செய்யக் கோரி போராட்டத்தில் இறங்கிய நிலையில், 5வது நாளாகச் சட்டப்பேரவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் விவாதம் செய்யாமலேயே இரு முக்கிய மசோதாக்கள் கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுக் கூட்டம் நிறைவடைந்தது. 7வது சம்பள கமிஷன்: … Read more

2 மாதத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய அதிரடி ஆட்டக்காரர்

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின் போது ஜடேஜாவுக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சைப் பெற்று வந்ததால் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸிக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்கவில்லை. ஜடேஜா காயம் காரணமாக ஓய்வில் இருந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவிருக்கும் அவர் … Read more

விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்ற விவகாரம் : ராணுவ பாதுகாப்புடன் அமைச்சர் அஜய் மிஸ்ரா வாக்களிப்பு

லக்கிம்பூர் கேரி லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற விவகாரத்தில் தொடர்புடைஅய் அமைச்சர் அஜய் மிஸ்ரா ராணுவ பாதுகாப்புடன் வந்து வாக்களித்தார். ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ளது.  இன்று வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் லக்கிம்பூர் கேரி மாவட்டமும் ஒன்றாகும்.  இங்கு நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது 4 விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். இதில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் மத்திய இணை அமைச்சர் … Read more

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து அலெக்சாண்டர் ஸ்வெரேவ் நீக்கம்

மெக்சிகோ : ஜெர்மனியை சேர்ந்தவரும், தரவரிசையில் நம்பர் 3 இடத்தைப் பிடித்தவருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மெக்சிகோ ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்வெரேவ் பிரேசிலின் மார்சிலோ மெலோவுடன் இணைந்து விளையாடினார். அதில் ஸ்வெரேவ் ஜோடி தோல்வி அடைந்தது. டைபிரேக்கரின் போது ஸ்வெரேவ் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த ஸ்வெரேவ் நடுவர் காலை தாக்குவது போல் அவர் அமர்ந்திருந்த நாற்காலி மீது டென்னிஸ் பேட்டால் ஓங்கி அடித்தார். அவரது செயல் … Read more

இன்றைய மின் நிறுத்தம் | Dinamalar

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரைவெங்கட்டா நகர் துணை மின் நிலைய உயர் மின்னழுத்த பாதையில் கட்டுமான பணி: சாரம், காமராஜ் சாலை, லெனின் வீதி, சுந்தர மேஸ்திரி வீதி, ராஜய்யர் தோட்டம், கெங்கையம்மன் கோவில் வீதி, கன்னியர் வீதி , கிருஷ்ணசாமி தோட்டம், சக்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரைவெங்கட்டா நகர் துணை மின் நிலைய உயர் மின்னழுத்த … Read more

விரைவில் பீர் விலை தாறுமாறாக உயரும்.. என்ன காரணம் தெரியுமா..?!

வெயில் காலம் நெருங்கி வரும் வேளையில் இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் பீர் விற்பனை அதிகரிக்கும் நிலையில், பீர் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அதிகரிப்பதில் புதிய தடையை எதிர்கொண்டு உள்ளது. இதற்குக் காரணம் ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா.. ஆனால் அதுதான் உண்மை. விளாடிமிர் புடின் விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்யா ஏற்கனவே உக்ரைன் நாட்டின் இரு பகுதிகளை எவ்விதமான போர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் கைப்பற்றியுள்ள நிலையில், … Read more

லண்டனில் பிரபல நடிகை தீ விபத்தில் மரணம்

லண்டனில் பிரபல பிரித்தானிய நடிகை Anna Karen தனது வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கிழக்கு லண்டனில் Ilford பகுதியில் உள்ள Windsor சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில், பழம்பெரும் நடிகை Anna Karen-ன் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். அப்போது, வீட்டுக்குள் சென்று பார்த்த வீரர்கள் நடிகை Anna Karen-ஐ சடலமாக வெளியே கொண்டுவந்தனர். மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக … Read more

உயர்நீதிமன்ற நீதிபதி குறித்த சர்ச்சைக் கருத்து : கன்னட நடிகர் கைது 

பெங்களூரு டிவிட்டரில் உயர்நீதிமன்ற நீதிபதி குறித்த ஒரு சர்ச்சைப் பதிவை வெளியிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீட்சித் குறித்து கன்னட நடிகர் சேத்தன் குமார் டிவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.  கடந்த 14 ஆம் தேதி வெளியான இந்த பதிவு கடும் சர்ச்சையை உண்டாக்கியது.  இதையொட்டி பெங்களூரு காவல்துறையினர் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையொட்டி நடிகர் சேத்தன் குமார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடந்து … Read more