பிரித்தானியாவில் மாதவிடாயை பற்றி பேசி அசிங்கப்படுத்திய முதலாளி மீது பெண் வழக்கு..வெளியான தீர்ப்பு

பிரித்தானியாவில் அவசியம் இல்லாமல் வாடிக்கையாளரின் முன் மாதவிடாயை பற்றி பேசி சங்கடத்திற்கு உள்ளாக்கிய முதலாளியின் மீது பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியில் எம்பார்க் ஆன் ரா (Embark on Raw) என்ற செல்லப்பிராணிகளுக்கான உணவுக் கடையில் விற்பனையாளராக பணியாற்றுபர் லீ பெஸ்ட் (Leigh Best). 54 வயதாகும் இவர் திருமணமானவர். ஒருமுறை இவர் கடையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, அவருக்கும் அவரது முதலாளியான டேவிட் பிளெட்சர் (David Fletcher) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. … Read more

தமிழகத்தில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  23/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,47,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 62,547 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,40,86,016 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் ஒருவர் வெளி நாட்டில் இருந்து வந்துள்ளார்.  இதுவரை 34,47,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,993 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 2,153 பேர் குணம் அடைந்துள்ளனர். … Read more

புரோ கபடி லீக் – பாட்னா, டெல்லி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின

பெங்களூர்: 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடித்த பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதா, குஜராத்  ஜெயண்ட்ஸ், பெங்களூர் புல்ஸ், புனேரி பல்தான் ஆகியவை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. எலிமினேட்டர் சுற்றுகள் முடிவில் பாட்னா பைரேட்ஸ், உ.பி. யோதா, தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் பாட்னா பைரேட்சும், … Read more

செங்கல்பட்டு, பாலாறு மேம்பாலத்தில் நாளை முதல் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, பாலாறு மேம்பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு நாளை முதல் மீண்டும் அனுமதிக்கப்படவுள்ளது. பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தேசிய பங்கு சந்தை ஊழல் விவகாரம் கைதாகிறாரா சித்ரா ராமகிருஷ்ணா?| Dinamalar

தேசிய பங்கு சந்தையில் நடந்த பல்வேறு ஊழல் தொடர்பாக, அதன் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை, சி.பி.ஐ., அதிகாரிகள் இந்த வாரம் கைது செய்து விசாரணை நடத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.என்.எஸ்.சி., எனப்படும் தேசிய பங்கு சந்தையில் 2013 – 16 வரையிலான காலகட்டத்தில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா, 59. இவரது பதவி காலத்தில், ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தில் பல்வேறு … Read more

பண மோசடி வழக்கில் மராட்டிய மந்திரி நவாப் மாலிக் கைது

மும்பை, மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா மந்திரி  நவாப் மாலிக் , சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.  இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் நவாப் மாலிக் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், அவரை … Read more

ஜியோவின் 2 புதிய ஹாட் திட்டங்கள்.. 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் ஏராளமான சலுகைகள்!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக இருந்து வரும் ஜியோ, அவ்வப்போது சில புதிய திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும். அந்த வகையில் ஜியோ நிறுவனம் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளார்களை நீண்டகாலத்திற்கு தக்க வைத்துக் கொள்ள உதவும். அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவும். அதோடு ஜியோ பயனர்களுக்கும் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. 2 டாப் திட்டங்கள் இந்த புதிய திட்டங்கள் டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் பிரீமிய வசதிகளுடன் … Read more

வைப்பு தொகைக்கு 1,000% வட்டி… வீட்டுக்கு ரேஷன்; ஆசை காட்டி மும்பையில் ரூ.100 கோடி மோசடி!

அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தாலும், மக்கள் வட்டிக்கு ஆசைப்பட்டு போலி கம்பெனிகளிடம் பணம் கட்டி ஏமாறுவது மட்டும் குறையவே இல்லை. மும்பையில் அது போன்ற ஒரு மோசடியில் 25 ஆயிரம் பேர் தங்களது பணத்தை பறிகொடுத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். மும்பை போரிவலியைச் சேர்ந்தவர் கிஷோர் காக்டே. இவர் காக் எகனாமிக் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். … Read more

உக்ரைனில் இருந்து தூதர்களை வெளியேற்றியது ரஷ்யா! அதிகரிக்கும் பதற்றம்

 உக்ரைனில் உள்ள அனைத்து தூதரக ஊழியர்களையும் ரஷ்யா வெளியேற்றத் தொடங்கியுள்ளது. உக்ரைன் தலைநகர் கிய்வில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பிரதிநிதியை மேற்கோள் காட்டி TASS செய்தி நிறுவனம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைனின் Odessa நகரில் உள்ள தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் ஆகியவை ரஷ்யக் கொடிகள் அகற்றப்பட்ட நிலையில் காணப்பட்டன. காலை தூதரகத்தை விட்டு பல கார்கள் வெளியேறியதாக என Odessa நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு அருகில் பணியில் இருந்த உக்ரேனிய தேசிய காவலர் ஒருவர் … Read more

கோவையில் அனைத்து இடங்களிலும் ம நீ ம டெபாசிட் இழப்பு

கோவை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோவை மாநகராட்சி தேர்தலில் தாம் போட்டியிட்ட அனைத்து வார்டுகளிலும் டெபாசிட் இழந்துள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார்.  இங்கு திமுக தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் மக்கள் நீதி மய்யத்துக்குக் கிடைத்த வாக்குகளே என அப்போது கூறப்பட்டது.   திமுகவுக்குக் கிடைக்க வேண்டிய நடுநிலை வாக்குகளை ம நீ ம பெற்றதாகக் கருத்து இருந்தது. தற்போது … Read more